புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான் வடித்த
கவிதை- எண் 2 புலவர் சா இராமாநுசம்
தனவானாய் ஆவதற்குப் பொருளை ஈட்ட-இங்கே
தனிமையெனும் பெரும்கொடுமை என்னை வாட்ட
கனமான மனத்துடனே அவரும் சென்றார்-என்ன
காரணமோ இதுவரையில் வாரா நின்றார்
தினம்தோறும் நான்பெற்ற இன்பம் தன்னை-நல்
திரைகாட்டும் படம்போல காட்டி என்னை
நினைவேநான் உனக்கென்ன தீங்கா செய்தேன்-சுடும்
நெருப்பாகி நாள்தோறும் வாட்டு கின்றாய்
கொம்பில்லா கொடியாக என்னை விட்டே-அந்த
கோமகனும் பொருள்தேடி சென்ற தொட்டே
வெம்பியழும் வேதனையைக் கண்ட பின்பா-மேலும்
வேதனையை தருவதென்ன நல்லப் பண்பா
கம்பமில்லா மின்விளக்காய் விண்ணில் தொங்கி-இரவின்
காரிருளை விரட்டிடுவாய் ஒளியும் பொங்கி
அம்புலியே உனக்கென்ன தீங்கா செய்தேன்-நீயும்
அனலாகி எனையேனோ வருத்து கின்றாய்
அன்றன்று பூத்தமலர் பறித்து வந்தே-தீரா
ஆசையுடன் கூந்தலிலே சூடத் தந்தே
என்றும்நான் பிரியேனென சொல்லி சொல்லி-தினம்
எனகன்னம் சிவந்துவிட கிள்ளி கிள்ளி
சென்றவர்தான் இன்றுவரை வரவே யில்லை-ஏதும்
செய்யவழி தெரியாமல் திகைப்பின் எல்லை
தென்றலே நானிருத்தல் அறிந்த பின்னும்-ஏன்
தீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்
புலவர் சா இராமாநுசம்
பாடல் அருமை ஐயா
ReplyDeleteபொருள் ஈட்ட சென்றவன் திரும்பவில்லையே என்று நினைத்து வரும் கவிவரி பாடல் அருமை ஐயா
ReplyDeleteதமிழ் மணம் முதல் ஒட்டு
பிரிவினையின் வலி கவிதை அழகாக சொல்லியிருக்கீறீர்கள் ஐயா...
ReplyDelete/////
ReplyDeleteஅம்புலியே உனக்கென்ன தீங்கா செய்தேன்
////////
அம்புலி யாருக்கும் தீங்கு செய்யாது...
ஆனால் நாம் வேதனையில் இருக்கும் போது அது நெருப்பை உமிழும்...
நாம் மகிர்ச்சியில் இருக்கும் போல அது அமுதை பொழியும்...
அமபுலியை நாம் நம் மனநிலைக்கு மாற்றியமைக்கிறோம்...
அழகிய உவமை...
தென்றலே நானிருத்தல் அறிந்த பின்னும்-ஏன்
ReplyDeleteதீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்
தென்றலே தீயாய் மாறி வருத்தும் பிரிவுத்துயர்
தேனாய் கவிதை வரிகளாய் ...பாராட்டுக்கள் ஐயா.
நல்ல பாடல்...
ReplyDeleteநல்ல கவிதை வரிகள்... ரசித்தேன் ஐயா...
பிரிவின் வலி சோகம் நிறைந்தது, வலியுடன் பாடல் அருமை!!!!!
ReplyDeleteபிரிவின் வலியைப் பாடும் கவிதைவரிகள் சிறப்பு!
ReplyDeleteபிரிவின் ஏக்கத்தை மிகவும் சிறப்பாகக் கூறியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஎனக்கு நல்ல கவிதைகளை ரசிக்கமட்டுமே தெரியும் ஐயா. அதற்கு அப்பால் இவைபற்றிய அறிவு அவ்வளவாக இல்லை. இது எந்தவகையை சேர்ந்த பாடல் ஐயா?
ReplyDeleteநினைவேநான் உனக்கென்ன தீங்கா செய்தேன்-சுடும்
ReplyDeleteநெருப்பாகி நாள்தோறும் வாட்டு கின்றாய்
//
சுகம் தரும் நினைவலைகளானாலும்... இன்று இல்லா கொடுமை .. பிரிவின் வலிகள் கவிதையில் இருக்கிறது.. வாழ்த்துக்கள் சகோ.
கவிதை அருமை அய்யா.
ReplyDeleteகடைசி பத்தி கவிதை ... பிரிவின் வலியை சிறப்பாய் பிரதிபலிக்கிறது.
பணி நிமித்தம் பிரிந்து வாழும் வலி
ReplyDeleteகவியில் தெரிகிறது!
சிறப்பாய் உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்!
//அன்றன்று பூத்தமலர் பறித்து வந்தே-தீரா
ReplyDeleteஆசையுடன் கூந்தலிலே சூடத் தந்தே
என்றும்நான் பிரியேனென சொல்லி சொல்லி-தினம்
எனகன்னம் சிவந்துவிட கிள்ளி கிள்ளி
சென்றவர்தான் இன்றுவரை வரவே யில்லை//
பிரிவின் வலியை ஆழமாக சொல்லிநிற்கின்ற வரிகள் ஐயா.
தங்கள் கவிப்பா(ட)ல் தொடரட்டும்
நன்றியுடன்
சம்பத்குமார்
சூப்பர் வரிகள்
ReplyDeleteஅருமை..அண்ணே பிரிவின் வலி கவிதையாய்!
ReplyDeleteM.R said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
M.R said..
ReplyDeleteபொருள் ஈட்ட சென்றவன் திரும்பவில்லையே என்று நினைத்து வரும் கவிவரி பாடல் அருமை ஐயா
தமிழ் மணம் முதல் ஒட்டு
தங்களின் இரசிகத்தன்மைகும்
ஓட்டளிப்புக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
கவிதை வீதி... // சௌந்தர் // said..
ReplyDelete// பிரிவினையின் வலி கவிதை அழகாக சொல்லியிருக்கீறீர்கள் ஐயா//
நன்றி நண்பரே!
இடையில் சில நாட்கள் காணவில்லையே
என கவலைப் பட்டேன்
புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
கவிதை வீதி... // சௌந்தர் // said
ReplyDeleteஅன்பின் சகோ!
அகவிலக்கணத்தில் தலைவனைப் பிரிந்த
தலைவி இவ்வாறு, அம்புலி, தென்றல், நினைவுகள்
ஆகியன கண்டும் கொண்டும் பாடுவது மரபு என்ற
அடிப்படையயில் அமைந்த பாடல் இது
தங்களின் கருத்துரையும் அதைதான்
குறிப்பிடுகிறது. நன்றி!
புலவர் சா இராமாநுசம்
இராஜராஜேஸ்வரி said..
ReplyDelete// தென்றலே தீயாய் மாறி வருத்தும் பிரிவுத்துயர்
தேனாய் கவிதை வரிகளாய் ...பாராட்டுக்கள் ஐயா.//
தங்களின் இரசிகத்தன்மைகும்
பாராட்டுக்களுக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said.
ReplyDelete// நல்ல கவிதை வரிகள்... ரசித்தேன் ஐயா...//
நன்றி!
தங்களின் இரசிகத்தன்மைக்கும்
பாராட்டுக்களுக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said
ReplyDelete// பிரிவின் வலி சோகம் நிறைந்தது, வலியுடன் பாடல் அருமை!!//
நன்றி!
தங்களின் இரசிகத்தன்மைக்கும்
பாராட்டுக்களுக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தனிமரம் said..
ReplyDeleteநன்றி!
தங்களின் இரசிகத்தன்மைக்கும்
பாராட்டுக்களுக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அம்பலத்தார் said.
ReplyDelete// பிரிவின் ஏக்கத்தை மிகவும் சிறப்பாகக் கூறியிருக்கிறீர்கள்//
நன்றி!
தங்களின் இரசிகத்தன்மைக்கும்
பாராட்டுக்களுக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அம்பலத்தார் said.
ReplyDeleteநன்றி அம்பலத்தார் அவர்களே!
இப் பாடல் ஆசிரியர் பாவினத்தை சார்ந்தது
ஆசிரியர் விருத்தம் என்று சொல்வார்கள்
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said.
ReplyDelete// சுகம் தரும் நினைவலைகளானாலும்... இன்று இல்லா கொடுமை .. பிரிவின் வலிகள் கவிதையில் இருக்கிறது..//
இப்பாடலின் கருப் பொருள் அகப் பொருள்
இலக்கணத்திற்கு உட்பட்டது
நன்றி மாய!
புலவர் சா இராமாநுசம்
MUTHARASU said.
ReplyDeleteநன்றி!
தங்களின் இரசிகத்தன்மைக்கும்
பாராட்டுக்களுக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கோகுல் said..
ReplyDeleteநன்றி!
தங்களின் இரசிகத்தன்மைக்கும்
பாராட்டுக்களுக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
''...கம்பமில்லா மின்விளக்காய் விண்ணில் தொங்கி-இரவின்
ReplyDeleteகாரிருளை விரட்டிடுவாய் ஒளியும் பொங்கி
அம்புலியே உனக்கென்ன தீங்கா செய்தேன்-நீயும்
அனலாகி எனையேனோ வருத்து கின்றாய்...''
மிக மிகச் சிறப்பான வரிகள். திரும்பத் திரும்ப வாசிக்க மனம் விரும்புகிறது. இப்படி எழுத என் மனம் ஏங்குகிறது. இறை அருள் கிட்டட்டும். மகிழ்ச்சி.
வேதா. இலங்காதிலகம்.
http//www. kovaikkavi.wordpress.com
சம்பத்குமார் said
ReplyDelete// பிரிவின் வலியை ஆழமாக சொல்லிநிற்கின்ற வரிகள் ஐயா.
தங்கள் கவிப்பா(ட)ல் தொடரட்டும்//
நன்றி!
தங்களின் இரசிகத்தன்மைக்கும்
பாராட்டுக்களுக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வைரை சதிஷ் sai
ReplyDeleteநன்றி!
தங்களின் இரசிகத்தன்மைக்கும்
பாராட்டுக்களுக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
விக்கியுலகம் said.
ReplyDeleteநன்றி!
தங்களின் இரசிகத்தன்மைக்கும்
பாராட்டுக்களுக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
kavithai (kovaikkavi) said
ReplyDelete// கம்பமில்லா மின்விளக்காய் விண்ணில் தொங்கி-இரவின்
காரிருளை விரட்டிடுவாய் ஒளியும் பொங்கி
அம்புலியே உனக்கென்ன தீங்கா செய்தேன்-நீயும்
புலவர் சா இராமாநுசம்
அனலாகி எனையேனோ வருத்து கின்றாய்...''
மிக மிகச் சிறப்பான வரிகள். திரும்பத் திரும்ப வாசிக்க மனம் விரும்புகிறது. இப்படி எழுத என் மனம் ஏங்குகிறது. இறை அருள் கிட்டட்டும். மகிழ்ச்சி.//
வேதா. இலங்காதிலகம்.
அன்பின் இனிய சகோதரி!
தங்களின் கவிதைகளும் மிகவும்
சிறப்பாகத் தானே உள்ளன
தங்களின் மனங்கனிந்த பாராட்டுக்கு
நன்றி!
ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்
ReplyDelete