இந்திய நாட்டை ஆள்வோரே-ஏக
இந்திய என்றே மகிழ்வோரே
தந்தேன் கடிதம் என்றிங்கே-எம்
தமிழக அரசு சொலவங்கே
வந்தேன் கண்டேன் எனநன்றே-தம்
வருகையை மத்திய அரசின்றே
செந்தமிழ் நாட்டில் உள்ளோரே-செய்தி
செப்பிட மனதில் கொள்வீரே
அஞ்சிய மக்கள் போராட்டம்-மகளிர்
அளவிட இயலா பெருங்கூட்டம்
நஞ்சென அறிந்தும் உண்பாரா-தம்
நல்லுயிர் போகக் காண்பாரா
நெஞ்சில் ஈரம் இல்லோரே-உள்ள
நிலைமைப் புரிந்து கொள்ளாரே
பஞ்சில் பட்ட நெருப்பாகும்-அவை
பற்றினால் ஆள்வோர் பொறுப்பாகும்
வெந்தப் புண்ணில் வேல்கொண்டே-குத்தி
விடுவது போலும் செயல்கண்டே
நொந்து நூலாய்க் கிடக்கின்றார்-உண்ணா
நோன்பும் உறுதியாய் இருக்கின்றார்
வந்துப் போனால் ஆகாதே-வாய்
வார்த்தையும் நம்பிட ஆகாதே
எந்தப் புற்றில் பாம்பென்றே-மக்கள்
எண்ணிட இயலா நிலையின்றே
புலவர் சா இராமாநுசம்
கவிதை அருமை அய்யா புரிந்து கொண்டேன் நன்றி!
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDeleteநன்றி விக்கி அவர்களே!
புரிந்து கொண்டேன் நன்றி! என்பதை
நானும் புரிந்து கொண்டேன்! மேலும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Super kavithai
ReplyDeleteபஞ்சில் பட்ட நெருப்பாகும்-அவை
ReplyDeleteபற்றினால் ஆள்வோர் பொறுப்பாகும்
புரிய வேண்டிய கவிதை.
"என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDeleteநன்றி ராஜா
புலவர் சா இராமாநுசம்
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteநன்றி சகோதரி
புலவர் சா இராமாநுசம்
செமையா சாட்டையை சுழட்டி இருக்கீங்க புலவரே....!!!
ReplyDeleteபுரிந்து கொள்வோர் புரிந்து கொண்டால் நலம்...
ReplyDeleteஉங்கள் பதிவை எனது பேஸ்புக், டுவிட்டரில் போட்டுவிட்டேன் புலவரே...
ReplyDeleteஅந்தந்த நாளில் மனதைப் பாதிக்கும்
ReplyDeleteநிகழ்வுகளை அருமையான கவியாகித்
தருவதை மிக அழகாகச் செய்கிறீர்கள்
பதிவர்களுக்கு உத்வேகம் ஊட்டியமாதிரியும் ஆச்சு
அழகு தமிழைக் கற்றுக் கொடுத்தது போலும் ஆச்சு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4
MANO நாஞ்சில் மனோ said
ReplyDeleteநன்றி மனோ
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete// புரிந்து கொள்வோர் புரிந்து கொண்டால் நலம்//
உண்மை தான் மனோ! ஆனால் ஏதோ
கண்துடைப்பு நாடகமோ?
ஐயமாக உள்ளது
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete// உங்கள் பதிவை எனது பேஸ்புக், டுவிட்டரில் போட்டுவிட்டேன் புலவரே...//
நன்றி மனோ
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteநன்றி சகோ!
நேற்று பாலாவோடு தொலைபேசி
வழியே தொடர்பு கொண்டேன் அவர் நலமுடன்
இருப்பதாவும் சொன்னார் மத்திய அமைச்சர்
வந்தால் தெரியு மென்றார்
ஆனால் இன்று..
நாடகமாகத் தெரிகிறது
மேலும் வலை வேறு நேற்றிலிருந்து
முறையாக இயங்கவில்லை
ஓட்டு போடுவது சில போவதுமில்லை
வருவது பதிவாவதும் இல்லை
புலவர் சா இராமாநுசம்
வணக்கமையா நல்ல சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்.... இவர்கள் வேண்டுமென்றே புரியாது போல் நடிக்கின்றார்களா..!!? இல்லை அழிந்தால் தமிழ்நாடுதானேன்னு எங்களை புறக்கணிக்கிறார்களா..!!? கவிதைப்பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteமண் உணர்வுக் கவிதை ஐயா! நல்லது நடக்கட்டும். வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
ஒரு நிகழ்வை சட்டுனு கவிதையாக்கி படைத்துவிடும் திறமையை கண்டு வியக்கிறேன் ஐயா...
ReplyDeleteஇன்று எங்கும் இதே பேச்சு... நெஞ்சென்று தெரிந்து அதை உண்பாரோ? உண்மை தானே?
எல்லோருமே போராடிக்கொண்டே இருக்கிறார்கள்...
சும்மா ஆசை வார்த்தை காண்பித்து நம்பவைத்து கழுத்தறுக்கும் இவர்களை எப்படி நம்புவதுன்னு நச் வரிகளால் ரொம்ப அருமையா கேட்டிருக்கீங்க ஐயா?
உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது ஐயா?
அருமையான அசத்தல் வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துகள் ஐயா...
நஞ்சென்று என்பது தவறாக பதித்துவிட்டேன் மன்னிக்க ஐயா...
ReplyDeleteகாட்டான் said...
ReplyDeleteநன்றி காட்டான் அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
kovaikkavi said...
ReplyDeleteநன்றி சகோதரி அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி சகோதரி அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteதவறில்லை!
தட்டச்சு செய்யும் போது
இவ்வாறு அனைவருக்கும் நேர்வதுண்டு
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
இனிய காலை வணக்கம் ஐயா,
ReplyDeleteமக்களின் துன்பத்தினைப் பார்த்தும், பாராமுகமாய் இருப்போரையும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று துன்பமிழைப்போரையும் நன்றாகச் சாடியுள்ளீர்கள்.
காலத்திற்கேற்ற கவிதை.
நிரூபன் said
ReplyDeleteஇனிய காலை வணக்கம் நிரூ!
அனுபினேன் வந்ததா
வாழ்த்துக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
உண்ணாவிரத போராட்டம் பற்றி குறிப்பிட்டு இருக்கீங்க புலவரே... கேட்கிறவர்களுக்கு கண்டிப்பாக கேட்கும்.
ReplyDeleteசாட்டையடி பதிவு,,
ReplyDeleteபோராட்டம் வெற்றிபெற்றதான்னு தெரியல..
இதிலும் அரசியல்...
அருமை .
ReplyDeleteஅன்றைய நிகழ்வுகளை உடனே கவிதையாக்கும் உங்களுக்கு எனது வணக்கங்கள். புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.....
ReplyDeleteஆதங்க கவிதை கலக்கல் ஐயா... புரிந்துகொண்டோம்
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said
ReplyDeleteநன்றி தமிழ்வாசி அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteநன்றி வேடந்தாங்கல் அவர்களே!
இதிலும் அரசியல்... ?
எந்தப் புற்றில் பாம்பென்றே-மக்கள்
எண்ணிட இயலா நிலையின்றே
புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteநன்றி!நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete// புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால்//
உண்மைதான் நண்பரே
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said...
ReplyDelete// ஆதங்க கவிதை கலக்கல் ஐயா... புரிந்துகொண்டோம்//
என் கவிதையின் இறுதி இரண்டு
வரிகள்.....
நன்றி! மாய!
புலவர் சா இராமாநுசம்
நன்மை தீது யாதென்றே-இனி
ReplyDeleteநாட்டின் மக்கள் புரிந்திட்டே
இன்மை தன்னை நீக்கிடவே-பெரும்
இசைவுடன் ஒன்றிக்கருதிட்டால்
தொன்மை மிக்க நம்நாட்டில்-இனி
தொடராதன்றோ வறுமை நிலை
பன்மை கொண்ட பாரதமே-பெரும்
பாரில் உயரும் புகழுடனே!
சேட்டைக்காரன் said
ReplyDeleteஒற்றுமை ஒன்றே ஆயுதமே-நண்ப
உரைத்த தேன்செவி பாயுதமே
கற்றவர் கல்லார் என்றில்லை-நம்
கருத்தெனில் வாரா ஒருதொல்லை
நற்றமிழ்க் கவிதை தந்தீரே-நான்
நன்றி நவிலவும் வந்தீரே
பெற்றது அளவில் மகிழ்வேதான்-மீண்டும்
பெற்றிட தருவதும் வருகைதான்
புலவர் சா இராமாநுசம்
//
ReplyDeleteவெந்தப் புண்ணில் வேல்கொண்டே-குத்தி
விடுவது போலும் செயல்கண்டே
நொந்து நூலாய்க் கிடக்கின்றார்-உண்ணா
நோன்பும் உறுதியாய் இருக்கின்றார்//
அருமையான வரிகள்
அன்புநிறை புலவரே,
ReplyDeleteநிகழ்வுகளை மலர்களாக்கி
இடையின்றி கோர்த்து
அழகான மாலையாக்கி இருக்கிறீர்கள்.
புரிய வேண்டியவர்களுக்கு புரியட்டும்.. விரைவில்..
தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த
வாய்ப்பு கிடைத்தமைக்கு மனம் மகிழ்கிறேன்.
இணைப்பு..
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_22.html
அருமை...
ReplyDeleteஇன்குலாப் ஜிந்தாபாத்
இன்றைய பிரச்சினைக்கான நல்ல கவிதை.
ReplyDeleteஎன் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteநன்றி ராஜா அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteசகோ!
வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தி
விட்டு வலைவந்து வாழ்த்தும் தந்துள்ளீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!பித்தரே நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சாடும் கவியிலும் சந்தத்தமிழ்! எத்தனை உவமைகளால் உண்மை நிலையினை விளக்கியுள்ளீர்கள்! நாட்டு நடப்பினை நற்றமிழ்க் கவிதையாக்கும் வல்லமை கண்டு வியந்து பாராட்டுகிறேன் ஐயா.
ReplyDeleteவெற்றிக்கான முதல் கதவு திறந்ததாக தெரிகிறது.
ReplyDeleteபுரிந்து கொள்வோர் புரிந்து கொண்டால் நலம்...ஆதங்க கவிதை கலக்கல்...ரெவெரி
ReplyDeleteபஞ்சில் பட்ட நெருப்பாகும்-அவை
ReplyDeleteபற்றினால் ஆள்வோர் பொறுப்பாகும்
புரிய வைத்த வரிகள்.
//பஞ்சில் பட்ட நெருப்பாகும்-அவை
ReplyDeleteபற்றினால் ஆள்வோர் பொறுப்பாகும்//
புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
நல்ல கவிதை - பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
தமிழ்மணம் 14 to 15
ReplyDeleteகீதா said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!சகோதரி நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கோகுல் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
id said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ரிஷபன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!ஐயா நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஒட்டுக்கு நன்றி!ஐயா!
புலவர் சா இராமாநுசம்