சிறுவன்
மயிலே மயிலே நீயேனோ - உன்
மனதை மயக்கும் உன்தோகை
ஒயிலாய் விரிய நடமாடி - பெரும்
உவகை கொண்டு ஆடுகிறாய்
மனதை மயக்கும் உன்தோகை
ஒயிலாய் விரிய நடமாடி - பெரும்
உவகை கொண்டு ஆடுகிறாய்
மயில்
வெள்ளி வானில் கருமேகம் - பரவி
விரைய மயிலும் ஆடுமென
பள்ளிச் சிறுவா நீபாடம் - என்றும்
படித்த தில்லையா ஒரு நாளும்
விரைய மயிலும் ஆடுமென
பள்ளிச் சிறுவா நீபாடம் - என்றும்
படித்த தில்லையா ஒரு நாளும்
சிறுவன்
அழகுமிக்கப் பொன் மயிலே - நடனம்
ஆடிக் காட்டும் நல்மயிலே
பழகிக் கொண்டால் உன்குரலும் - அந்த
பாடும் குயிலாய் ஆகாதோ
ஆடிக் காட்டும் நல்மயிலே
பழகிக் கொண்டால் உன்குரலும் - அந்த
பாடும் குயிலாய் ஆகாதோ
மயில்
குயிலின் இனிமை என்குரலில் - நான்
கூட்டிக் காட்ட சிறுவாநீ
பயில வருமென எண்ணாதே - இறைவன்
படைப்பை வெல்ல ஆகாதே!
கூட்டிக் காட்ட சிறுவாநீ
பயில வருமென எண்ணாதே - இறைவன்
படைப்பை வெல்ல ஆகாதே!
குறிப்பு- என் பேரனின் ஆசைக்கு ஏற்ப
எழுதிய கவிதை.
ஓ.கே பேரனுக்காக எழுதியது. அது சரி பழகினால் வராதோ என்கிறார் வாழ்த்துகள். பேரனுக்கு இறை ஆசி கிட்டட்டும்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நீங்கள் ஒரு நல்ல தாத்தா
ReplyDeleteஇறைவநினின் படைப்புகளை வெல்ல முடியாது
kovaikkavi said
ReplyDeleteநன்றி சகோதரி வேதா அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
கவி அழகன் said...
ReplyDeleteநன்றி!கவி அழகன்!
புலவர் சா இராமாநுசம்
பேரனுக்கான கவிதை சூப்பர் ஐயா. மயில் படமும் அருமை.
ReplyDeleteஉங்க பேரன் கொடுத்துவச்வன்
ReplyDeleteகாந்தி பனங்கூர் said..
ReplyDeleteநன்றி! காந்தி பனங்கூர்!
புலவர் சா இராமாநுசம் .
அம்பலத்தார் said
ReplyDeleteமுதற்கண் வருகை தந்து வாழ்த்தும் கூறிய
வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
குட்டியூண்டு கவிதை தான்...
ReplyDeleteஎளிய வரிகள் தான்...
குழந்தைகளும் புரிந்து தெளியும் வார்த்தைகள் தான்....
ஆனால் இதில் ஒரு அருமையான கருத்தும் பொதிந்திருப்பதை உணரமுடிந்தது....
இறைவன் படைப்பில் எல்லாம் நல்லவையே...ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு.. தன்னில் இருக்கும் தனித்தன்மை கொண்டு பாடுபட்டு அதில் வெற்றி பெறுவதே உசிதம் என்பதை மிக அருமையான வரிகளில் சொல்ல வந்த அழகு கவிதை ஐயா இது....
மயிலின் நடனத்தில் தோகை விரித்து ஆடும் அழகில் மனதை பறிகொடுத்து நாம் நிற்போம்.. ஆனால் அது வாய் திறந்து பாட நினைக்கும்போது நம் கண்முன் அந்த அழகு நடனம் மறைந்து அதன் கர்ண கடூர குரலே பயமுறுத்தும்....
அதே போல் குயிலின் அழகிய் கூஊஊஊ என்ற குரலில் நம் காலை விடிவதே அழகு என சொல்லலாம். எங்க ஹாஸ்டலில் காலை நான் விழிப்பதே குயிலின் அழகிய கூக்குரலில்.....
ஆனால் அதன் நிறமோ யாரு காண விரும்பாத கரியநிறம்....
எல்லோருக்கும் எல்லாமே கிடைத்துவிடுவதில்லை...
ஒரு சிலருக்கு இருக்கும் திறமைகள் ஒருசிலருக்கு இருப்பதில்லை, அதனால் என்ன? இருப்பதை கொண்டு திருப்தி அடைய முயலவேண்டாம் அதைக்கொண்டு வெற்றியின் இலக்கை தொட முயற்சிக்கலாம் என்ற நம்பிக்கை ஊட்டும் வரிகள் தந்த ராமானுசம் ஐயாவுக்கு என் அன்பு நன்றிகள்...
இறைவன் படைப்புக்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்... அதை நாம் அறிய முயற்சிக்காமல் வாழ்க்கையின் பகுதிகளை ஜெயிக்க முயற்சிப்போம் நம்முள் இருப்பவைக்கொண்டு என்ற அழகிய கருத்தை சொல்லி சென்ற கவிதை பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஐயா....
பேரனுக்கு என் அன்பு வாழ்த்துகளும் ஆசிகளும்....
அன்புநிறை புலவர் ஐயா
ReplyDeleteஇதுதானய்யா பேரப்பாசம் என்பது,
குழந்தைக்காக புனைந்திடினும் அங்கே
ஓர் அழகிய வாழ்வியல் தத்துவத்தை
விளக்கியிருக்கிறீர்கள்.
இறைவன் படைப்பில் உண்டென உள்ளதை
இல்லையென ஆக்குவதும், இல்லையென உள்ளதை
உண்டென ஆக்குவதும் ஆகிய செயற்கை முறையில்
தருவிக்க நினைக்கும் சில கனவான்களுக்கு
நல்லதோர் பதிலடி கொடுக்கும் கவி.
அன்புக்குழந்தைக்கும்
கவிபுனை ஏந்தலுக்கும்
வாழ்த்துக்கள்.
மஞ்சுபாஷிணி said
ReplyDeleteநன்றி சகோதரி! மஞ்சுபாஷிணி அவர்களே!
எனக்கு வியப்பினும் வியப்பே! தாங்கள்
எப்படி இவ்வளவு விரிவான பின்னூட்டம்
எழுதுகிறீர்கள்!
எனக்கு மட்டுமல்ல எல்லா
வலைகளிலும் காணும் காட்சி இதுதான்
நீங்கள் நலம் பெற வாழ வேங்கடவனை
வேண்டுகின்றேன்
என்னுடைய வேங்கடவன் துதி
கண்டீர்களா
புலவர் சா இராமாநுசம்
தங்கள் பேரன் தயவால் மேலும் ஒரு நல்ல கவிதை எங்களுக்கு நன்றி ஐயா
ReplyDeleteமகேந்திரன் said
ReplyDeleteநன்றி! ஆம் சகோ!
நான் என் குழந்தைகளை எப்படி வளர்த்தேனோ
எனக்குத் தெரியாது ஆனால்... இன்று
பேரர்களும் பேத்தியும் தான் என் உலகம்!
என்று சொன்னால் அது மிகையாகது.
பெரிய பேரனும் பேத்தியும் அமெரிக்காவில்
இருந்தாலும் கூட நாள்தவறாமல் தெலைபேசா
மூலம் பேசுகிறார்கள்
புலவர் சா இராமாநுசம்
கவிதைக்கு பொய் அழகு என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது..
ReplyDeleteஅழகான கவிதை.. தங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇறைவன்
ReplyDeleteபடைப்பை வெல்ல ஆகாதே//
இறைவன் படைப்பை வெல்ல முடியவே முடியாது, சரியாக சொன்னீர்கள் புலவரே....!!!
உங்கள் பேரனுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்....
ReplyDeleteM.R said...
ReplyDeleteமிக்க நன்றி M.R அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said
ReplyDeleteமிக்க நன்றி suryajeeva அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
வேடந்தாங்கல் - கருன் *! said
ReplyDeleteவாழ்த்துக்கும் கருத்துக்கும்
நன்றி! நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
தங்கள் பேரனுக்கு மட்டுமல்ல மயில் பாட்டு!
ReplyDeleteஎங்கள் எல்லோருக்குமே அதுவே தாலாட்டு!!
உங்களுக்கு எங்கள் பாராட்டு!!!
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteவாழ்த்துக்கும் கருத்துக்கும்
நன்றி! நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said
ReplyDeleteநன்றி! நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவாழ்த்துக்கும் கருத்துக்கும்
நன்றி! ஐயா!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
உங்களின் ஆக்கத்தில் இருந்து இப்படி ஒரு தாத்தா இல்லையே என ஏங்க வைக்கிறது இப்படி முறைப்படி நம் பழமையை புதியவர்களுக்கு அறிமுகப் படுத்தும் போதுதான் சிறந்த எதிர்காலத்தை குழந்தைகளுக்கு உண்டாக்கி கொடுக்க முடியும் என்பது எமது நம்பிக்கை வணக்கங்களுடன் ....
ReplyDeleteபோளூர் தயாநிதி said...
ReplyDeleteமுதற்கண் வருகை தந்து வாழ்த்தும் கூறிய
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சந்தோஷ தாத்தாவிற்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteகாட்டான் said.
ReplyDeleteவாழ்த்தும் கூறிய
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
இனிமையான... எளிமையான.. அருமையான.. கவிதை ஐயா.. பேரனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஐயா,
ReplyDeleteபேரனுக்கு கவிதை என்றாலும்,
அனைவருக்குமான பாடம் பொதிந்திருக்கிறதே!
அழகு.
இயற்கையை, இறைவனின் படைப்பை அப்படியே ஏற்றுக்கொள்ளுதலே வாழ்க்கையென்னும் தத்துவத்தை குழந்தையின் மூலம் அனைவருக்கும் புரியவைத்துவிட்டீர்கள். கவிச் சிந்தனைத் தூண்டிய பெயரனுக்கு வாழ்த்துகளும் ஆசிகளும்.
ReplyDeleteஇயற்கையின் அழகு - மனிதனின் படைப்பு
ReplyDeleteஎன்றும் உயர்ந்து நிற்பது இயற்கையே ...
அதைத் தாங்கள் எடுத்தியம்பிய விதம் அழகு!!
நன்ற புலவரே.
த.ம.7
ReplyDeleteயார் வெல்ல முடியும் இறைவன் படைப்பை?
அருமை!
குடிமகன் said...
ReplyDeleteமுதற்கண் வருகை தந்து வாழ்த்தும் கூறிய
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சத்ரியன் said...
ReplyDeleteவாழ்த்தும் கூறிய
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கீதா said
ReplyDeleteவாழ்த்தும் கூறிய சகோதரி
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteவாழ்த்தும் கூறிய முனைவர்
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteஓட்டளிபுக்கும் வாழ்த்துக்கும்
நன்றி ஐயா
புலவர் சா இராமாநுசம்
ஆஹா! ஐயா!பேரன் கொடுத்து வைத்தவன்!
ReplyDeleteதினமும் தமிழின் தாலாட்டில் தூங்குவதால்!
எங்களையும் தாலாட்டியமைக்கு நன்றி!
இயற்கையை குழந்தையின் மூலம் புரியவைத்துவிட்டீர்கள்....புலவரே...
ReplyDeleteரெவெரி
மயிலாய் கவிதையை
ReplyDeleteஒயிலாய் அழகுற-அன்புப் பேரன் பெற்ற பேறுக்கு
அருமையான நல்வாழ்த்துக்கள்.
//குயிலின் இனிமை என்குரலில் - நான்
ReplyDeleteகூட்டிக் காட்ட சிறுவாநீ
பயில வருமென எண்ணாதே - இறைவன்
படைப்பை வெல்ல ஆகாதே!//
உங்கள் பேரனால் எங்களுக்கும் நல்லதொரு கவிதை கிடைத்தது ஐயா. அதுவும் மேலே சொன்ன கடைசி வரிகள்.... உண்மை....
தங்கள் பேரனுக்கு எழுதிய வரிகளில் தங்களின் இளமைக்காலம் இமை முன்னே வந்து செல்கிறது ஐயா ...
ReplyDeleteமயில் என்றாலே சிறுவர்கள் குதுகலமாகிவிடுவார்கள்.. கவிதையில் கலக்கலாக சொல்லி அசத்திவிட்டீர்கள் ஐயா
ReplyDeleteகோகுல் said
ReplyDeleteவாழ்த்துக் கூறிய கோகுல் அவர்களே!
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
id said...
ReplyDeleteவாழ்த்துக்id அவர்களே!
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteவாழ்த்துக் கூறிய சகோதரி அவர்களே!
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteவாழ்த்துக் கூறிய வெங்கட் நாகராஜ் அவர்களே!
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தினேஷ்குமார் said...
ReplyDeleteவாழ்த்துக் கூறிய தினேஷ்குமார் அவர்களே!
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said...
ReplyDeleteவாழ்த்துக் கூறிய வாழ்த்துக் கூறிய மாய உலகம் அவர்களே!
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அவர்களே!
தங்களுக்கு வணக்கம் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மயிலின் இயல்புகளை மனிதனால் வெல்ல முடியாதென்னும் உண்மையினை அருமையாகச் சொல்லி நிற்கிறது உங்கள் கவிதை ஐயா.
ReplyDeleteகவிதை குழந்தைகளுக்கு ஏற்றவாறு படைத்திருக்கிறீர்கள். உங்களின் பேரக்குழந்தைகள்
ReplyDeleteதமிழெனும் அமுதொடு வளரட்டும். வாழ்த்துக்கள்.
அழ வள்ளியப்பா அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ஐயா..