சூழும் இடர்தன்னை சுடர்கண்ட பனியாக்கும்
ஏழுமலை யானே எனையாளும் பெருமாளே
வாழும் நாளெல்லாம் உனைவணங்கி நான்வாழ
பாழும் மனந்தன்னை பதப்படுத்த வேண்டுகிறேன்
அன்னை அலர்மேலு அகிலாண்ட நாயகியே
பொன்னை வேண்டியல்ல பொருளை வேண்டியல்ல
உன்னை வணங்குதற்கே உயிர்வாழ விரும்புகின்றேன்
என்னை ஆட்கொள்வாய் எனையாளும் தாயேநீ
பஞ்சுப் பொதிபோல பரவி வருகின்ற
மஞ்சு தவழ்ஏழு மலையானே கோவிந்தா
தஞ்சம் நீயென்றே தலைவணங்கும் என்போன்றார்
நெஞ்சில் நீங்காது நிலைத்திருக்க வேண்டுகிறேன்
வாழிவாழி யென வானோர்கள் கூத்தாட
ஆழிகடைந் தமுது அளித்தவனே மங்கையர்கள்
தாழிகடைந் தெடுத்த தயிர்வெண்ணை திருடியவர்
தோழி பலர்துரத்த தொடர்ந்தோடி ஒளிந்தவனே
தத்தம் குறையெல்லாம் தடையின்றி நீங்குமென
நித்தம் உனைநாடி நீள்வரிசை தனில்நின்று
சித்தம் மகிழ்வுடனே செப்புகின்ற கோவிந்தா
சத்தம் உன்செவியில் சங்கொலியாய் கேட்கிறதா
வெண்ணை உண்டவாய் விரிய வியனுலகு
தன்னைக் கண்டதாய் தடுமாறி மகிழ்ந்தாட
மண்ணை அளந்தவனே மாபலியின் தலையோடு
விண்ணை அளந்தவனே விமலனே வணங்குகிறேன்
மலையில் வாழ்பவனே மலையை நீதூக்கி
தலையின் மேல்வைத்தே ஆவினத்தை காத்தவனே
அலையில் கடல்மீது ஆனந்தப் பள்ளியென
இலையில் துயின்றவனே இறைவாநான் தொழுகின்றேன்
ஆதிமூல மென்ற அபயக்குரல் வந்துன்
காதில் விழச்சென்று காத்தவனே கோவிந்தா
வீதிதனில் வருவாய் வீழ்ந்து வணங்கிடுவார்
தீதுதனை முற்றும் தீர்த்திடுவாய் கோவிந்தா
எங்கும் உன்நாமம் எதிலும் உன் நாமம்
பொங்கும் உணர்வெல்லாம் போற்றும் திருநாமம்
தங்கும் மனதினிலே தடையின்றி உன்நாமம்
பங்கம் அடையாமல் பாஞ்சாலி காத்ததன்றோ
அம்மை அலர்மேலு அப்பன் திருமலையான்
தம்மை நாள்தோறும் தவறாமல் வணங்கிவரின்
இம்மை மறுமையென எழுபிறவி எடுத்தாலும்
உம்மை மறந்தென்றும் உயிர்வாழ இயலாதே
பாடி முடித்திவிட பரந்தாமா உன்அருளை
நாடி வருகின்றேன் நாயகனே வேங்கடவ
தேடி வருவார்கு திருமலையில் உனைக்காண
கோடிக் கண்வேண்டும் கொடுப்பாயா பரந்தாமா
முற்றும் உன்புகழை முறையாக நான்பாட
கற்றும் பல்லாண்டு காணாது தவிக்கின்றேன்
பற்றும் அற்றவரும் படைக்கின்ற பிரம்மாவும்
சற்றும் அறியாருன் திருவடியும் திருமுடியும்
வேதத்தின் வித்தேயுன் விளையாட்டை யாரறிவார்
நாதத்தின் சத்தேயுன் நாடகத்தை யாரறிவார்
பேதத்தை கொண்டவுள்ளம் பெருமாளே என்போன்றார்
சோகத்தை நீக்குமென சொல்லியிதை முடிக்கின்றேன்
தாங்கும் நிலையில்லா தடைபலவே வந்தாலும்
நீங்கும் படிசெய்யும் நிமலனே நாள்தோறும்
தூங்கும் முன்வணங்கி தூங்கி எழவணங்கும்
வேங்கி தாசன்நான் விடுக்கின்ற விண்ணப்பம்
செல்லும் திசைமாறி சென்றுவிடும் கப்பலென
அல்லும் பகலுமென் அலைகின்ற உள்ளத்தை
கொல்லும் அரவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா
ஒல்லும் வழியெல்லாம் உனைவணங்கச் செய்திடுவாய்
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம்
ஐயா தமிழ்மணம் செட் ஆகிருச்சு
ReplyDelete!!
புரட்டாசியில் வேங்கடவன் துதி பாடி வந்திருக்கிறீர்கள் !
ReplyDelete!வேங்கடவனும் இதைக்கேட்டு இறங்கி வருவான்!
புரட்டாசி சனிக்குப் பொருத்தமான பாடல். பாராட்டுக்கள்.
ReplyDeleteவேங்கடவனுக்கு மிகவும் பிடித்த புரட்டாசி மாதத்தில் பொருத்தமான ஒரு பாடல். அருமையான வரிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...
ReplyDeleteபொருத்தமான பாடல் வரிகள்...ரசித்தேன் புலவரே... ரெவெரி
ReplyDeleteவேங்கடவனுக்கு மிகவும் பிடித்த புரட்டாசி மாதத்தில் பொருத்தமான ஒரு பாடல். அருமையான வரிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...
ReplyDeleteமைந்தன் சிவா sa
ReplyDeleteமகிழ்ச்சி! தம்பீ!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கோகுல் said...
ReplyDeleteநன்றி! கோகுல்!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteநன்றி! வை.கோ!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநன்றி! சகோ!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
id said...
ReplyDeleteநன்றி! சகோ!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said...
ReplyDeleteநன்றி! சகோ!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
இனிய காலை வணக்கம் ஐயா,
ReplyDeleteகோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த பரந்தாமனின் பெருமைகளைப் பக்திச் சுவை நனி சொட்டும் வண்ணம் கவிதையாக வடித்திருக்கிறீங்க.
இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை..
ReplyDeleteநன்றி..
நிரூபன் said...
ReplyDeleteநன்றி! சகோ!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
வேடந்தாங்கல் - கருன் *! said
ReplyDeleteநன்றி! சகோ!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
அன்புநிறை புலவரே,
ReplyDeleteவேங்கடவன் துதி
செவிக்கு இனிமை படைத்தீர்..
படிக்கையிலே பாடியும் பார்த்து விட்டேன்..
அருமை.
மகேந்திரன் said...
ReplyDeleteதங்கள் வலைச் சரப்பணி மிகவும்
அருமை!
ஆகா! அறிமுகந்தோறும் கவிதை
நன்றி! சகோ!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
ஐயா,
ReplyDeleteதிருப்பதி லட்டுபோலத் தித்திக்கும் கவிதை!
சேட்டைக்காரன் said
ReplyDeleteநன்றி! சகோ!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
//வாழிவாழி யென வானோர்கள் கூத்தாட
ReplyDeleteஆழிகடைந் தமுது அளித்தவனே மங்கையர்கள்
தாழிகடைந் தெடுத்த தயிர்வெண்ணை திருடியவர்
தோழி பலர்துரத்த தொடர்ந்தோடி ஒளிந்தவனே
தத்தம் குறையெல்லாம் தடையின்றி நீங்குமென
நித்தம் உனைநாடி நீள்வரிசை தனில்நின்று
சித்தம் மகிழ்வுடனே செப்புகின்ற கோவிந்தா
சத்தம் உன்செவியில் சங்கொலியாய் கேட்கிறதா//
அருமை. மிகவும் லயித்துப் படித்தேன். நன்றியும் பாராட்டும் ஐயா.
வெண்ணை உண்டவாய் விரிய வியனுலகு
ReplyDeleteதன்னைக் கண்டதாய் தடுமாறி மகிழ்ந்தாட
மண்ணை அளந்தவனே மாபலியின் தலையோடு
விண்ணை அளந்தவனே விமலனே வணங்குகிறேன்
ஆஹா.. கொஞ்சு தமிழ்..
உங்களிடம் தமிழ் தங்கி விளையாடுகிறது
கீதா said
ReplyDeleteநன்றி! சகோதரி!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
ரிஷபன் said
ReplyDeleteநன்றி! சகோ!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
அன்பிற்கினிய ஐயா
ReplyDeleteவேங்கடப் பெருமான் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்வாழ்க்கையையும் தர வேண்டுகின்றேன்
கவிப்பால் பருக தொடர்ந்து வருவேன்
நன்றியுடன்
சம்பத்குமார்
Super . . Timing post . . .
ReplyDeleteSuper . . Timing post . . .
ReplyDeleteSuper . . Timing post . . .
ReplyDeleteSuper . . Timing post . . .
ReplyDeleteதுதி அருமையா இருக்குண்ணே!
ReplyDeleteசம்பத்குமார் said...
ReplyDeleteநன்றி! சகோ!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
என் ராஜபாட்டை"- ராஜா said...நன்றி! சகோ!
ReplyDeleteவேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
தங்கள் வலையில் தட்டச்சு செய்தால்
எழுத்துக்கள் வருவதில்லை
கவனிக்க வேண்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
விக்கியுலகம் said...
ReplyDeleteநன்றி! சகோ!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
தமிழ் மனம் ஒட்டு பட்டை சரியில்லை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteமீண்டும் மீண்டும் அழுத்தவேண்டியிருக்கிறது . அது கூட்டலா கழித்தலா என்றுகூட தெரியவில்லை.எப்படி சரி பார்ப்பது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
வேங்கடவன் துதி அருமை ஐயா.
பெரியவரே நலமாய் இருக்கிறீகளா?
ReplyDeleteநீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி ஐயா.
/தத்தம் குறையெல்லாம் தடையின்றி நீங்குமென
நித்தம் உனைநாடி நீள்வரிசை தனில்நின்று
சித்தம் மகிழ்வுடனே செப்புகின்ற கோவிந்தா
சத்தம் உன்செவியில் சங்கொலியாய் கேட்கிறதா/
அருமையான வேண்டுதலோடு துதி நல்லாயிருக்கு ஐயா.
அருமையான கவிதை ஐயா
ReplyDeleteஒதிகை மு.க.அழகிரிவேல் said...
ReplyDeleteநன்றி! சகோ!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
vidivelli said...
ReplyDelete// பெரியவரே நலமாய் இருக்கிறீகளா?
நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி ஐயா//
நலமே சகோ!
நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி!
நன்றி!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
கவி அழகன் said
ReplyDeleteநன்றி!தம்பீ
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
வேதத்தின் வித்தேயுன் விளையாட்டை யாரறிவார்
ReplyDeleteநாதத்தின் சத்தேயுன் நாடகத்தை யாரறிவார்
பேதத்தை கொண்டவுள்ளம் பெருமாளே என்போன்றார்
சோகத்தை நீக்குமென சொல்லியிதை முடிக்கின்றேன்
புரட்டாசி மாதப் பொருத்தமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
புரட்டாசி மாதம் வேங்கடவனை நினைக்க வைத்தீர்கள்
ReplyDeleteமற்ற மாதங்கள் நினைத்தாலும் இந்த மாதம் அவருக்கு தானே ஸ்பெசல்
பகிர்வுக்கு நன்றி ஐயா
இராஜராஜேஸ்வரி said
ReplyDeleteநன்றி! சகோதரி!
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
M.R said...
ReplyDeleteநன்றி!M.R அவர்களே
வேங்கடவன் அருள் பெற வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
செல்லும் திசைமாறி சென்றுவிடும் கப்பலென
ReplyDeleteஅல்லும் பகலுமென் அலைகின்ற உள்ளத்தை
கொல்லும் அரவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா
ஒல்லும் வழியெல்லாம் உனைவணங்கச் செய்திடுவாய்//
சிறப்பான ஆக்கங்கள் செய்திடும் தந்தையாய் உம்புலமை தமிழர்க்கே பயன் செய்யட்டும்
தனிழர் நலன் பேணட்டும் வணங்குகிறேன் ....
அம்மை அலர்மேலு அப்பன் திருமலையான்
ReplyDeleteதம்மை நாள்தோறும் தவறாமல் வணங்கிவரின்
இம்மை மறுமையென எழுபிறவி எடுத்தாலும்
உம்மை மறந்தென்றும் உயிர்வாழ இயலாதே
அருமை.
கோவிந்தா கோவிந்தா
ReplyDeleteவெங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
சங்கட ஹரணா கோவிந்தா....
புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து ஏழுமலையானை வணங்கி மலைஏறி அவனை தரிசனம் கண்டுவந்தால் தீராத வினை எல்லாம் தீர்ந்து ஒரு திருப்புமுனை ஏற்படுமாமே....
அருமையான அழகிய பாமாலையால் வேங்கடவனுக்கு துதி பாடி அவனிடம் பொன்னோ பொருளோ கேட்காமல் ஐயனை என்றும் நினைத்து மனம் மாறாதிருக்கும் அருமையான நிலையை தரும்படி வேண்டிய வரிகள் அத்தனையும் அருமை ஐயா....
நாங்க இந்தியாவில் இருக்கும்போது திருப்பதி போவதை என்றும் மறப்பதில்லை ஐயா.. இங்கிருந்து போகும்போதும் திருப்பதி போவது கண்டிப்பா உண்டு....
போன வருடம் அம்மா தன் பாஸ்போர்ட்டை திருப்பதியில் தொலைத்தபோது எல்லோருமே ஸ்தம்பிச்சு போயிட்டோம் இனி அடுத்து என்னாகும்னு.. ஆனால் பெருமாள் கைவிட்டதில்லையே யாரையும்.... முகம் தெரியாத எத்தனையோ நல்ல உள்ளங்கள் எனக்கு உதவின ஐயா....
அத்தனை சக்தி பெருமாளுக்கு....
அருமையான வேங்கடவன் துதி பாடி எங்கள் மனம் நிறைத்த ஐயா உங்களுக்கு என் அன்பு நன்றிகள்.