பற்றி எரியுது கூடங்குளம்-ஆய்ந்து
பாரா மத்தியில் ஆளுமினம்
சற்றும் அதனை எண்ணாமே-பலர்
சாகும் வரையில் உண்ணாமே
முற்ற விடுவது முறைதானா-காந்தி
முறைப்படி அறப்போர் குறைதானா
கற்றமே பாடம் போதாதா-ஜப்பான்
காட்டியும் புத்தி வாராதா
கேளாக் காதாய் செவிமூட-வரும்
கேட்டைச் சொல்லியும் வாய்மூட
வாளாய் இருப்பது நன்றல்ல-இதை
வளர்ந்த நாடுகள் பலசொல்ல
நாளாய் பயந்து அங்குள்ளோர்-இன்று
நடத்தும் போரில் பங்குள்ளார்
தாளாத் துயரில் தவிக்கின்றார்-மகளிர்
தரையிலும் துவண்டு கிடக்கின்றார்
உண்ணா விரதம் இருப்பதென்ன-தம்
உடலை வருத்தி கொள்வதற்கா
அண்ணா வழியில் ஆள்வோரே-இதில்
அலட்சியம் வேண்டாம் மாள்வாரே
கண்ணா மூச்சி விளையாட்டா-வழி
காண்டே உடனதைக் களையாட்டா
மண்ணே ஆகும் சுடுகாடே-பெரும்
மக்கள் திரண்டால் வரும்கேடே
மத்திய மாநில அரசுகளே-அந்த
மக்கள் உயிரைக் காப்பீரே
கத்தியின் மேலே நடக்காதீர்-மேலும்
காலத்தை வீணில் கடத்தாதீர்
உத்மர் காந்தி அறவழியே—இன்று
உள்ளவர் மனதைப் பிறவழியே
சித்தமே செல்ல விடுவீரா-உம்
செயலால் நீரே கெடுவீரா
பாரா மத்தியில் ஆளுமினம்
சற்றும் அதனை எண்ணாமே-பலர்
சாகும் வரையில் உண்ணாமே
முற்ற விடுவது முறைதானா-காந்தி
முறைப்படி அறப்போர் குறைதானா
கற்றமே பாடம் போதாதா-ஜப்பான்
காட்டியும் புத்தி வாராதா
கேளாக் காதாய் செவிமூட-வரும்
கேட்டைச் சொல்லியும் வாய்மூட
வாளாய் இருப்பது நன்றல்ல-இதை
வளர்ந்த நாடுகள் பலசொல்ல
நாளாய் பயந்து அங்குள்ளோர்-இன்று
நடத்தும் போரில் பங்குள்ளார்
தாளாத் துயரில் தவிக்கின்றார்-மகளிர்
தரையிலும் துவண்டு கிடக்கின்றார்
உண்ணா விரதம் இருப்பதென்ன-தம்
உடலை வருத்தி கொள்வதற்கா
அண்ணா வழியில் ஆள்வோரே-இதில்
அலட்சியம் வேண்டாம் மாள்வாரே
கண்ணா மூச்சி விளையாட்டா-வழி
காண்டே உடனதைக் களையாட்டா
மண்ணே ஆகும் சுடுகாடே-பெரும்
மக்கள் திரண்டால் வரும்கேடே
மத்திய மாநில அரசுகளே-அந்த
மக்கள் உயிரைக் காப்பீரே
கத்தியின் மேலே நடக்காதீர்-மேலும்
காலத்தை வீணில் கடத்தாதீர்
உத்மர் காந்தி அறவழியே—இன்று
உள்ளவர் மனதைப் பிறவழியே
சித்தமே செல்ல விடுவீரா-உம்
செயலால் நீரே கெடுவீரா
விரைவில் நல்ல முடிவு வர வேண்டும்.நல்ல கவிதை.
ReplyDeleteஅருமை .
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDelete//மத்திய மாநில அரசுகளே-அந்த
ReplyDeleteமக்கள் உயிரைக் காப்பீரே
கத்தியின் மேலே நடக்காதீர்-மேலும்
காலத்தை வீணில் கடத்தாதீர்//
சீக்கிரம் அவர்களின் காதை சென்றடைந்து போரட்டத்திற்கு ஓர் வெற்றி கிடைக்கட்டும் ஐயா
நட்புடன்
சம்பத்குமார்
This comment has been removed by the author.
ReplyDeleteஉத்மர் காந்தி அறவழியே—இன்று
ReplyDeleteஉள்ளவர் மனதைப் பிறவழியே
சித்தமே செல்ல விடுவீரா-உம்
செயலால் நீரே கெடுவீரா
மிகச் சரியான அறிவுரை
ஆளுவாரோரின் காதில் ஏறுமா
அரசு கோடிக்கால் கொண்ட பூதமென்றாலும்
அதன் காது எப்போதுமே செவிடல்லவா
த.ம 3
என்ன ஐயா சவுக்கியமா
ReplyDeleteஎப்படி உங்களால முடியுது இப்படி
எல்லா விடயத்தையும் கவிதையிலேயே சொல்லிரிங்க
போராட்டம் வெற்றி பெரும்...வீரியக்கவிதை அய்யா...ரெவரி...
ReplyDeleteவணக்கமையா அணுமின் நிலையத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்போருக்கு ஆதரவாய் உங்கள் கவிதை கைகொடுக்கின்றது.. நூறாவது பதிவுக்கு என்னால் பின்னூட்டமிடமுடியவில்லை இப்போது அக்கவிதையையும் பின்னூட்டங்களையும் வாசித்தேன் அப்பப்பா உங்கள் மீது எவ்வளவு பேர் பாசம் வைத்துள்ளார்கள்.. அதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா... வாழ்த்துக்கள்
ReplyDeleteபுலவரே கடும் போடா போடால்ல போட்டுருக்கீங்க அருமை, அண்ணா வழியில் ஆள்வோரே கவனிக்கவும், அப்புறமா புலவரை அறம் பாட வச்சிராதீங்க அழிஞ்சி போவீங்க...
ReplyDeleteசித்தம் மயங்காது
ReplyDeleteசிந்தித்து செயல்படுவீரே.....
சிந்திக்கட்டும் செயலாற்றுவோர்....
கத்தியின் மேலே நடக்காதீர்-மேலும்
ReplyDeleteகாலத்தை வீணில் கடத்தாதீர்
காலத்துக்கு ஏற்ற கவிதை
மிக அழகாகச் சொன்னீர்கள் புலவரே..
காலம் பதில் சொல்லட்டும்!!
காத்திருப்போம்!!
101வது பதிவிற்கு வாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteநல்ல முடிவு பிறக்கட்டும்.
சென்னை பித்தன் said
ReplyDeleteவிரைவில் நல்ல முடிவு வர வேண்டும்.நல்ல கவிதை
தங்கள் வாக்கு பலிக்கட்டு ஐயா
புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு sa
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
Rathnavel said...
ReplyDeleteநன்றிஐயா
புலவர் சா இராமாநுசம்
!
சம்பத்குமார் said...
ReplyDeleteசீக்கிரம் அவர்களின் காதை சென்றடைந்து போரட்டத்திற்கு ஓர் வெற்றி கிடைக்கட்டும் ஐயா
நன்றிஐயா! நல்லது நடகும்
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteமிகச் சரியான அறிவுரை
ஆளுவாரோரின் காதில் ஏறுமா
அரசு கோடிக்கால் கொண்ட பூதமென்றாலும்
அதன் காது எப்போதுமே செவிடல்லவா
உண்மைதான் சகோ!
புலவர் சா இராமாநுசம்
கவி அழகன் said...
ReplyDeleteஎப்படி உங்களால முடியுது இப்படி
எல்லா விடயத்தையும் கவிதையிலேயே சொல்லிரிங்க
தமிழ் தந்த பேறு தம்பீ!
புலவர் சா இராமாநுசம்
காட்டான் said...
ReplyDeleteஇப்போது அக்கவிதையையும் பின்னூட்டங்களையும் வாசித்தேன் அப்பப்பா உங்கள் மீது எவ்வளவு பேர் பாசம் வைத்துள்ளார்கள்.. அதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா... வாழ்த்துக்கள்
நன்றி! நன்றி! நன்றி!
தமிழ் தந்த பேறு காட்டான்!
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteநன்றி! மனோ!
தாங்கள் இது பற்றி எழுதிய பதிவை
படித்தேன் பார்த்தீரா
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said
ReplyDeleteசிந்திக்கட்டும் செயலாற்றுவோர்
நன்றி! சகோ!
இக்கவிதைக்கு கருவே உங்கள் கவிதைதானே
நான் அதைப் படித்து விட்டு கருத்துரை
எழுதிய கவிதை தானே காரணம்
புலவர் சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said
ReplyDeleteகாலம் பதில் சொல்லட்டும்!!
காத்திருப்போம்!!
போராட்டம் வெற்றி பெறும்
புலவர் சா இராமாநுசம்
செங்கோவி said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும்
நன்றி!
நல்ல முடிவு பிறக்கட்டும் என்ற தங்கள்
நம்பிக்கை வீண் போகாது
புலவர் சா இராமாநுசம்
கத்தியின் மீது நடக்காதீர்கள்!
ReplyDeleteபுத்தியில் உரைக்கும் படி சொன்னீர்கள்!
தங்கள் பங்களிப்பிற்கு நன்றி ஐயா!
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
ReplyDeleteஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
கோகுல் said...
ReplyDeleteநன்றி கோகுல் அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said
ReplyDeleteமிக்க நன்றி! மாய அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
கவி வழியில் போராட்டம்...
ReplyDeleteஎன் வலையில்:
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteநன்றி சகோ!
வலை வந்தேன் கருத்துரைத் தந்தேன்
புலவர் சா இராமாநுசம்
//கற்றமே பாடம் போதாதா-ஜப்பான்
ReplyDeleteகாட்டியும் புத்தி வாராதா//
நடந்ததை அறிந்தும், ஆபத்தை உணராத
ஆள்வோரின் செவிப்பறை கிழியும் வரை
குன்றக்கூடாது நம் முழக்க ஒலி
எழுச்சி மிகு கவிதை
ReplyDeleteபோராட்டம் வெற்றி பெறட்டும்.
பகிர்வுக்கு நன்றி ஐயா
சத்ரியன் said
ReplyDeleteநடந்ததை அறிந்தும், ஆபத்தை உணராத
ஆள்வோரின் செவிப்பறை கிழியும் வரை
குன்றக்கூடாது நம் முழக்க ஒலி
பதிவுலகம் அளவிற்கு மற்ற தெலைக் காட்சிகள்
செய்தித் தாள்கள் இதற்கு பெரிதாக முக்கியத்துவம்
தரவில்லை என்பது வருந்தத் தக்கது
புலவர் சா இராமாநுசம்
M.R said...
ReplyDeleteபோராட்டம் வெற்றி பெறட்டும் என்ற
தங்கள் ஆசை நிறைவேற வேண்டும் நம் பாலா
அவர்களும் கலந்து கொண்டுள்ளார்
மனம் பதட்டமாக உள்ளது சகோ!
புலவர் சா இராமாநுசம்
போராட்டம் நிச்சயம் வெற்றியை பெறும்
ReplyDeleteஐயா எனது இன்றைய பதிவில் இப்பதிவிற்கு இணைப்பு கொடுத்துள்ளேன்
ReplyDeleteநட்புடன்
சம்பத்குமார்
வைரை சதிஷ் said...
ReplyDeleteமுதல் வருகைக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும்
நன்றி!சகோ!
புலவர் சா இராமாநுசம்
சம்பத்குமார் said.
ReplyDeleteவலை வந்து பார்த்தேன்!
நன்றி!சகோ!
புலவர் சா இராமாநுசம்
மத்திய மாநில அரசுகளே-அந்த
ReplyDeleteமக்கள் உயிரைக் காப்பீரே
கத்தியின் மேலே நடக்காதீர்-மேலும்
காலத்தை வீணில் கடத்தாதீர்//
மிக சிறப்பான விற்கள் ஐயா உளம் நிறைந்த பாராட்டுகள் இந்த அரசுகள் ஆட்சி செய்வது மக்களுக்கா அல்லது வேருயாருக்காக என்பதுதான் புரியவில்லை சப்பான் முதற்கொண்டு எல்லா நாடுகளுமே இதன் தாக்கத்தினால் பதிப்பு அடைந்து உள்ளது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மைகள் ஆகும் இடுக்கைக்கு பாராட்டுகள் நன்றி ...
போராட்டம் நிச்சயம் வெல்லும் .
ReplyDeleteவாய்மையே வெல்லம்....
அருமை...
ReplyDeleteகேளாக் காதாய் செவிமூட-வரும்
ReplyDeleteகேட்டைச் சொல்லியும் வாய்மூட
வாளாய் இருப்பது நன்றல்ல-இதை
வளர்ந்த நாடுகள் பலசொல்ல//
ஒவ்வொருவரும் வாய்மூடி வாளாதிருந்தால், நடப்பவை என்றும் நடந்து கொண்டே இருக்கும். சொல்லவேண்டியதை, சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லிவிடல் மனிதன் கடமை. அதை தெளிவுறக் கவிதையில் தெளிவுபடுத்திய கவி வித்தகரே வாழ்க! வாழ்த்துகள். வாய்மூடி மௌனிகளை வாழ்த்தும் உலகு. ஆனால், வாழும் வழி உரக்கச் சொல்பவரைத் தூற்றும் உலகு. ஆனால், யாமொரு குழமாய் இணைந்துள்ளோம். உங்கள் எழுத்துக்களை வாழ்த்த என்றும் தொடர்ந்திருப்போம். வார்த்தைகளுக்கு அடிபணிவோம்.
உணர்வுகளைத் தட்டியெழுப்பும் அற்புதக் கவிதை. மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கப்படுமா? ஆள்வோர் சிந்திப்பாரா?
ReplyDeleteமாலதி said...
ReplyDeleteநன்றி!மகளே!
புலவர் சா இராமாநுசம்
விஜயன் said...
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும்
நன்றி!சகோ!
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும்
நன்றி!சகோ!
புலவர் சா இராமாநுசம்
சந்திரகௌரி said
ReplyDeleteவாழ்த்துக்கும் கருத்துக்கும்
நன்றி!சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
கீதா said...
ReplyDeleteவாழ்த்துக்கும் கருத்துக்கும்
நன்றி!சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும்
நன்றி!சகோ!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் ஐயா
ReplyDeleteகடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
வர முடியலை...
எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.
மன்னிக்க வேண்டும்!
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலான மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியினையும், பாராமுகமாய் இருக்கும் அரசின் நிலையினையும் உரைத்து நிற்கிறது இக் கவிதை..
ReplyDeleteஅரசின் மனம் இம் மக்களுக்காய் மாறாதா எனும் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தி நிற்கிறது இக் கவிதை.