Saturday, October 8, 2011

தீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்

   
         புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
        பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான் வடித்த
        கவிதை- எண் 2  புலவர் சா இராமாநுசம்
     
       தனவானாய்  ஆவதற்குப்  பொருளை  ஈட்ட-இங்கே
          தனிமையெனும்  பெரும்கொடுமை  என்னை  வாட்ட
      கனமான  மனத்துடனே  அவரும்  சென்றார்-என்ன
          காரணமோ  இதுவரையில்  வாரா  நின்றார்
      தினம்தோறும்  நான்பெற்ற  இன்பம்  தன்னை-நல்
          திரைகாட்டும்  படம்போல  காட்டி  என்னை
      நினைவேநான்  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-சுடும்
          நெருப்பாகி  நாள்தோறும்  வாட்டு  கின்றாய்
     
      கொம்பில்லா  கொடியாக  என்னை  விட்டே-அந்த
          கோமகனும்  பொருள்தேடி  சென்ற  தொட்டே
      வெம்பியழும்  வேதனையைக்  கண்ட  பின்பா-மேலும்
          வேதனையை  தருவதென்ன  நல்லப்  பண்பா
      கம்பமில்லா  மின்விளக்காய்  விண்ணில்  தொங்கி-இரவின்
          காரிருளை  விரட்டிடுவாய்  ஒளியும்  பொங்கி
      அம்புலியே  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-நீயும்
          அனலாகி  எனையேனோ  வருத்து  கின்றாய்
     
      அன்றன்று  பூத்தமலர்  பறித்து  வந்தே-தீரா
          ஆசையுடன்  கூந்தலிலே  சூடத்  தந்தே
      என்றும்நான்  பிரியேனென  சொல்லி  சொல்லி-தினம்
          எனகன்னம்  சிவந்துவிட  கிள்ளி  கிள்ளி
      சென்றவர்தான்  இன்றுவரை  வரவே  யில்லை-ஏதும்
          செய்யவழி  தெரியாமல்  திகைப்பின்  எல்லை
      தென்றலே  நானிருத்தல்  அறிந்த  பின்னும்-ஏன்
          தீயாக  தீண்டியெனை  வருத்து  கின்றாய்
          
              புலவர் சா இராமாநுசம்

36 comments:

  1. பாடல் அருமை ஐயா

    ReplyDelete
  2. பொருள் ஈட்ட சென்றவன் திரும்பவில்லையே என்று நினைத்து வரும் கவிவரி பாடல் அருமை ஐயா

    தமிழ் மணம் முதல் ஒட்டு

    ReplyDelete
  3. பிரிவினையின் வலி கவிதை அழகாக சொல்லியிருக்கீறீர்கள் ஐயா...

    ReplyDelete
  4. /////
    அம்புலியே உனக்கென்ன தீங்கா செய்தேன்
    ////////
    அம்புலி யாருக்கும் தீங்கு செய்யாது...

    ஆனால் நாம் வேதனையில் இருக்கும் போது அது நெருப்பை உமிழும்...

    நாம் மகிர்ச்சியில் இருக்கும் போல அது அமுதை பொழியும்...

    அமபுலியை நாம் நம் மனநிலைக்கு மாற்றியமைக்கிறோம்...


    அழகிய உவமை...

    ReplyDelete
  5. தென்றலே நானிருத்தல் அறிந்த பின்னும்-ஏன்
    தீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்

    தென்றலே தீயாய் மாறி வருத்தும் பிரிவுத்துயர்
    தேனாய் கவிதை வரிகளாய் ...பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  6. நல்ல பாடல்...

    நல்ல கவிதை வரிகள்... ரசித்தேன் ஐயா...

    ReplyDelete
  7. பிரிவின் வலி சோகம் நிறைந்தது, வலியுடன் பாடல் அருமை!!!!!

    ReplyDelete
  8. பிரிவின் வலியைப் பாடும் கவிதைவரிகள் சிறப்பு!

    ReplyDelete
  9. பிரிவின் ஏக்கத்தை மிகவும் சிறப்பாகக் கூறியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  10. எனக்கு நல்ல கவிதைகளை ரசிக்கமட்டுமே தெரியும் ஐயா. அதற்கு அப்பால் இவைபற்றிய அறிவு அவ்வளவாக இல்லை. இது எந்தவகையை சேர்ந்த பாடல் ஐயா?

    ReplyDelete
  11. நினைவேநான் உனக்கென்ன தீங்கா செய்தேன்-சுடும்
    நெருப்பாகி நாள்தோறும் வாட்டு கின்றாய்
    //

    சுகம் தரும் நினைவலைகளானாலும்... இன்று இல்லா கொடுமை .. பிரிவின் வலிகள் கவிதையில் இருக்கிறது.. வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  12. கவிதை அருமை அய்யா.
    கடைசி பத்தி கவிதை ... பிரிவின் வலியை சிறப்பாய் பிரதிபலிக்கிறது.

    ReplyDelete
  13. பணி நிமித்தம் பிரிந்து வாழும் வலி
    கவியில் தெரிகிறது!
    சிறப்பாய் உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  14. //அன்றன்று பூத்தமலர் பறித்து வந்தே-தீரா
    ஆசையுடன் கூந்தலிலே சூடத் தந்தே
    என்றும்நான் பிரியேனென சொல்லி சொல்லி-தினம்
    எனகன்னம் சிவந்துவிட கிள்ளி கிள்ளி
    சென்றவர்தான் இன்றுவரை வரவே யில்லை//

    பிரிவின் வலியை ஆழமாக சொல்லிநிற்கின்ற வரிகள் ஐயா.

    தங்கள் கவிப்பா(ட)ல் தொடரட்டும்

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  15. சூப்பர் வரிகள்

    ReplyDelete
  16. அருமை..அண்ணே பிரிவின் வலி கவிதையாய்!

    ReplyDelete
  17. M.R said

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. M.R said..

    பொருள் ஈட்ட சென்றவன் திரும்பவில்லையே என்று நினைத்து வரும் கவிவரி பாடல் அருமை ஐயா

    தமிழ் மணம் முதல் ஒட்டு

    தங்களின் இரசிகத்தன்மைகும்
    ஓட்டளிப்புக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. கவிதை வீதி... // சௌந்தர் // said..

    // பிரிவினையின் வலி கவிதை அழகாக சொல்லியிருக்கீறீர்கள் ஐயா//

    நன்றி நண்பரே!
    இடையில் சில நாட்கள் காணவில்லையே
    என கவலைப் பட்டேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. நண்டு @நொரண்டு -ஈரோடு said.

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. கவிதை வீதி... // சௌந்தர் // said

    அன்பின் சகோ!

    அகவிலக்கணத்தில் தலைவனைப் பிரிந்த

    தலைவி இவ்வாறு, அம்புலி, தென்றல், நினைவுகள்
    ஆகியன கண்டும் கொண்டும் பாடுவது மரபு என்ற
    அடிப்படையயில் அமைந்த பாடல் இது
    தங்களின் கருத்துரையும் அதைதான்
    குறிப்பிடுகிறது. நன்றி!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. இராஜராஜேஸ்வரி said..


    // தென்றலே தீயாய் மாறி வருத்தும் பிரிவுத்துயர்
    தேனாய் கவிதை வரிகளாய் ...பாராட்டுக்கள் ஐயா.//

    தங்களின் இரசிகத்தன்மைகும்
    பாராட்டுக்களுக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. வெங்கட் நாகராஜ் said.

    // நல்ல கவிதை வரிகள்... ரசித்தேன் ஐயா...//

    நன்றி!

    தங்களின் இரசிகத்தன்மைக்கும்
    பாராட்டுக்களுக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. MANO நாஞ்சில் மனோ said

    // பிரிவின் வலி சோகம் நிறைந்தது, வலியுடன் பாடல் அருமை!!//

    நன்றி!

    தங்களின் இரசிகத்தன்மைக்கும்
    பாராட்டுக்களுக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. தனிமரம் said..

    நன்றி!

    தங்களின் இரசிகத்தன்மைக்கும்
    பாராட்டுக்களுக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. அம்பலத்தார் said.

    // பிரிவின் ஏக்கத்தை மிகவும் சிறப்பாகக் கூறியிருக்கிறீர்கள்//


    நன்றி!

    தங்களின் இரசிகத்தன்மைக்கும்
    பாராட்டுக்களுக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. அம்பலத்தார் said.

    நன்றி அம்பலத்தார் அவர்களே!
    இப் பாடல் ஆசிரியர் பாவினத்தை சார்ந்தது

    ஆசிரியர் விருத்தம் என்று சொல்வார்கள்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. மாய உலகம் said.

    // சுகம் தரும் நினைவலைகளானாலும்... இன்று இல்லா கொடுமை .. பிரிவின் வலிகள் கவிதையில் இருக்கிறது..//

    இப்பாடலின் கருப் பொருள் அகப் பொருள்
    இலக்கணத்திற்கு உட்பட்டது
    நன்றி மாய!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. MUTHARASU said.


    நன்றி!

    தங்களின் இரசிகத்தன்மைக்கும்
    பாராட்டுக்களுக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. கோகுல் said..

    நன்றி!

    தங்களின் இரசிகத்தன்மைக்கும்
    பாராட்டுக்களுக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. ''...கம்பமில்லா மின்விளக்காய் விண்ணில் தொங்கி-இரவின்
    காரிருளை விரட்டிடுவாய் ஒளியும் பொங்கி
    அம்புலியே உனக்கென்ன தீங்கா செய்தேன்-நீயும்
    அனலாகி எனையேனோ வருத்து கின்றாய்...''
    மிக மிகச் சிறப்பான வரிகள். திரும்பத் திரும்ப வாசிக்க மனம் விரும்புகிறது. இப்படி எழுத என் மனம் ஏங்குகிறது. இறை அருள் கிட்டட்டும். மகிழ்ச்சி.
    வேதா. இலங்காதிலகம்.
    http//www. kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  32. சம்பத்குமார் said

    // பிரிவின் வலியை ஆழமாக சொல்லிநிற்கின்ற வரிகள் ஐயா.

    தங்கள் கவிப்பா(ட)ல் தொடரட்டும்//


    நன்றி!

    தங்களின் இரசிகத்தன்மைக்கும்
    பாராட்டுக்களுக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. வைரை சதிஷ் sai

    நன்றி!

    தங்களின் இரசிகத்தன்மைக்கும்
    பாராட்டுக்களுக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. விக்கியுலகம் said.

    நன்றி!

    தங்களின் இரசிகத்தன்மைக்கும்
    பாராட்டுக்களுக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. kavithai (kovaikkavi) said



    // கம்பமில்லா மின்விளக்காய் விண்ணில் தொங்கி-இரவின்
    காரிருளை விரட்டிடுவாய் ஒளியும் பொங்கி
    அம்புலியே உனக்கென்ன தீங்கா செய்தேன்-நீயும்

    புலவர் சா இராமாநுசம்
    அனலாகி எனையேனோ வருத்து கின்றாய்...''
    மிக மிகச் சிறப்பான வரிகள். திரும்பத் திரும்ப வாசிக்க மனம் விரும்புகிறது. இப்படி எழுத என் மனம் ஏங்குகிறது. இறை அருள் கிட்டட்டும். மகிழ்ச்சி.//
    வேதா. இலங்காதிலகம்.

    அன்பின் இனிய சகோதரி!
    தங்களின் கவிதைகளும் மிகவும்
    சிறப்பாகத் தானே உள்ளன
    தங்களின் மனங்கனிந்த பாராட்டுக்கு
    நன்றி!

    ReplyDelete
  36. ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete