நல்லவரே உள்ளாட்சி தேர்தலிங்கே-பதவி
நாற்காலி போட்டிதான் பாரும்நன்கே
சொல்லமனம் கூசுதையா பேசிப்பங்கே-தாம்
சொன்னதற்கு மாறாக சொல்லியங்கே
வெல்லவழி போடுகின்றார் ஆளக்கூட்டே-அட
வெட்கமின்றி கேட்பாராம் தினமும் ஓட்டே
கள்ளஓட்டு போடுவதும் உண்டேஉண்டு-எல்லா
கட்சிகளும் செய்யுமந்த தொண்டேதொண்டு
ஒட்டிகிட்ட கட்சிகளே உதிரியாச்சே-இன்று
உதறஅம்மா உதறஐயா உண்மையாச்சே
வெட்டுகுத்து ஊர்தனிலே நாளுமாகும்-உள்ள
வீதியிலே வீட்டுக்கொரு சண்டையாகும்
பெட்டிவரும் சாதிவரும் ஓட்டுகேக்க- போட்டி
போடவேண்டி உறவுகளே பகையநோக்க
பட்டுபோன்ற நட்புகூட கசந்துபோகும்-பாழும்
பதவிஎன்ற பேய்பிடிக்க கிராமமாகும்
ஊற்றாக ஊழலிங்கே பெருகயாரும்-இங்கே
ஊராள வந்தாலும் என்னதேறும்
மாற்றமென்ன கேட்பாரே நாளுமவரே-இனி
மனமாற வழியுண்டா செயின்தவறே
ஆற்றல்மிகு நல்லவர்கள விலகிப்போக-கட்சி
ஆட்களின் சொல்லேதான் சட்டமாக
தோற்றவரும் வென்றவரும தினமேசண்டை
தொடராக செய்வாராம் ஆளும்தொண்டை
வீணாக எதற்கிங்கே தேர்தல்வேண்டும்-நல்ல
விலைதன்னில் வாங்கிடவே பதவித்துண்டும்
காணாத காட்சியா நாமும்முன்னால்-வீண்
கதையல்ல காண்போமே இதனைப்பின்னால்
நாணாத உள்ளத்தை வளர்த்துவிட்டோம்-எது
நடந்தாலும் நமக்கென்ன என்றேகெட்டோம்
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
தூயதொரு ஆட்சியும் இன்றேல்வீணே
நாற்காலி போட்டிதான் பாரும்நன்கே
சொல்லமனம் கூசுதையா பேசிப்பங்கே-தாம்
சொன்னதற்கு மாறாக சொல்லியங்கே
வெல்லவழி போடுகின்றார் ஆளக்கூட்டே-அட
வெட்கமின்றி கேட்பாராம் தினமும் ஓட்டே
கள்ளஓட்டு போடுவதும் உண்டேஉண்டு-எல்லா
கட்சிகளும் செய்யுமந்த தொண்டேதொண்டு
ஒட்டிகிட்ட கட்சிகளே உதிரியாச்சே-இன்று
உதறஅம்மா உதறஐயா உண்மையாச்சே
வெட்டுகுத்து ஊர்தனிலே நாளுமாகும்-உள்ள
வீதியிலே வீட்டுக்கொரு சண்டையாகும்
பெட்டிவரும் சாதிவரும் ஓட்டுகேக்க- போட்டி
போடவேண்டி உறவுகளே பகையநோக்க
பட்டுபோன்ற நட்புகூட கசந்துபோகும்-பாழும்
பதவிஎன்ற பேய்பிடிக்க கிராமமாகும்
ஊற்றாக ஊழலிங்கே பெருகயாரும்-இங்கே
ஊராள வந்தாலும் என்னதேறும்
மாற்றமென்ன கேட்பாரே நாளுமவரே-இனி
மனமாற வழியுண்டா செயின்தவறே
ஆற்றல்மிகு நல்லவர்கள விலகிப்போக-கட்சி
ஆட்களின் சொல்லேதான் சட்டமாக
தோற்றவரும் வென்றவரும தினமேசண்டை
தொடராக செய்வாராம் ஆளும்தொண்டை
வீணாக எதற்கிங்கே தேர்தல்வேண்டும்-நல்ல
விலைதன்னில் வாங்கிடவே பதவித்துண்டும்
காணாத காட்சியா நாமும்முன்னால்-வீண்
கதையல்ல காண்போமே இதனைப்பின்னால்
நாணாத உள்ளத்தை வளர்த்துவிட்டோம்-எது
நடந்தாலும் நமக்கென்ன என்றேகெட்டோம்
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
தூயதொரு ஆட்சியும் இன்றேல்வீணே
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
ReplyDeleteதூயதொரு ஆட்சியும் இன்றேல்வீணே..
உண்மைதான் புலவரே..
புலவரே தொடர்புடைய இடுகை..
ReplyDeleteதேர்தல்..
http://gunathamizh.blogspot.com/2011/03/blog-post_26.html
உணர்ச்சியற்ற சமூகத்தின் நிலையை அழகாய்ச் சொல்லும் கவிதை..
ReplyDeleteநாற்காலி..
http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_13.html
நடக்கப்போகும் அணைத்து கூத்துகளையும்
ReplyDeleteபுட்டுப்புட்டு வைத்தீர்கள்!
உங்கள் நடையில் படிக்கும்போது அருமை!
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
ReplyDeleteதூயதொரு ஆட்சியும் இன்றேல்வீணே...
யார் வந்தாலும் வீண் தான் புலவரே...
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteநன்றி முனைவரே!
புலவர் சா இராமாநுசம்
உண்மையான வரிகள் .
ReplyDeleteநாணாத உள்ளத்தை வளர்த்துவிட்டோம்-எது
ReplyDeleteநடந்தாலும் நமக்கென்ன என்றேகெட்டோம்
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
தூயதொரு ஆட்சியும் இன்றேல் வீணே
இன்றைய சூழலையும் தீர்வையும் சொல்லிச் செல்லும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
முனைவர்.இரா.குணசீலன் said
ReplyDeleteஇதுவும் நல்ல கவிதை
நன்றி முனைவரே!
புலவர் சா இராமாநுசம்
//பட்டுபோன்ற நட்புகூட கசந்துபோகும்-பாழும்
ReplyDeleteபதவிஎன்ற பேய்பிடிக்க கிராமமாகும்//
முற்றிலும் உண்மை அய்யா..
முனைவர்.இரா.குணசீலன் said
ReplyDeleteபொன்னா வாக்குகள்
பொன்போன்ற வார்த்தைகள்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கோகுல் said...
ReplyDeleteமனங்கனிய வாழ்த்தினீர்
நன்றி!சகோ!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஉள்ளுவ தெல்லாம் உயர் உள்ளல்
சகோ!
புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteஇன்றைய சூழலையும் தீர்வையும் சொல்லிச் செல்லும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கருத்துரை வழங்கி வாழ்த்தினீர் இரமணி
நன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
குடிமகன் said...
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
சத்தியமான வரிகள் புலவரே....!!!
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
ReplyDeleteதூயதொரு ஆட்சியும் இன்றேல்வீணே..
சரியாக கவிதையில் புகட்டியுள்ளீர்கள் புலவர் ஐயா! நன்றி.
///ஊற்றாக ஊழலிங்கே பெருகயாரும்-இங்கே
ReplyDeleteஊராள வந்தாலும் என்னதேறும்
மாற்றமென்ன கேட்பாரே நாளுமவரே-இனி
மனமாற வழியுண்டா செயின்தவறே///
ஊழலற்ற ஆட்சியைத்தானே நாம எல்லோரும் எதிர்பார்க்கிறோம்...
பாழும் ஊழலை விடுத்து நல்லாட்சி புரிவோரை இனிதே வரவேற்கும் கவிதை...
நன்று புலவரே....
ஃஃஃஃஒட்டிகிட்ட கட்சிகளே உதிரியாச்சே-இன்று
ReplyDeleteஉதறஅம்மா உதறஐயா உண்மையாச்சேஃஃஃஃ
காலத்திற்கேற்ற கண்ணியமன வரிகள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்
//ஆற்றல்மிகு நல்லவர்கள விலகிப்போக-கட்சி
ReplyDeleteஆட்களின் சொல்லேதான் சட்டமாக
தோற்றவரும் வென்றவரும தினமேசண்டை
தொடராக செய்வாராம் ஆளும்தொண்டை//
நிகழ்காலம்!
//தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
தூயதொரு ஆட்சியும் இன்றேல்வீணே//
எதிர்க்காலம்!
சிறந்த படைப்பு.
மாய உலகம் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
♔ம.தி.சுதா♔ said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
சத்ரியன் said...
ReplyDeleteஎதிர்க்காலம்!கேள்விக் குறிதான்
சத்ரியன்
என்றாலும்
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ember 2011
//பட்டுபோன்ற நட்புகூட கசந்துபோகும்-பாழும்
ReplyDeleteபதவிஎன்ற பேய்பிடிக்க கிராமமாகும்//
நூறு சதவீதம் உண்மை ஐயா.
காலத்தின் கண்ணாடியை கவி வரிகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
காந்தி பனங்கூர் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
கவி அழகன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மக்களினை ஏமாற்றித் தமது வெற்றியினை மாத்திரம் குறிக்கோளாக்கிச் செயற்படும் அரசியல்வாதிகளுக்கான அடுத்த சந்தர்ப்பமாக அமையவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் பற்றிய அருமையான கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
ReplyDeleteநாட்டு நடப்பை எடுத்துச் சொல்லும் வரிகளில் தெறிக்கிறது உங்கள் ஆதங்கம். அதுவே அனைவருக்கும் விழிப்புணர்வு உண்டாக்கும் விதமாகவும், எதிர்கால நம்பிக்கைக்குப் பற்றுக்கோலாகவும் அமைகிறது. பாராட்டுக்கள் ஐயா.
ReplyDeleteநிரூபன் said...
ReplyDeleteஇன்னும் பல கூத்துகள் நடக்கும்
பார்க்கத்தான் போகிறீர்கள்
நன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
கீதா said...
ReplyDeleteஎத்தனை சொன்னாலும் விழிப்புணர்வு உண்டாகும் என்று நம்புவதற்கு இடமில்லை
சகோதரி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்