திங்களாம் தைமாதம் எங்கள்-தமிழ்
புத்தாண்டின் முதல்நாளே பொங்கல்
தங்கமாய் வந்திடும் திங்கள்-வாசல்
பொங்கலும் இடுவோமே நாங்கள்
புதுப்பானை பொலிவுற வைத்தே-நல்
பூவொடு மஞ்சளின் கொத்தே
மதிப்பாக மாலையாய் கட்டி-அந்த
மண்பானை கழுத்தினில் சூட்டி
புத்தம் புதுநெல்லைக் குத்தி-வெல்லம்
போட்டுடன் பால்பொங்கக் கத்தி
சத்தமும் பொங்கலோ என்றே-தர
சங்கீத இனிமையை நன்றே
மாடென உழைத்திட்ட உழவன்-பொங்கல்
மாட்டுக்கும் வைத்ததைத் தொழுவன்
காடொனக் கிடந்திட்ட நிலமும் -அவன்
கைபட பெற்றதாம் வளமும்
கொல்லும பசிப்பிணி போக்கும்-உழவன்
குறையென்ன கண்டதை நீக்கும்
ஒல்லும் வகையவன் வாழ -அரசு
உடன்டி எண்ணுமா சூழ
குறிப்பு- சிலரது வினாவிற்குப் என்னுடைய
பதில்!
அண்ணே கலக்கல்!
ReplyDeleteவிக்கியுலகம் said
ReplyDeleteநன்றி!சகோ!
புலவர் சா இராமாநுசம்
அசத்தல் புலவரே, வாழ்த்துக்கள்....!!!
ReplyDeleteநெய்யில் வறுத்த முந்திரியுடன், ஏலக்காய் மணம் கமழ தித்திப்பான சர்க்கரைப்பொங்கல் போல இனிக்குதே, இந்தத் தங்கள் கவிதையும்.
ReplyDeleteசென்ற பொங்கலுக்கு நான் வெளியிட்டதொரு கவிதை:
//செங்கரும்புச் சாறெடுத்து இதழினிலே தேக்கி!
சிந்துகின்ற புன்னகையால் துன்பம் நீக்கி!!
மதமதத்த வளையணிந்த கைகள் வீசி!!!
மங்களமாம் “தை” என்னும் மங்கை வருவாள்!
பொங்கியெழும் புத்தின்ப உணர்ச்சி தருவாள்!!//
vgk
நன்று!
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteநன்றி!சகோ!
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said
ReplyDelete// மங்களமாம் “தை” என்னும் மங்கை வருவாள்!
பொங்கியெழும் புத்தின்ப உணர்ச்சி தருவாள்//
கவிதை மிகவும் அருமை!
வை.கோ நீங்கள் கதைக்கோ மட்டுமல்ல
கவிதை எழுதினால் கவிக்கோவும் ஆகலாம்
ஏதோ பாரட்ட எழுதியதாக எண்ணாதீர்
உண்மை!
நன்றி!வை.கோ!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said
ReplyDeleteநன்றி பித்தரே!!
புலவர் சா இராமாநுசம்
இருக்கிறவங்க கொண்டாடுறீங்க,
ReplyDeleteஇல்லாதவன் வேடிக்கை பார்க்கிறேன்
தமிழர் திருநாளின் தனிச் சிறப்புக்களையும், தை முதல் நாளே தமிழர் திருநாள் எனும் பெருமை நிறைந்த செய்தியினையும் ஆணித்தரமாகச் சொல்லும் கவிதை.
ReplyDeletesuryajeeva said...
ReplyDeleteஎல்லோரும் கொண்டாடும் திருநாள்தான்
உழவர்த் திருநாள்!
இதில் இருப்பவர் இல்லாதவர் என்ற வேறுபாடு
இல்லை நண்பரே
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நிரூபன் said...
ReplyDeleteநன்றி!சகோ!
புலவர் சா இராமாநுசம்
படிக்கப் படிக்க இனிக்கும் பாடல் ... என்னைப் போன்ற மரபார்வலர்களுக்கு உங்களது படைப்புக்கள் பெருவிருந்து
ReplyDeleteதமிழர்தம் திருநாள் தைத்திருநாள். ஆதுவே தமிழ்ப் புத்தாண்டு. ஐயா அருமையான கவிதை. நெஞ்சம் நிறைந்தது.
ReplyDeleteஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said
ReplyDeleteஅன்பரே! வணக்கம்
தங்களின் முதல் வருகைக்கும்
வாழத்துக்கும் நன்றி!
கா ந கல்யாணசுந்தரம் said...
ReplyDeleteஅன்பரே! வணக்கம்
தங்களின் முதல் வருகைக்கும்
வாழத்துக்கும் நன்றி
தைப்பொங்கல் இப்பவே வந்தது போல இருக்கு ஐயா. கவிதை அருமை.
ReplyDeleteகாந்தி பனங்கூர் said
ReplyDeleteநன்றி!சகோ!
புலவர் சா இராமாநுசம்
தை திருநாள் தமிழர் நாளாம், அதுவே நமக்கு தமிழ் புத்தாண்டாம். என்ற கருத்தை தாங்கி நிற்கிறது உங்கள் கவிதை.
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said
ReplyDeleteஆம்!நண்பரே!
அதுதான் என் கருத்து.
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் ஜயா இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் இனி தொடர்ந்து வருவேன்
ReplyDeleteK.s.s.Rajh said
ReplyDeleteஅன்ப!
தங்களின் முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
உழவுதான் பழமையான தொழில்
ReplyDeleteஅவர்களைப் பொறுத்தே ஆண்டின் துவக்கம்
இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளது
என்பதே எனது கருத்தும்
அருமையான இனிக்கும் கவிதையாக
இந்தச் செய்தியைத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
த.ம 5
கவிதை மிகவும் அருமை புலவரே... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதிங்களாம் தைமாதம் எங்கள்-தமிழ்
ReplyDeleteபுத்தாண்டின் முதல்நாளே !
திங்களாம் தைமாதம் எங்கள்-தமிழ்
புத்தாண்டின் முதல்நாளே !
அருமை புலவரே..
நல்ல கவிதை புலவரே....
ReplyDeleteஎனக்கு ஆடி முதல்நாளே புத்தாண்டு, உங்கள் புத்தாண்டை நீங்கள் கொண்டாடுங்கள், என் புத்தாண்டை நான் கொண்டாடுவேன்.
ReplyDeleteRamani said...
ReplyDeleteதேடிப் பார்தேன் வரவில்லை
தினமும் வருவீர் ஏனில்லை
வாடிப் போனேன் அறிவீரா
வழக்கமில் வழக்கம் புரிவீரா
கூடும் மகிழ்வே வந்தீரே
குருவேன மதிப்பும் தந்தீரே
பாடும் குயிலாய் இருப்போமே
பறக்கிரு சிறகென பறப்போமே
நன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteவருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteதங்கள்
வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said
ReplyDeleteதங்கள்
வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
ராவணன் said
ReplyDeleteநன்றி!இராவணன் அவர்களே
உங்கள் விருப்பம்!உங்கள் உரிமை!
யாரும் தடையில்லை
தங்கள்
வருகைக்கு நன்றி
புலவர் சா இராமாநுசம்
மாடென உழைத்திட்ட உழவன்-பொங்கல்
ReplyDeleteமாட்டுக்கும் வைத்ததைத் தொழுவன்
காடொனக் கிடந்திட்ட நிலமும் -அவன்
கைபட பெற்றதாம் வளமும்
//
இதனை நான் நன்கறிவேன்!
உழவுக்குடும்பதிலிருந்து வந்தவன் நான்!
என் தாத்தா இன்னமும் உழுகிறார்!
உங்கள் பதிலாக வந்த கவிதைக்கு நன்றி!
""கொல்லும பசிப்பிணி போக்கும்-உழவன்
ReplyDeleteகுறையென்ன கண்டதை நீக்கும்
ஒல்லும் வகையவன் வாழ -அரசு
உடன்டி எண்ணுமா சூழ""
--வரிகள் மிகவும் பிடித்திருந்தது..
நன்றி
கோகுல் said...
ReplyDeleteதங்கள்
வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
சின்னதூரல் said...
ReplyDeleteதங்கள்
வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
தமிழர் திருநாளில் உழவர்தம் பெருமை உரைத்துப் புனைந்த தங்கள் கவிதையும் இனிக்கிறது, சர்க்கரைப் பொங்கலைப் போலவே. பாராட்டுக்கள் ஐயா.
ReplyDeleteகீதா said..
ReplyDeleteதங்கள்
வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி
கீதா said..
ReplyDeleteதங்கள்
வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி
தை திங்கள் பெருமையை சொல்லும்போதே உழவர்களின் துன்பங்களையும் சொல்லி அதை அரசு நீங்க வழி செய்யுமா என்று முடித்தது மிக சிறப்பு ஐயா....
ReplyDeleteஎப்போதும் எல்லோர் பற்றியுமே சிந்திக்கிறீங்க ஐயா... உங்க மனசு எப்போதுமே இப்படி கருணை நிறைந்ததா இருக்கேன்னு வியந்து பார்த்திருக்கிறேன்.... நேரில் உங்களை சந்திக்கமுடிந்தால் கண்டிப்பாக உங்களிடம் ஆசி பெற வருவேன் ஐயா.....
அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு....