Thursday, October 6, 2011

புலம்பெயர் ஈழத் தமிழர்களே



     புலம்பெயர் ஈழத் தமிழர்களே-உங்கள்
        போக்கில் வேண்டும் மாற்றங்களே
     நிலவிட வேண்டும் ஒற்றுமையே-உடன்
        நீங்கிட வேண்டும் வேற்றுமையே
     வலைதனில் காணும் கருத்துகளே-கவிதை
        வடித்திட காரணம் பொறுத்திடுக
     நிலைதனை தெளிவாய் அறிவீரே-நீர்
        நிச்சியம் ஈழம் பெறுவீரே

     இதுவரை நடந்ததை எண்ணாதீர்-கடந்த
        எதையும் பெரிது பண்ணாதீர்
     புதுவழி காணல் ஒன்றென்றே-அறப்
        போரினை தொடங்குவீர் நீரின்றே
     அதுவரை  நடக்கும பேயாட்டம்-சிங்கள
        ஆணவ நாய்களின் வாலாட்டம்
     எதுவரை இந்தியா கைகொடுக்கும்-அதை
         எதிர் வரும் காலம் காண்பிக்கும்

      வஞ்சக சிங்களர் சொயலாலே-உங்கள்
         வாழ்வில் வீசிய புய லாலே
      தஞ்சம் தேடி உலக கெங்கும்-இன்றே
         தங்கிப் பலரே அங்கங் கும்
      பஞ்சம் இன்றி வாழ் கின்றீர்-பெரும்
         பட்டம் பதவி சூழ் கின்றீர
      நெஞ்சில் நிம்மதி ஒரு நாளும்-ஈழ
         நினைவால் வாரா துயர் மூளும்

      பிறந்த மண்ணை மறப் பீரா- விட்டுப்
         பிரிந்த உறவை  மறப் பீரா
      திறந்த வெளியில் முள் வேலி-அங்கே
         தேம்பும் மக்களை மறப்பீரா
      இறந்த காலத்தை மறந் திடுவீர்-தனி
          ஈழம் காண முனைந் திடுவீர்
      சிறந்த முடிவை எடுப் பீரே-என
          செப்பினேன் வேண்டி முடிப் பீரே
                            புலவர் சா இராமாநுசம்

      

38 comments:

  1. நல்ல கவிதை ஜயா

    ReplyDelete
  2. அருமையான அறைகூவல்
    காலமுணர்தலும்ம் நிலையுணர்தலும்
    தன்னம்ப்பிக்கை தளராது இருத்தலும்
    தாய் மண் மீது கொண்ட பாசம்
    தனியாது இருத்தலுமே இப்போதைய
    தேவை என்பதை மிகத் தெளிவாக
    உணர்த்திப்போகுது உங்கள் பதிவு
    தொடர வாழ்த்துக்கள் த.ம 2

    ReplyDelete
  3. K.s.s.Rajh said


    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. Ramani said..

    ஆம் சகோ!
    தங்கள் கருத்தின் அடிப்படையில் தான்
    இக் கவிதை எழுதப்பட்டது
    வலை தனில் வருகின்ற சில கருத்து
    மாறுபாடுகளே காரணம்!
    விரிவான கருத்துரை வழங்கினீர்
    நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. நண்டு @நொரண்டு -ஈரோடு said..

    புள்ளி வைத்த ஓர் எழுத்தோடு
    முடித்துக் கொள்வது
    சிக்கனமா சுயநலமா..?
    விவாதம் தேவை!

    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. புலம்பெயர்ந்தார்களா? பூர்வகுடிகளா?

    ReplyDelete
  7. தனி
    ஈழம் காண முனைந் திடுவீர்
    சிறந்த முடிவை எடுப் பீரே-என
    செப்பினேன் வேண்டி முடிப் பீரே//

    சாத்தியமாக முயற்சியும், பிரார்த்தனையும் கைகூடட்டும்...

    ReplyDelete
  8. suryajeeva said.

    கருத்து வேறுபாடு எங்கிருந்தாலும்
    களையப்பட வேண்டும் சகோ!
    தங்கள் வினாவிலும் பொருள்
    உள்ளது நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. நீண்ட புலம்பெயர் உறவுகளின் நிலையினை தீர்க்கமாக ஆராய்ந்து அழகு தமிழில் ஓற்றுமையை வேண்டிப் படியிருக்கும் இனிய கவிதை ஐயா வாழ்த்துக்கள் எங்கள் குரலையும் பதிவு செய்ததற்கு!

    ReplyDelete
  10. தனிமரம் said.

    சகோ
    என் கனவும் நினைவும் என்றுமே
    தனி ஈழம் தான்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. பிறந்த மண்ணை மறப் பீரா- விட்டுப்
    பிரிந்த உறவை மறப் பீரா


    மறக்க முடியுமா புலவரே..

    ReplyDelete
  12. சூப்பர் கவிதை

    நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க

    பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

    ReplyDelete
  13. சரியான சமயத்தில் பகிர்ந்த கவிதை....

    ReplyDelete
  14. முனைவர்.இரா.குணசீலன் said..


    மறக்க இயலாது !
    மறக்கவும் கூடாது முனைவரே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. வைரை சதிஷ் said

    நன்றி!அன்ப!

    வழக்கம் போல் வருவேன்
    சற்று முன் பின்!
    வயதாகி விட்டதல்லவா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. தமிழ்வாசி - Prakash said.

    நன்றி சகோ!

    சில நாட்களாக வலைகளைப் படிக்கும் போது
    ஏற்பட்ட உறுத்தல்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. "யாதும் ஊரே யாவரும் கேளீர்"
    "பெற்றத் தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ யாவினும் நனி சிறந்தனவே!"
    கவலை வேண்டாம்... அருமை சகோதரர்களே! காலமும் மாறும் காட்சியும் மாறும்.
    நிச்சயம் விடியும். இந்தப் பெருந்துயரும் அத்தோடு முடியும்.

    நல்லதொரு கவிதையை அருமருந்தாக தந்துள்ளீர்கள் ஐயா!

    ReplyDelete
  18. எங்கள் தமிழ் மக்கள்மீது தாங்கள் கொண்டுள்ள பற்றை என்னவென்று சொல்ல .தங்கள் ஒவ்வொரு கவிதையிலும் இதன் உணர்வு நெஞ்சை நெகிழவைத்துச் செல்கின்றது .மிக்க நன்றி ஐயா தேசப்பற்று நிறைந்த கவிதைப் பகிர்வுக்கு .இந்த மகளை மறந்துவிட்டீர்களா ?.......தங்கள் வருகையைக் காண எப்போதும் ஆவலுடன் இருக்கின்றேன் .முடிந்தால் வாருங்கள் .

    ReplyDelete
  19. நம்பிக்கை தரும் வரிகள் நன்றி அய்யா, ஈழத்தில் சிந்தப்பட்ட ரத்தத்திற்கும், அந்த எக்கத்திர்க்கும் நிச்சயம் விடிவு உண்டு...

    ReplyDelete
  20. மிக மிக அருமையான கவிதை ஐயா! இக்கவிதைக்காக எனது விஷேட நன்றிகள்!

    ReplyDelete
  21. தமிழ் விரும்பி said..

    நன்றி தமிழ் விரும்பி!
    வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. அம்பாளடியாள் said...

    அன்புச் சகோதரி!நானும் தமிழன் தானே
    ஈழமக்கள் அனைவரும்
    என உறவுகளே!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. MANO நாஞ்சில் மனோ said...

    நன்றி நாஞ்சில் மனோ!
    விடிவு வரும்!வரவேண்டும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. MANO நாஞ்சில் மனோ said.

    ஓட்டளிப்புக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. Powder Star - Dr. ஐடியாமணி said

    நன்றி சகோ!

    சில நாட்களாக வலைகளைப் படிக்கும் போது
    ஏற்பட்ட உறுத்தல்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. நல்ல கவிதை ஐயா,நம்பிக்கை பழிக்கும் ஈழம் பிறக்கும்

    ReplyDelete
  27. நல்லதோர் இனிய கவிதை...சிந்தனை வரிகள்...வெகு சிறப்பாய்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  28. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  29. விஜயன் said

    நன்றி !விஜயன்
    விடிவு வரும்!வரவேண்டும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. ரெவெரி said.

    நன்றி !நண்ப!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. சென்னை பித்தன் said..


    நன்றி !ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. பிறந்த மண்ணை மறப் பீரா- விட்டுப்
    பிரிந்த உறவை மறப் பீரா

    விடிவு வர பிரார்த்திப்போம்

    ReplyDelete
  33. உணர்வுகளை
    தட்டி எழுப்பும் கவிதை.
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  34. இனிய இரவு வணக்கம் ஐயா, வேற்றுமை நீங்கி ஒற்றுமையுடன் உலகத் தமிழர்கள் செயற்பட்டால் அதற்கான பலன் விரைவில் கிட்டும் என்பதனை உங்களின் இக் கவிதை அழுத்தமாகவும், ஒரு அறை கூவலாகவும் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  35. புதிய அம்மன் பக்திப் பாடலுடன் தங்கள் மகளின் உருவப் படம் .வாருங்கள் ஐயா வாழ்த்துச் சொல்ல .

    ReplyDelete
  36. வணக்கமையா இன்றய  உங்கள் கவிதைக்காக எனது மனமார்ந்த நன்றிகளையா.. இக்கவிதையின் படியே நடப்போமென உறுதி கூறுகின்றேன்..!!

    ReplyDelete