காதலோடு என்னருகே நெருங்கி நின்றாய்-ஏன்
கவிப்பெண்ணே கண்டவுடன் பயந்துச் சென்றாய்
மாதரசி மனவானில் தேடுயொன்றா-நீ
மறைந்தாயா அறியேனே இதும்நன்றா
பேதமது நம்மிடையே வருதல் வேண்டா-என்
பேரன்பில் இனிமேலும் ஐயம்உண்டா
ஆதலினால் அன்பேநீ ஓடிவருவாய்-என்
அழைப்புக்கு செவிசாய்த்து நாடிவருவாய்
கற்றதமிழ் கைகொடுக்கத் தினமுமொன்றே-நான்
கவிபாடி என்வலையில் தரவும்நன்றே
உற்றதுணை நீதானே மறந்தாபோனாய்-நெஞ்சம்
உற்றதுயர் அறிந்துமா பறந்தேபோனாய்
குற்றமென்ன கண்டாயா கூறுப்பெண்ணே-என்
குறைகண்டு நீக்கிடவும் கவிதைப்பெண்ணே
செற்றமது வேண்டாவே என்பாலென்றும்-நல்
செம்மொழியே துணையாக இருப்பாயென்றும்
உண்மைமிகு உறவுகளைத் தேடித்தந்தாய்-இவ்
உலகமெனைப் பாராட்ட ஓடிவந்தாய்
தொண்மைமிகு தனித்தமிழே வருவாயாக-உன்னை
தினம்பாட நல்வாய்ப்பு தருவாயாக
தண்மைமிகு தென்றலென தழுவநீயே-நெஞ்நில்
தவழ்கின்ற மழலையென வருவாய்தாயே
திண்ணமுற என்வலையில் எழுதநானே-என்றும்
தெவிட்டாது இனிக்கின்ற கொம்புத்தேனே
புலவர் சா இராமாநுசம்
கற்றதமிழ் கைகொடுக்கத் தினமுமொன்றே-நான்
ReplyDeleteகவிபாடி என்வலையில் தரவும்நன்றே//
நன்றாக கவியை எங்களுக்கு தந்துகொண்டுதானிருக்கிறீர்கள் ஐயா
வழக்கம்போல தமிழ்தேன் கவிதை கலக்கல் ஐயா!
ReplyDeleteநல்ல கவிதை புலவரே.
ReplyDeleteஐயா!
ReplyDeleteதமிழ் எனும் கொம்புத்தேன்
அமுதமாய் இனிக்கிறது..
அருமை.. நன்றி..
தெவிட்டாத தித்திப்பு உங்கள் கவிதையில்....
ReplyDeleteநல்லதோர் கவிதைக்கு உங்களுக்கு பூங்கொத்து!
கொம்புத்தேன் ரொம்ப இனிமையாக இருக்கிறது ஐயா...
ReplyDeleteமாய உலகம் said...
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said.
ReplyDeleteநன்றி மாய!
புலவர் சா இராமாநுசம்
வைரை சதிஷ் said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
தமிழ் விரும்பி said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
காந்தி பனங்கூர் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
தேன் தேன்
ReplyDeleteதேனே தான்!
அருமை.
ReplyDeleteஉங்கள் பாடல்கள் குறித்த இலக்கண தகவல்கள் அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்... இப்பவாவது தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்ளலாம் அல்லவா?
ReplyDeleteமிகவும் அன்பும் அபிமானமும் உள்ளவர்களிடம்தான்
ReplyDeleteகுழந்தையும் கவிதையும்
கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும்
நாம்பொய் கோபம் கொண்டால் கூட
உடன் மடியில் வந்து சாய்ந்துவிடும்
இப்போது சாய்ந்துள்ளதைப்போல
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள் த.ம 5
வந்"தேன்"
ReplyDeleteவாசித்"தேன்"
இல்லை இல்லை
சுவைத்"தேன்"
அத்தனையும் "தேன்"
சத்ரியன் said.
ReplyDeleteவந்தேன் வந்தேன் என்று
வருவீர் அறிவேன் நன்று
தந்தேன் நானும் ஒன்று
தனய நன்றியாம் இன்று
புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said.
ReplyDeletehttp://tamilparks.50webs.com/learn_tamil/index.html
நண்பரே
மேலே குறிப்பிட்டுள்ள வலை தளம்
சொன்றால் பாவிலக்கணம் பற்றி அனைத்தும்
அறிந்து கொள்ளலாம்
திரு,தமிழநம்பி அவர்கள் மிக அழகாக
தெளிவாக எழுதியுள்ளார்
தங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டு
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Ramani said..
ReplyDeleteவாராது வந்த மாமணியே-எனை
வாழ்த்திய என்னுடை இரமணியே
சீராய் ஊட்டி வளர்த்தீரே-என்
சிந்தையில் நிலையென நிலைத்தீரே
ஊரால் உடலால் தனியேனும்-அன்பு
உளத்தால் என்றும் ஒன்றானோம்
யாரால் பிரித்திட இயலாதே-கல்லில்
எழுதிய எழுத்து அழியாதே
புலவர் சா இராமாநுசம்
உங்களது கவியை படிக்கையில்
ReplyDeleteசிந்தை மட்டுமல்ல நாவும் தேனாய்
இனிக்குதய்யா...
கோகுல் said..
ReplyDeleteகொம்புத்தேன் சுவைத்த
கோகுல் நண்பரே
தெம்புத்தான் தருகின்றீர்
தினம்போல வருகின்றீர்
அன்புத்தான் என்பால்
அளவின்றி காட்டுகின்றீர்
இன்புத்தான் எமக்கு-என்றும்
எம்நன்றி உமக்கு
புலவர் சா இராமாநுசம்
இனிய மதிய வணக்கம் ஐயா,
ReplyDeleteவலையுலகின் பெருமைகளைச் சொல்லி, கொம்புத் தேனாய் உங்களிற்கு கிடைத்த வலைப் பதிவின் நன்மைகளைச் சொல்லி நிற்கிறது இக் கவிதை.
உண்மையில் என் தாய் தமிழ் இனிக்கிறது
ReplyDeleteஆயிரம் தான் இருந்தாலும்
என் தாய்க்கும் தமிழுக்கும் ஈடு இணை இல்லை
அழகிய வரிகளுடன் நல்ல கவிதை ஐயா
ReplyDeleteதமிழ் மணம் 11
திகட்டாத கொம்புத் தேன்..
ReplyDeleteஇன்னும் என் செவியில் தித்திக்கிறது..
நல்ல துணையைப் பற்றி நறுமனம் வீசும் தேன் கவிதை!
ReplyDeleteவலைப்பூவை பெண்ணாக வர்ணித்து பாடிய நல்ல கவிதை புலவரே நன்றி
ReplyDeleteதண்மைமிகு தென்றலென தழுவநீயே-நெஞ்நில்
ReplyDeleteதவழ்கின்ற மழலையென வருவாய்தாயே
திண்ணமுற என்வலையில் எழுதநானே-என்றும்
தெவிட்டாது இனிக்கின்ற கொம்புத்தேனே/
திகட்டாத தேன் கவிதை!
மகேந்திரன் said..
ReplyDeleteஉளம் மகிழ பாராட்டும் சகோ!
நன்றி நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நிரூபன் said..
ReplyDeleteஎங்கெங்கு காணிலும் நிரூபன் ஐயா
எப்படியும் வருவீரே அறிவன் ஐயா
நன்றி நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹைதர் அலி said.
ReplyDeleteஹைதர் அலி அவர்களே
வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said
ReplyDeleteமிக்க நன்றி! முனைவர் அவர்களே
புலவர் சா இராமாநுசம்
தனிமரம் said..
ReplyDeleteதனிமரம் அவர்களே
வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
tamil said.
ReplyDeleteஅன்பரே! தங்கள் முதல்
வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
இராஜராஜேஸ்வரி said..
ReplyDeleteநன்றி!சகோதரி நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கொம்புத்தேன் இனிமை...வாழ்த்துக்கள்
ReplyDeleteஉண்மைமிகு உறவுகளைத் தேடித்தந்தாய்-இவ்
ReplyDeleteஉலகமெனைப் பாராட்ட ஓடிவந்தாய்
தொண்மைமிகு தனித்தமிழே வருவாயாக-உன்னை
தினம்பாட நல்வாய்ப்பு தருவாயாக
தண்மைமிகு தென்றலென தழுவநீயே-நெஞ்நில்
தவழ்கின்ற மழலையென வருவாய்தாயே
கொம்புத்தேனாக இனிக்கிரது கவிதை
இன்றென்ன கவிதைப் பெண்ணுடன் ஊடலோ?கொம்புத்தேன் வெகு இனிமை. என்றும்போல் அவள் உங்கள் கரங்களில் துள்ளி விளையாடிக்கொண்டிருக்க என் வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDelete