எனது ஊரே எதுவெனக் கேட்பீர்
தனது என்றதன் சிறப்பைச் சொல்ல
பெரிதாய் ஏதும் இல்லா தெனினும்
உரிதாய் ஒன்று உளதாம் அதுவே
இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே
இரண்டு அணைகள் இரட்டணை பேரே
வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம்
மிரண்டே நாங்கள பதறிட உள்ளம்
வந்ததும் விரைவே வடிவதும் விரைவே
சிந்தனை தன்னில் தோன்றிடும் சிறப்பே
செப்பிட இதுதான் என்னுடை விருப்பே
மேலும்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
செய்யுள் அழகென செப்பிட இலக்கணம்
சிற்றூர் என்றும் செப்பிட இயலா
பேரூர் என்றும் பேசிட இயலா
உயிர்தனைக் காக்க உடலதனைப் பேண
பயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க
உழுவித்து உண்ணும் உழவர்கள் பலரும்
செய்யும் தொழிலில் சிறப்பென கருதி
நெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும்
இன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும
தன்னேர் இன்றி செய்திட பலரும்
சாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும்
மோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும்
சொல்லப் பலவே எல்லை இலவே
சொல்வதில் கூட வேண்டும் அளவே
அதனால்--நான்
இருந்த காலதில் இருந்ததை அங்கே
விரும்பி அதனை விளம்பினேன் இங்கே
ஆனால்--
ஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே
வேண்டியே நானும் வழிந்திட அன்பே
சென்றேன் அங்கே செயல்தனை மறந்தே
நின்றேன் நின்றேன் நீண்ட நேரம்
அடடா ஊரே முற்றம் மாற்றம்
அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்
கனவாய ஆகிட கண்டேன் சிலரே
நினவில் வைத்தெனை நலமா என்றார்
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு
பாடலை முடித்தேன் படித்திட நன்றி
புலவர் சா இராமாநுசம்
இனிய காலை வணக்கம் ஐயா,
ReplyDeleteஊரின் சிறப்புக்களை அழகுறச் சொல்லி வந்த கவிதை,
காலவோட்ட மாற்றத்தில் ஊர் அழகு குன்றி மாறிப் போயிருக்கையில் மனதில் வலி ஏற்பட்டு எண்ணச் சிதறல்களை அடைத்து விடுகிறது எனுன் உண்மையினையும் உரைத்து நிற்கிறது.
இனிய காலை வணக்கம் ஐயா.
ReplyDeleteஆடிய இடமெல்லாம் வீடாய் மாறிட....
தங்களின் பிறந்த ஊரைப் பற்றி அழகுற கவிதையில் வடித்தீர்.
பிறந்தவூரின் இன்றைய நிலையில் நிலைகுலைந்தீர்.
எம்மூரும் அப்படியே. எங்கும் மக்கள் தொகை குறுந்தொகை அல்ல
பெருன்தொகையானதே!
நல்ல கவிதை.
அருமை அருமை ஊர் பற்றிய அருமைகளை
ReplyDeleteமிக அழகாக தொடர் நிலைச் செய்யுளில் சொல்லி
இருக்கிறீர்கள் என் நினைக்கிறேன்
வை.கோ சார் புதுமையாகவும் அழகாகவும்
சிறுகதைக்கு இடையில் தேவையான குறிப்புகள்
கொடுத்துப் போதலைப் போல தங்கள்
கவிதையின் அடிக் குறிப்பாக செய்யுள் குறித்த
இலக்கண் விளக்கங்களைச் சொல்லிப் போனால்
பதிவர்கள் அதிகம் பேர் பயனடையக் கூடுமே !
த.ம 2
இனிய காலை வணக்கம் ஐயா
ReplyDeleteநன்றி
என்னுடைய ஊருக்கு அருகேதான் தங்கள்
ஊர் என்று கருதுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
இனிய காலை வணக்கம் நிரூ
ReplyDeleteஎன் வலையில் சரிவர இயங்குவதில்லை
கோகுல் அக்கவுணட் தகராறு( அவ்வப்போது)
செய்கிறது கருத்துரை போவதில்லை வருவதும்
இல்லை ஒட்டும் அவ்வாறே பதிவு போவதும்
வருதும் இல்லை
இதை யாரேனும் சரிசெய்தால்
அல்லது உங்களால் முடியுமானால் நன்றி
புலவர் சா இராமாநுசம்
நல்ல கவிதை அழகு தமிழில்.. அசத்தல்..
ReplyDeleteயாதும் ஊரே யாவரும் கேளிர் என்றிருப்பினும் சொந்த ஊராகுமோ மற்ற ஊர்!!
ReplyDeleteபழய தோற்றம்
ReplyDeleteகனவாய ஆகிட கண்டேன் !
//
பல ஊர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது ஐயா!
மாற்றங்களின் போதிய மாற்றங்களால்
ReplyDeleteஉருமாறி போன எத்தனையோ தளங்கள்..
அழகிய மாற்றங்களால் சோலையாக மாறியது ஒருபுறம்..
சுகாதாரக்கேடுகளால் குப்பைமேடான சில தளங்கள் மறுபுறம்...
மாற்றங்கள் பற்றிய அழகுக் கவிதை படைத்தீர்கள் புலவரே.
நன்று.
அந்த அளவுக்கு நமக்கு ஞானம் இல்லீங்கோ
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said.
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
கோகுல் said.
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
புலவர் ஐயா,
ReplyDeleteமாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்கிறார்கள்.
ஆனால்,
பிறந்த ஊரின் தோற்றம் மாற்றம் காணும் போது ஏனோ உள்மனம் தானாய் தன்னை பிசைந்துக்கொள்கிறது.
உங்கள் ஊரின் இன்றைய நிலைமையை நன்றாய் பகிர்ந்திருக்கிறீகள்.
மகேந்திரன் said...
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
சத்ரியன் said.
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
ஊரில் புகுந்து விளையாடிய இடங்கள், இப்போ போனால் பாதையே தெரியவில்லை, சிறுவயதில் நாங்கள் பயந்த இடங்கள் இப்போது வீடாக காட்சியளிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...!!!
ReplyDeleteஎங்களுக்கும் ஊரை நியாபகப்படுத்திட்டீங்க புலவரே...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said.
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் ஜயா
ReplyDeleteநாம் வாழ்ந்த ஊர்களை எப்பொழுதும் நம்மால் மறக்க முடியாது.............
//அடடா ஊரே முற்றம் மாற்றம்
ReplyDeleteஅடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்
கனவாய ஆகிட கண்டேன் சிலரே
நினவில் வைத்தெனை நலமா என்றார்
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
வாடிய உளத்தொடு வந்தேன்//
வருத்தம் தான். எல்லா இடத்திலும் எல்லோருக்கும் இன்று இதே நிலை தான், ஐயா.
உணர்ச்சிப்பிழம்பாய் உள்ளது இந்தக்கவிதை.
தமிழ்மணம்: 8 vgk
K.s.s.Rajh said...
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
அழகு கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா.
மாற்றத்தை அழகாகாய் பதிவு செய்துள்ளீர்கள் புலவரே..
ReplyDeleteஅருமை.
கவிதை அருமை அய்யா!
ReplyDeleteமுனைவர்.இரா.குணசீலன் said
ReplyDeleteபாரட்டுக்கு நன்றி முனைவரே!
புலவர் சா இராமாநுசம்
விக்கியுலகம் said
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
ஊர் மாறியதை அழகிய கவிதையாய் படைத்து இருக்கிறீர்கள் ஐயா.... மாற்றம் தானே என்றுமே மாறாதது....
ReplyDeleteஉலகே மாறிவிட்டது..நம்ம ஊர் எம்மாத்திரம்...புலவரே...
ReplyDeleteஆதங்க கவிதை அருமை...
வணக்கம் ஐயா
ReplyDeleteகவிதை வரிகளை படித்து முடித்தவுடன் நான் பிறந்த ஊரின் பழைய நினைவுகளை மீட்டெடுக்க வைக்கின்றது
இன்று எந்த ஊரில் நாம் இருந்தாலும் சொந்த ஊரின் நினைவலைகள் மனதை விட்டு நீங்காது
நன்றி நல்லதோர் பகிர்விற்க்கு
Rathnavel said.
ReplyDeleteநன்றி !
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said.
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said..
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
சம்பத்குமார் said.
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
புலவர் சா இராமாநுசம்
ஒன்றுமில்லை ஒன்றுமில்லைன்னு ஊரின் சிறப்பை அதன் வளத்தை மிக அழகிய பகிர்வா தந்துட்டீங்க ஐயா....
ReplyDeleteஅன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு...
ஊரின் சிறைப்பை கவிதையில் கலக்கலாக பகிர்ந்துள்ளீர்கள்
ReplyDeleteஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
ReplyDeleteவாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு
பாடலை முடித்தேன் படித்திட நன்றி /////////
வணக்கம் ஐயா! இப்போதெல்லாம் கிராமங்கள் முகவரி தொலைத்து நகரங்களாய் மாறி விடன! இதனை அழகுற சொல்லியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!
ஊரின் சிறப்பைச் சொன்ன வரிகள் அழகோ அழகு. இரண்டு ஆறுகளுக்கிடையில் ஊர் என்றால் ஆற்றில் வெள்ளம் வந்ததும் பதறிடல் இயல்பே. வந்த வேகத்தில் வெள்ளம் வடியும் அதிசயம் பெரும் அதிசயமே. சாதிச்சண்டையற்ற, உழைப்பாளிகளால் நிறைந்திருந்த அக்காலத்தைக் கண்முன் நிறுத்திவிட்டீர்கள். இறுதியில் ஊரின் தோற்ற மாற்றம் சொல்லி நெஞ்சம் நெகிழச்செய்துவிட்டீர்கள். காலத்தின் அதி தீவிர வளர்ச்சியை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் நாம்! கவிதையில் சொன்னவிதம் வெகுவாய் ரசிக்கவைக்கிறது. பாராட்டுக்கள் ஐயா.
ReplyDeleteசூப்பர் கவிதை புலவரே
ReplyDeleteஅடடா ஊரே முற்றம் மாற்றம்
ReplyDeleteஅடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம் /
ஊரின் மாற்றம் அழகிய கவிதை..
ஐயா உங்களின் கவிதைக்கே தனிச்சிறப்பு இருக்கு..
அன்புடன் பகிர்வுக்கு நன்றிகள்.
முதியோர் தின சிறப்பு இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன் புலவரே..
ReplyDeletehttp://gunathamizh.blogspot.com/2011/10/blog-post.html