Tuesday, September 13, 2011

குறள் வழி ஈகை

 
சாதலே மிகவும் இன்னாது-என
சாற்றிய வள்ளுவன் மாற்றியதை
ஈதல் இயலா தென்றாலே-அதுவும்
இனிதெனச் சொல்லிப் போற்றியதை
காதில் வாங்கி நடப்பீரா-ஏழைக்
கண்ணிர் தன்னைத் துடைப்பீரா
ஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா
இன்பம் காணும் சுகவாழ்வே

பெற்றான் பொருளைக் காப்பாக-அதனைப்
பேணிக் காக்கும் நோக்காக
அற்றார் அழிபசி தீர்ப்பீரே -பெரும்
அறமென செல்வம் சேர்ப்பீரே
உற்றார் இல்லார் உறவில்லை-பசி
உற்றார் எவரோ? கணக்கில்லை
நற்றா யாக ஏற்றிடுவீர்-நாளும்
நற்பணி யாகவே ஆற்றிடுவீர்

ஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில்
ஈடில் ஒன்றென அறியாதான்
பார்த்துப் பார்த்துப் பொருள்தேடி-அதை
பதுக்க பாவம்! மண்மூடி
காத்திருந் தவன் கைபற்ற-அந்தோ
காணா தவன்கண் நீர்வற்ற
சேர்த்தேன் அனைத்தும் என்னபலன்-வீணே
சென்றதே இன்று கண்டபல

புலம்பி அழுதால் வந்திடுமா-போன
பொருளும் பாடம் தந்திடுமா
விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே
விவேகம்! உணரின் நீர்வெல்வீர்
தளும்பா நிறைகுட நிலைபெற்றே-எதுவும்
தனக்கென வாழா உளம்பெற்றே
அழுவார் துயரைப் போக்கிடுவீர்-அவர்
அன்பை நெஞ்சில் தேக்கிடுவீர்

54 comments :

  1. இனிய காலை வணக்கம் ஐயா,
    இருங்கள் படிச்சிட்டு வாரேன்.

    ReplyDelete
  2. திருக்குறளுக்கு ஒரு அழகான மணிமகுடம்! சிறப்பான கவிதை!‌

    ReplyDelete
  3. கொடையினைச் சிறப்பித்துக் கூறும் குறலாதன் பண்பினை விருத்தத்தில் விருந்தாகத் தந்துள்ளீர்கள் ஐயா.
    நல்ல கருத்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல கருத்துகள்... அழகிய கவிதை.

    ReplyDelete
  5. "அகப்பொருள் கொன்றே புறப்பொருள் சேர்க்கும்
    அற்பமாந்தருக்கும் ஆறடியே சொந்தம்"

    ஈகையின் சிறப்பை ஈண்டுவிளக்கிய - கவியில்
    ஈர்ப்புக் கொண்டே இயம்புகின்றேன்
    இனிது இனிது உமது கவிதை இனிது
    அதனினினும் இனிது அது தரும்
    அற்புதக் கருத்தோவியம் இனிது.

    நன்றிகள் புலவரே!

    அன்புடன்,
    தமிழ் விரும்பி
    http://tamizhvirumbi.blogspot.com/

    ReplyDelete
  6. நிரூபன் said...

    இனிய காலை வணக்கம் சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. இனிது இனிது உமது கவிதை இனிது
    அதனினினும் இனிது அது தரும்
    அற்புதக் கருத்தோவியம் இனிது.///

    இவருடைய கருத்தை நானும் வழி மொழிகிறேன்..

    ReplyDelete
  8. மனோ சாமிநாதன் said

    மனம் திறந்த பாராட்டு!என்
    மனம் மகிழ பாராட்டு

    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. நிரூபன் said...

    வாழ்த்துக்கு நன்றி !

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. நண்டு @நொரண்டு -ஈரோடு said

    ம்,நல்லாயிருக்குங்களா!

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. வெங்கட் நாகராஜ் said...

    நன்றி! நன்றி! நன்றி!
    நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. தமிழ் விரும்பி said...

    அகப்பொருள் கொன்றே புறப்பொருள் சேர்க்கும்
    அற்பமாந்தருக்கும் ஆறடியே சொந்தம்
    உண்மை நண்ப!உரைத்ததுமே நீரே

    நன்றி! நன்றி! நன்றி!
    நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. வேடந்தாங்கல் - கருன் *! said

    வழி மொழி கருத்தை
    வழங்கினீர் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. ஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில்
    ஈடில் ஒன்றென அறியாதான்
    பார்த்துப் பார்த்துப் பொருள்தேடி-அதை
    பதுக்க பாவம்! மண்மூடி
    காத்திருந் தவன் கைபற்ற-அந்தோ
    காணா தவன்கண் நீர்வற்ற
    சேர்த்தேன் அனைத்தும் என்னபலன்-வீணே
    சென்றதே இன்று கண்டபல

    ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை வுயிர்க்கு
    என்று வள்ளுவப்பெருந்தகை மிக அருமையாக ஈதலின் தன்மை பற்றி சொல்லியுள்ளார்.
    தங்களின் ஈத்துவக்கும் இன்பமாய் குரல்வழி ஈகை கவிதை அற்புதம்.
    தங்களின் பகிர்வு நன்றி.
    கா.ந.கல்யாணசுந்தரம்,
    மனிதநேய கவி,
    kalyan.ubi@gmail.com
    www.kavithaivaasal.blogpost.com
    www.haikukavithaigal.blogpost.com
    www.thesmileofhumanity.blogpost.com

    ReplyDelete
  15. அழுவார் துயரைப் போக்கிடுவீர்-அவர்
    அன்பை நெஞ்சில் தேக்கிடுவீர்/

    அற்புதம் தங்களின் பகிர்வு .பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. கா ந கல்யாணசுந்தரம் said

    முதல் வருகைக்கும் முத்துப் போன்ற
    கருத்துரைக்கும் நன்றி!வணக்கம்!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. ஈந்து உவக்கும் இன்பத்தை
    எடுத்துவைதமைக்கு நன்றி!

    ReplyDelete
  18. கருத்தாழம் கொண்ட அழகிய கவிதை!

    ReplyDelete
  19. புலம்பி அழுதால் வந்திடுமா-போன
    பொருளும் பாடம் தந்திடுமா

    மிக அழகான வாழ்வியல் பதிவு புலவரே..

    ReplyDelete
  20. இன்று என் வலையில் இதோ பொருளில் இரு இடுகைகள் வெளியிட்டிருக்கிறேன்

    1. பிச்சைக்காரக் கடவுளர்கள்
    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_12.html

    2.நிழலானவன்
    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_2022.html

    பதிவுகளைக் காண அன்புடன் அழைக்கிறேன் புலவரே.

    ReplyDelete
  21. புலம்பி அழுதால் வந்திடுமா-போன
    பொருளும் பாடம் தந்திடுமா
    விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே
    விவேகம்! உணரின் நீர்வெல்வீர்
    தளும்பா நிறைகுட நிலைபெற்றே-எதுவும்
    தனக்கென வாழா உளம்பெற்றே
    அழுவார் துயரைப் போக்கிடுவீர்-அவர்
    அன்பை நெஞ்சில் தேக்கிடுவீர்//
    சிறப்பானபதிவு. நல்ல கருத்துக்கள்.

    ReplyDelete
  22. //அற்றார் அழிபசி தீர்ப்பீரே -பெரும்
    அறமென செல்வம் சேர்ப்பீரே//

    உலகின் படைப்பே இப்படியான பொருள் உடையது தான்.

    அவரவர் உழைப்பால்/திறத்தால் கிடைப்பது அவரவர்க்கே இன்னும் சித்தாந்தத்தில் தான் தடம் மாறி போய்க்கொண்டிருக்கிறது மானிடம்.

    ReplyDelete
  23. அற்புதக் கருத்துக்களைப் பாவில் ஏற்றிய விதம் அழகு. மனம் கவர்ந்த வரிகளை மேற்கோளிட்டுக் காட்டவிரும்புகிறேன். எல்லா வரிகளுமே என் மனம் கவர்வதால் மொத்தக் கவிதையையும் மேற்கோளிட இயலாமல் தவிக்கிறேன். ஒவ்வொரு வரியிலும் வெளிப்படும் கருத்தும் கவிநயமும் வெகுநன்று. பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  24. புலம்பி அழுதால் வந்திடுமா-போன
    பொருளும் பாடம் தந்திடுமா
    விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே
    விவேகம்! உணரின் நீர்வெல்வீர்
    தளும்பா நிறைகுட நிலைபெற்றே-எதுவும்
    தனக்கென வாழா உளம்பெற்றே
    அழுவார் துயரைப் போக்கிடுவீர்-அவர்
    அன்பை நெஞ்சில் தேக்கிடுவீர்

    மனம் உணர்த்திய செய்தி அதனால்
    என் கண்களும் தனைமறந்து ஆனந்தக்
    கண்ணீர்ப் பூக்களைச் சொரிந்தன ஐயன்
    எமக்களித்த ஆறுதல் தரும் அழகிய
    கவிதை வரிகள் இங்கே .அங்கோ மகளின் மனம்
    கொண்ட துயரின் எழுசியதானால் வந்த
    பாடல்வரிகள் காத்திருக்கின்றது இந்த
    அன்பு விழிகளின் வருகைக்காக..........

    ReplyDelete
  25. கொடுத்துவாழ்தலின் பெருமையை இனிதே கவிதைபாடியிருக்கிறீங்கள் புலவரே!

    ReplyDelete
  26. இராஜராஜேஸ்வரி said

    நன்றி சகோதரி!நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. கோகுல் said

    நன்றி! நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. கே. பி. ஜனா... said

    முதல் வருகைக்கும் முத்துப் போன்ற
    கருத்துரைக்கும் நன்றி!வணக்கம்!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. முனைவர்.இரா.குணசீலன் said

    நன்றி! முன்வரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. முனைவர்.இரா.குணசீலன் said...

    வந்தேன் வலை வழி
    தந்தேன் கருத்துரை
    பார்த்தீரா
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. மாலதி said...

    மகளே!நலமா!நன்றி
    படிப்பில் கவனம் தேவை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. சத்ரியன் said...

    பேத்திக்கு வாழ்த்து அங்கே
    பிள்ளைக்கு வாழ்த்து இங்கே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. கீதா said...

    மகிழச் சொன்னீர்
    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. குறள் வழி ஈகை..கருத்தாழம் கொண்ட அழகிய கவிதை...சிறப்பான பதிவு ஐயா...ரெவரி

    ReplyDelete
  35. அம்பாளடியாள் said...

    நன்றி மகளே!

    வந்தேன் ஏதோ தடை
    கருத்துரை அளிக்க இயலவில்லை
    மீண்டும் வருவேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. Nesan said...

    நன்றி! நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. id said...

    நன்றி! நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  38. //விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே
    விவேகம்! //
    சரிதான்!

    ReplyDelete
  39. சென்னை பித்தன் said...

    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. அய்யா.. அய்யா இக்கவிதை - என்
    ஆழ்மனதில் பதிந்தனவே-
    இனிய இக்கவி இயற்றியதால்
    ஈகை பெருந்தகை நீ ஆனாய்!

    வாழ்த்துக்கள் ஐயா.. !

    ReplyDelete
  41. அற்றார் அழிபசி தீர்ப்பீரே -பெரும்
    அறமென செல்வம் சேர்ப்பீரே

    சரியான வார்த்தை.

    ReplyDelete
  42. தங்கம்பழனி said

    முதல் வருகைக்கும் முத்துப் போன்ற
    கருத்துரைக்கும் நன்றி!வணக்கம்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  43. ரிஷபன் said...

    எடுத்துக் காட்டு தந்து
    கருத்துரை நல்கினீர்
    நன்றி ஐயா!

    ReplyDelete
  44. பார்த்தேன் புலவரே..
    மகிழ்ச்சி..

    தங்கள் தமிழ்ப்பணி எண்ணற்ற உறவுகளை உங்களுக்குத் தேடித்தந்திருக்கிறது.

    இவ்வலையுலகில் மதிப்பிற்குரிய ஒரு பதிவராகத் தாங்கள் திகழ்கிறீர்கள்..

    தங்கள் அனுபவம் கூட எங்களுக்குப் பெரிய பாடமாக அமையும்.

    அதனால் இனிவரும் காலங்களில் தங்களால் மறக்கமுடியாத அனுபவங்களையும் இடையிடையே பதிவிட்டால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன் ஐயா.

    நன்றி.

    ReplyDelete
  45. அனைவருமே சுய நலவாதிகளாக மாறிவரும்
    இன்றைய சூழலில் அவசியம் அனைவரும் அறிய வேண்டிய
    அரிய கருத்து இது.அழகிய கவியாக்கித் தந்தமைக்கு நன்றி
    முனைவர்.குணசீலன் சொன்ன கரித்தையே நானும் வழி மொழிகிறேன்
    தங்கள்மூலம் நாங்கள் நிறைய அறிந்து கொள்ள
    மிகுந்த ஆவலாய் இருக்கிறோம்.த.ம 12

    ReplyDelete
  46. ஈகை என்றோர் குணமுண்டாம்!
    அதை இக்கால நடைமுறையில் தேடினேன்!
    கிடைக்கா தென்றவர் புத்தகங்களிலே தேடிப்பார்!
    என்றும் சொன்னாரே!

    முதல்முறையாக உங்கள் பக்கம் வந்தேன்!

    ஈகையை நினைவு படுத்தியமைக்கு நன்றி புலவரே!

    மீண்டும் வருவேன் கவிதைகளை காண..

    ReplyDelete
  47. வணக்கமய்யா.. இவ்வளவு பேர் வந்திட்டு போட்டாங்களா நான் கொஞ்சம் லேட் சாரி.. ஈகை பற்றி அருமையான கவிதைப்பதிவுக்கு நன்றிங்கையா....

    ReplyDelete
  48. ஈகையின் இனிமை கூறிய புலவ
    ஈண்டு யாம் இன்பம் பெறுவோம்...
    நன்றி புலவரே....

    ReplyDelete
  49. ஈகை, கொடை பற்றி தடையின்றி மரபுப் பா வரிகள்
    ஈகையால் வாழ்வில் வாகை சூடி மகிழலாம்
    நல்ல கவழதை மகிழ்ச்சி ஐயா! பகிர்வுக்கு நன்றி..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  50. தனக்கு தனக்குன்னு பணத்தை பொருளை சொத்தை சேர்த்து வைத்து சாதிப்பது தான் என்ன?

    நிலையில்லா பணத்தை சேர்த்து வைத்து தர்மத்தை மனதில் இருந்து தூரமாக்கும் செயலை வேண்டாம் என்று சொல்லும் வரிகளில் தான் எத்தனை மென்மை.. எத்தனை அன்பு....

    தர்ம சிந்தனையோடு வாழுங்கள்... முடிந்தவரை உதவுங்கள்... உங்களுக்கே என்று தர்மத்தையும் புண்ணியத்தையும் சேர்த்து வையுங்கள் என்று அன்பாய் சொன்ன கவிதை வரிகள் மிக மிக அருமை ஐயா....

    அன்பு வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete
  51. ஐயா.... வெண்பாக்களையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...