மனித நேயம் காணவில்லை-என்ற
மனக்குறை மாற வழியில்லை
புனிதர் யாரும் காணவில்லை-நல்
புத்தியைக் காணவும் வழியில்லை
கனிவை சொல்லில் காணவில்லை-என்ன
காரணம் அறியவும் வழியில்லை
இனிதாய் நடப்பார் காணவில்லை-நல்
இதயமே அந்தோ காணவில்லை
உலகம் எங்கே போகிறதோ-என
உள்ளம் பற்றியே வேகிறதே
கலகம் எங்கும் நடக்கிறதே-வீண்
காலம் இப்படி கடக்கிறதே
திலகம் புத்தர் காந்தியென-இந்து
தேசத்தில் பிறந்தது போலியென
புலரும் பொழுது ஒவ்வொன்றும்-தினம்
புகர மாறுமா இதுவென்றும்
சாதிச்சண்டை மறைய வில்லை-இன்னும்
சமயப்பூசல் குறைய வில்லை
நீதிக்குமிங்கே விலை வைத்தார்-நல்ல
நேர்மைக்கும் இங்கே உலைவைத்தார்
பீதிவாழ்வே தொடர் கதையாய்-எதிர்த்து
பேசினால் அந்தோ அடிஉதையாய்
வீதியில் நடக்கவும் அஞ்சுவதே-என்ற
வேதனை தானே மிஞ்சுவதே
என்று மாறும் இந்நிலையே-நம்
இந்திய நாட்டின் தன்நிலையே
இன்றுப் போன்றே இருந்திடுமா-தன்
இழிநிலை கண்டு திருந்திடுமா
சென்றுப் போனது போகட்டும்-ஆட்சி
செம்மை வழியில் நடக்கட்டும்
நன்றென உலகம் போற்றட்டும்-மிக
நல்லோர் மட்டுமே ஆளட்டும்
புலவர் சா இராமாநுசம்
//சென்றுப் போனது போகட்டும்-ஆட்சி
ReplyDeleteசெம்மை வழியில் நடக்கட்டும்
நன்றென உலகம் போற்றட்டும்-மிக
நல்லோர் மட்டுமே ஆளட்டும்//
நடந்தவைகள் கடந்தவைகளாகட்டும்
நடப்பவைகள் நல்லவைகளாகட்டும்.
ஒவ்வொரு கட்சிசாராத வாக்காளரின் மனதை கவிதை எடுத்துச் சொல்கிறது ஐயா..
நன்றி நல்லதோர் பகிர்விற்க்கு..
நட்புடன்
சம்பத்குமார்
மழையில் நனைந்த கோழி போல் சுருங்கி விட்டது உலகம்..
ReplyDeleteதுடிக்க மறந்து விட்ட நிலையில் இரும்பு துண்டமாய் இதயம்...
புதிய பொருளாதார கொள்கையுடன் குருதி உறிஞ்சும் அவலம்...
நம் கைகள் அனைத்தும் இணைந்து விட்டால் விடியல் என்பது சுலபம்...
நல்லோர் ஆளட்டும் என்றால் ஒரு காமராஜரோ, கக்கனோ'தான் பிறந்துவரனும் புலவரே....
ReplyDeleteஉங்கள் கவிதை நன்று....!!!!
த.ம.3
ReplyDeleteயதார்த்தம்.அருமை.
நல்லோர் என்பதைக்காட்டிலும்...திறமை உள்ளோர் மட்டும் தான் இப்போதைய தேவை புலவரே..
ReplyDeleteகவிதை அருமை..
சென்றுப் போனது போகட்டும்-ஆட்சி
ReplyDeleteசெம்மை வழியில் நடக்கட்டும்
நன்றென உலகம் போற்றட்டும்-மிக
நல்லோர் மட்டுமே ஆளட்டும்
நல்லதே நடக்கட்டும் என எதிர்பார்ப்போம்.
வாழ்த்துக்கள் ஐயா.
நல்லோர் மட்டும் ஆளட்டும்
ReplyDeleteஎன நினைத்து உறங்கினேன்.
கனவில்
ஆள்வோரேல்லாம் வந்து மிரட்டினர்
அப்படியெல்லாம் விட்டு விடுவோமா என்று?
சம்பத்குமார் said.
ReplyDeleteவிரிவான விளக்கம்! கூறி
கருத்துரை வழங்கினீர்
நன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
suryajeeva
ReplyDeleteவிரிவான விளக்கம்! கூறி
கருத்துரை வழங்கினீர்
நன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said..
ReplyDeleteஉணமை தான் மனோ!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said.
ReplyDeleteநன்றி!ஐயா
புலவர் சா இராமாநுசம்
Rathnavel said.
ReplyDeleteநன்றி!ஐயா
புலவர் சா இராமாநுசம்
3 October 2011 9:08 AM
ரெவெரி said.
ReplyDeleteதிறமை உள்ள நல்லோர்
என்று சொல்லுங்கள் சகோ!
புலவர் சா இராமாநுசம்
கோகுல் said.
ReplyDeleteஅப்படி நடந்தாலும் வியப்பில்லை
சகோ! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
என்று மாறும் இந்நிலையே//
ReplyDeleteகஷ்டம் தான் ஐயா மாறுவது
நல்லவர்கள் ஆட்சி நலமாக வந்தாள் விடிவு பிறக்கும்!
ReplyDeleteசாதிச்சண்டை மறைய வில்லை-இன்னும்
ReplyDeleteசமயப்பூசல் குறைய வில்லை//
உண்மை தான்..இன்றும் ஜாதிவெறி கொடிகட்டி பறக்குதய்யா..
நன்றென உலகம் போற்றட்டும்-மிக
ReplyDeleteநல்லோர் மட்டுமே ஆளட்டும்//
இப்படி அமைந்தால் இந்தியா சொர்க்க பூமியாக மாறும் ஐயா... ஆனால் மாற விடுவார்களா.. நல்லோரை ஆள எங்கே விடுகிறார்கள்... கவிதையில் உங்கள் ஏக்கத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா.. நன்றி
நல்லோர் மட்டுமே ஆளட்டும் - என்று தலையிட்ட கவிதை இன்றைய யதார்த்தத்தையும், ஏக்கத்தையும் அருமையாக சொல்கிறது..
ReplyDeleteநல்லோர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் கடமை நம் முன்னே காத்து கிடக்கிறது..
ஒரு கட்சிக்காக வாக்களிப்பதை விட நல்ல வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவதின் மூலம், கட்சிகளை நல்ல வேட்பாளர்களை தேர்வுசெய்ய நிர்பந்திக்க முடியும் என நம்புகிறேன்...
திறமையுள்ள நல்லோர் மட்டுமே ஆளட்டும்.
ReplyDeleteநல்லோர் ஆண்டால் யாவருக்கும் நலம்தான்..
ReplyDeleteதலைப்பே பல விஷயங்களை சொல்கிறது
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
வாழைப்பழத்தை உரிச்சு வாய்க்குல வைக்கிறமாதிரி கவிதை அப்படியே லாவகமா போகுது பாட்டு மாதிரி
ReplyDeleteM.R said.
ReplyDeleteஓட்டு அளித்தமைக்கு நன்றி
நண்பரே
புலவர் சா இராமாநுசம்
M.R said.
ReplyDelete// கஷ்டம் தான் ஐயா மாறுவது//
ஆம்!நண்பரே உண்மைதான்!
புலவர் சா இராமாநுசம்
தனிமரம் said...
ReplyDeleteபதவி என்ற வெறி இன்று கிராமங்களைக்
கூட ஆட்டிப் படைக்கிறதே!
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said.
ReplyDeleteபதவி என்ற வெறி இன்று கிராமங்களைக்
கூட ஆட்டிப் படைக்கிறதே!
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said.
ReplyDeleteநன்றி மாய
புலவர் சா இராமாநுசம்
சென்றுப் போனது போகட்டும்-ஆட்சி
ReplyDeleteசெம்மை வழியில் நடக்கட்டும்
நன்றென உலகம் போற்றட்டும்-மிக
நல்லோர் மட்டுமே ஆளட்டும்
உண்மைதான் ஐயா .நிகழும் கொடுமைகள் நின்றிட
நல்லவர்கள் ஆளாரோ இப் புவியிதனை .தங்கள்
எண்ணம் ஈடேற வேண்டும் .மிக்க நன்றி ஐயா
அழகிய கவிதைப் பகிர்வுக்கு ............
தமிழ்மணம் 10
ReplyDeleteகுடிமகன் said
ReplyDeleteவிரிவான விளக்கம் மனவருத்தத்தோடு
எழுதி யுள்ளீர்
ஆனால் ..பதில் ஏமாற்ற மாகத்தான்
இருக்கும்!
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said.
ReplyDeleteநன்றி!ஐயா
தங்கள் ஆசை நிறைவேற
இறைவன் தான் அருள் செய்ய வேண்டும்
புலவர் சா இராமாநுசம்
Riyas said..
ReplyDeleteஉங்கள் வாகுக்கு பலிக்கட்டும்
நன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
ஹைதர் அலி said
ReplyDeleteமுதற்கண் தங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கவி அழகன் said.
ReplyDeleteவாங்க தம்பீ
அடிக்கடி காணாம போறீங்க
காதல்(கவிதை)வரவில்லையா
நன்றி
புலவர் சா இராமாநுசம்
அம்பாளடியாள் said.
ReplyDeleteகவிதைப் புயல் அன்புச் சகோதரிக்கு
கவின் மிகு நன்றி
புலவர் சா இராமாநுசம்
அம்பாளடியாள் said.
ReplyDeleteஒட்டளிப்புக்கு மீண்டும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
///சாதிச்சண்டை மறைய வில்லை-இன்னும்
ReplyDeleteசமயப்பூசல் குறைய வில்லை
நீதிக்குமிங்கே விலை வைத்தார்-நல்ல
நேர்மைக்கும் இங்கே உலைவைத்தார்
பீதிவாழ்வே தொடர் கதையாய்-எதிர்த்து
பேசினால் அந்தோ அடிஉதையாய்
வீதியில் நடக்கவும் அஞ்சுவதே-என்ற
வேதனை தானே மிஞ்சுவதே/////
பல விடயங்களை சொல்லியுள்ளீர்கள் அழகான கவிதை ஜயா
K.s.s.Rajh said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
அன்பரே!
K.s.s.Rajh said.
Super Kavithai
ReplyDeleteகவிதை அருமை...அண்ணே அந்த நல்லோருன்னு சொல்றீங்களே...அங்கதாண்ணே மக்கள் தோத்துப்போறாங்க!
ReplyDeleteஎன் ராஜபாட்டை"- ராஜா said.
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
விக்கியுலகம் said...
ReplyDelete// கவிதை அருமை...அண்ணே அந்த நல்லோருன்னு சொல்றீங்களே...அங்கதாண்ணே மக்கள் தோத்துப்போறாங்//
உண்மைதான் சகோ!
நல்லவனாய் வருபவன் கூட பதவி பணம்
அதிகாரம் பெற்றவுடன் கெட்டுப்போகிறான்
புலவர் சா இராமாநுசம்
நல்லாட்சி வேண்டி நல்லதொரு ஆக்கம் உங்களின் நல்ல எதிர் பார்ப்புகள் உண்மையில் வெல்லும்
ReplyDeleteநல்லாட்சி வேண்டி நல்ல படைப்பு.புலவர்களின் வாக்கு என்றும் பொய்க்காது.
ReplyDeleteசென்றுப் போனது போகட்டும்-ஆட்சி
ReplyDeleteசெம்மை வழியில் நடக்கட்டும்
நன்றென உலகம் போற்றட்டும்-மிக
நல்லோர் மட்டுமே ஆளட்டும்
நல்லாட்சி மட்டுமே மலரட்டும்!
/////சாதிச்சண்டை மறைய வில்லை-இன்னும்
ReplyDeleteசமயப்பூசல் குறைய வில்லை
நீதிக்குமிங்கே விலை வைத்தார்-நல்ல
நேர்மைக்கும் இங்கே உலைவைத்தார்/////
இந்த காலாவதியான முறையை காலாவதியாக்கும் வரை
கலியுகமிங்கே சாகாது....
அருமையானக் கவிதை ஐயா!
சில பணிச்சுமை. இடையில் வர முடியாமல் போனதற்கு மன்னிக்கவும் ஐயா. தங்களின் கவிதை மிக அருமை. எதுகையும் மோனையும் தவழ்ந்து வரும் உணர்வுக் கவிதை. பாரதியின் சுதந்திர தாகத்தினை
ReplyDeleteஉமது கவிதை நடையில் காண்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.
மாலதி said..
ReplyDeleteநன்றி மகளே!
Murugeswari Rajavel said
ReplyDeleteநன்றி சகோதரி
இராஜராஜேஸ்வரி sai
ReplyDeleteநன்றி சகோதரி
புலவர் சா இராமாநுச
தமிழ் விரும்பி said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
MUTHARASU said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
வணக்கமய்யா அருமையான உங்கள் கவிதையை வாசித்து பெருமூச்சுத்தான் விடமுடியும் நல்லோர் ஆளும் நாளுக்கு எதிர்பார்த்திருப்போம்..!!?
ReplyDeleteதங்கள் வருகையை எதிர்நோக்கி என் தளத்தில் புதிய
ReplyDeleteபாடல்வரி காத்திருக்கின்றதையா வாருங்கள் தங்கள்
கருத்தால் இப் பாடல் அழகுபெற வாழ்த்துங்கள் .