காதல் போயின் சாதல் நன்றே-இது
கதையல நாட்டில் நடப்பதாம் ஒன்றே
மாதர்கள் சிலரும் இளைஞர் சிலரும்-இன்றும்
மடிவதை தினசரி செய்திகள் பகரும்
வேதனையாக வெளிவரக் கண்டே-பெற்றவர்
வெந்துப் புண்ணாய் மாய்வதும் உண்டே
தீதாம் இதனை இளையோர் கருதி-உடன்
தெளிந்திடின் வாரா உயிருக் கிறுதி
வாழத் பிறந்தவர் உலகில் நாமே-காதல்
வாலிப வயதில் வருவது ஆமே
ஆழமாய் சிலரின் மனதில் அதுவே-சிறந்த
அன்பென ஊன்றி நிலைத்திடும் பதிவே
சூழவும் உள்ள சொந்த பந்தம்-எதிர்ப்பு
சொல்லியே ஆதனைத் தடுத்திட முந்தும்
வீழவா முடிவு எடுப்பது விவேகம்-முயன்று
வெற்றியை எட்டிட காட்டுவீர் வேகம்
பள்ளம் மேடாம் காதல் பாதை-அதில்
பயணம் செய்யின் வருவது போதை
வெள்ளம் போல எதிர்ப்பே வரினும்-காதல்
வெற்றிக்கி தடைபல நாளும் தரினும்
அள்ள வந்திடும் நீரல காதல்-எளிதில்
அடைய இயலா அறிந்துமா சாதல்
உள்ளம் உறுதி உடையவர் ஆவீர்-கொண்ட
உண்மைக் காதலில் வெல்வீர் நீவீர்
பள்ளம் மேடாம் காதல் பாதை-அதில்
ReplyDeleteபயணம் செய்யின் வருவது போதை
வெள்ளம் போல எதிர்ப்பே வரினும்-காதல்
வெற்றிக்கி தடைபல நாளும் தரினும்
அள்ள வந்திடும் நீரல காதல்-
புலவருக்கு காதலிலும் அனுபவமோ? வரிகள் அத்துனையும் ரசனை..
மிகவும் ரசித்து எழுதி இருக்கீங்க. ரசனையான வரிகள்.
ReplyDelete//அள்ள வந்திடும் நீரல காதல்-எளிதில்
ReplyDeleteஅடைய இயலா அறிந்துமா சாதல்
உள்ளம் உறுதி உடையவர் ஆவீர்-கொண்ட
உண்மைக் காதலில் வெல்வீர் நீவீர்//
உண்மையான வரிகள்.. உண்மைக் காதல் சாகக்கூடாது அல்லவா? நல்ல கவிதை பகிர்வு...
வீழவா முடிவு எடுப்பது விவேகம்-முயன்று
ReplyDeleteவெற்றியை எட்டிட காட்டுவீர் வேகம்/
காரணம் எதுவாயினும் சாதல் தவிர்ப்பீர்!
கருத்துள்ள ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
காதலர்களே இந்த கவிதையை வாசியுங்கள். உங்களுக்கு தான்...
ReplyDelete//எளிதில்
ReplyDeleteஅடைய இயலா அறிந்துமா சாதல்
உள்ளம் உறுதி உடையவர் ஆவீர்-கொண்ட
உண்மைக் காதலில் வெல்வீர் நீவீர்//
இளையோரே இளையோரா
புலவர் பகிர்ந்த கருத்தை கேட்பீர்
புலரும் பொழுது..., பொறுமை காப்பீர்.
காதலில் வெற்றியோ தோல்வியோ இருப்பினும் அந்த இனிய நினைவுகள் தந்திடும் சுகங்களை
ReplyDelete//ஆழமாய் சிலரின் மனதில் அதுவே-சிறந்த
அன்பென ஊன்றி நிலைத்திடும் பதிவே//
என வெகு அழகாகச் சுட்டிக்காட்டியிருக்கும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது, ஐயா!
நல்லதொரு கவிதை தந்தமைக்கு என் நன்றிகள். vgk
தமிழ்மணத்தில் ஐந்து [5]
ReplyDeleteதமிழ் மணம் 7
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDelete// புலவருக்கு காதலிலும் அனுபவமோ? வரிகள் அத்துனையும் ரசனை..//
நன்றி நண்பரே!
தங்களின் ஐயத்திற்கு விரைவில்
விடை,கவிதையாக வலைவழி வரும் என்பதை
அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
புலவர் சா இராமாநுசம்
ஆஹா.... காதல் கவிதையில் காதலர்களுக்கு விழிப்புணர்வு கவிதை.... நன்றி ஐயா
ReplyDeleteLakshmi said...
ReplyDeleteமிகவும் ரசித்து எழுதி இருக்கீங்க. ரசனையான வரிகள
நன்றி! நன்றி! நன்றி!
மனம் மகிழப் பாராட்டியுள்ளீர்
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said
ReplyDeleteவரிகளை எடுத்துக்காட்டிப்
பாராட்டிய தங்களுக்கும்
நன்றி! நன்றி! நன்றி
புலவர் சா இராமாநுசம்
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஉளம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி சகோதரி
புலவர் சா இராமாநுசம்
//சூழவும் உள்ள சொந்த பந்தம்-எதிர்ப்பு
ReplyDeleteசொல்லியே ஆதனைத் தடுத்திட முந்தும்
வீழவா முடிவு எடுப்பது விவேகம்-முயன்று
வெற்றியை எட்டிட காட்டுவீர் வேகம்//
உண்மைக் காதலர்களுக்கு
உகந்த உபதேசம்...
அழகிய கவிதை புலவரே....
தமிழ்வாசி - Prakash said
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சத்ரியன் said
ReplyDeleteஇளையோரே இளையோரா
புலவர் பகிர்ந்த கருத்தை கேட்பீர்
புலரும் பொழுது..., பொறுமை காப்பீர்.
வலைச்சரப் பணியிலும்
வந்தீர் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
காதல் தோல்வி என்றவுடன் முட்டாள் தனமாக தற்கொலையை தான் அதிகம் வரவேற்கிறார்கள். எதிர்த்து போராடோவோர் மிக குறைவு தான்..
ReplyDeleteநல்ல கவிதை ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteகாதலில் வெற்றியோ தோல்வியோ இருப்பினும் அந்த இனிய நினைவுகள் தந்திடும் சுகங்களை
முற்றிலும் உண்மை ஐயா
உங்கள் கருத்துகள்
நன்றி
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஓட்டளிப்புக்கு நன்றி ஐயா
புலவர் சா இராமாநுசம்
அய்யாவிடம் இருந்து காதல் பற்றி அசத்தல் கவி
ReplyDeleteநல்லா இருக்கு....
மாய உலகம் said
ReplyDeleteஓட்டுக்கு நன்றி
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said..
ReplyDeleteஆஹா.... காதல் கவிதையில் காதலர்களுக்கு விழிப்புணர்வு கவிதை.....
நன்றி நன்றி நன்றி!!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteஉண்மைக் காதலர்களுக்கு
உகந்த உபதேசம்...
அழகிய கவிதை புலவரே
வாழ்த்துரைக்கு நன்றி அன்பரே!
புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteநன்றி!
புலவர் சா இராமாநுசம்
கந்தசாமி. said
ReplyDeleteநல்ல கவிதை ஐயா
வாழ்த்துக்கு நன்றி
புலவர் சா இராமாநுசம்
துஷ்யந்தன் said...
ReplyDeleteஅய்யாவிடம் இருந்து காதல் பற்றி அசத்தல் கவி
நல்லா இருக்கு
நானும் வாலிபம் கடந்தே வந்தவன்ன ஐயா
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
காதலில் ஒர் அறிவுரையைத் தந்து இருக்கிறீங்க ஐயா!
ReplyDeleteநல்ல அறிவுரை ஐயா !
ReplyDeleteகாதலர்களுக்கு நல்ல டானிக் கொடுத்ததுபோல்
ReplyDeleteஉள்ளது தங்கள் கவிதை
உண்மைக்காதல் வெல்லட்டும்
மனம் தொட்ட பதிவு
த.ம 14
// உள்ளம் உறுதி உடையவர் ஆவீர்-கொண்ட
ReplyDeleteஉண்மைக் காதலில் வெல்வீர் நீவீர்//
உள்ளம் உறுதியோடு கொண்ட உண்மைக் காதலில்
வென்றுவிட்டேன் ஐயா. அருமையான கவிதை நன்றி.
அழகு கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அருமை அருமை காதல் கவிதை அருமை அருமை புலவரே...!!!
ReplyDeleteNesan said
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteநல்ல அறிவுரை ஐயா
ஆம்!பாலா!
நல்ல அனுபவ உரை
நன்றி
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteஉண்மைக்காதல் வெல்லட்டும்
ஆம் சகோ!
உண்மைக்காதல் வென்றது
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
காந்தி பனங்கூர் said...
ReplyDeleteவாழ்க வளமுடன்!
வாழ்க நீவீர்
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Rathnavel said...
ReplyDeleteநன்றி!ஐயா!
புலவர் சா இராமாநுசம்
பள்ளம் மேடாம் காதல் பாதை-அதில்
ReplyDeleteபயணம் செய்யின் வருவது போதை
வெள்ளம் போல எதிர்ப்பே வரினும்-காதல்
வெற்றிக்கி தடைபல நாளும் தரினும்
அள்ள வந்திடும் நீரல காதல்-எளிதில்
அடைய இயலா அறிந்துமா சாதல்
உள்ளம் உறுதி உடையவர் ஆவீர்-கொண்ட
உண்மைக் காதலில் வெல்வீர் நீவீர்
ஐயா வணக்கம் உங்களை மாதிரி ஆக்கள் தான் எங்களுக்கு தேவை
MANO நாஞ்சில் மனோ said
ReplyDeleteஅழைத்தேன் வந்தீர்-நல்
அன்பரே வணக்கம்
தழைத்திட வேண்டும்-உறவு
தமிழ்வழி யாண்டும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
காதலை அனுபவித்து எழுதிய வரிகள் ரசிக்கத்துண்டியது வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteஒரு வேண்டுகோள்
தங்களின் படைப்புகளை வியந்ததுண்டு இத்தளத்தில் கவிதைப்போட்டி இடம்பெறுகிறது தாங்களும் கலந்து வென்றிட வாழ்த்துகிறேன்
http://www.chenaitamilulaa.net/ இன்றே இணைந்து நட்புடன் கலந்து கொள்ளுங்கள்
கவி அழகன் said
ReplyDeleteவாங்க தம்பீ வாங்க!
காணமேன்னு பாத்தேன்
என்ன காதலா...
புலவர் சா இராமாநுசம்
நேசமுடன் ஹாசிம் said
ReplyDeleteநன்றி!ஹாசிம் நன்றி!
தங்களின் அன்பு கட்டளைக்கேற்ப
ஆவன செய்கிறேன்
புலவர் சா இராமாநுசம்
சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட இப்ப தற்கொலை விகிதம் அதிகமாகிவிட்டது...
ReplyDeleteடீச்சர் திட்டிட்டாங்களா? வீட்டுக்கு வந்து பாலிடால் குடித்துவிடுவது....
கணவர் திட்டினாரா உடனே நெருப்பு வைத்துக்கொள்வது...
காதலில் தோல்வியா காதலன் வேறு பெண்ணை மணந்துக்கொண்டானா அவ்ளோ தான் கடல்ல போய் விழுந்துவிடுவது.. இல்லன்னா இருக்கவே இருக்கு ரெயில்வே ட்ராக் :(
மனதை முதலில் சலனத்தின் பக்கம் திருப்பாம இருக்கணும்..
பெற்றோர்களை மீறி மனம் அலைபாய்வது இயல்பே... ஆனால் அந்த காதல் ஆரோக்கியமானதாக நம்பிக்கையுடையதாக இருக்கணும்....
அப்படி இல்லாதபட்சத்தில் பிரச்சனை என்று வந்தால் உடனே மனதை பலகீனமாக்கிக்கொள்ளவே கூடாது...
அப்ப கண்டிப்பா உலகம் வெறுக்கும் எல்லோரும் இருந்தும் அனாதையா இருப்பது போல் மனம் சோர்ந்து போகும்... இருக்க பிடிக்காமல் செத்துவிட க்ஷணத்தில் முடிவெடுக்க வைக்கும்....
அது தற்கொலையில் போய் முடியும்....
அந்த சமயம் நம் மனதுக்கு இன்னும் இன்னும் இன்னும் தைரியம் சேர்க்கணும்....
சொல்வது எதுவும் ஈசி ஆனால் அந்த வலி அனுபவிக்கும்போது தான் அந்த மரண அவஸ்தை தெரியும் அப்டின்னு படிக்கிறவங்க சொல்றது எனக்கும் கேட்கிறது...
அந்த அனுபவம் எல்லாம் கடந்து தானே வந்திருக்கோம்... எதுவும் செய்யுமுன் ஆயிரம் முறை யோசிக்கணும்.. ஏன்னா செய்தப்பின் யோசிக்கும் அவகாசம் நமக்கு கிடைக்காம போயிடும்...
வாழ்க்கையின் கொடுமையான தருணங்களை அனுபவித்த எத்தனையோ பேரை நான் கண்டிருக்கிறேன்.. ஆனால் தோல்வியானதே என்று மரித்தவரை விட எழுந்து நின்றவரை தான் நான் தரிசித்திருக்கிறேன்.. பிரச்சனைகளை கண்டு நாம் உட்கார்ந்துட்டால் பின் எழவே முடியாம போய்டும்...
மனோதிடம், தைரியம், நம்பிக்கை இது என்றும் குறைய கூடாது... இதில் ஒன்று குறைந்தாலும் நம்மால் சிந்திக்க இயலாமல் போய்விடும்..
ஐயாவின் கருத்துள்ள வரிகள் சொல்வதும் இதையே தான்.....
காதல் தோல்வின்னா உடனே வாழ்க்கையே முடிந்தது போல் ஏன் சுருண்டு உட்காரணும்? இது ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு இன்னும் அதிக உத்வேகத்தோடு அடி எடுத்து வைக்கவேண்டும்... காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை... வாழ்க்கையில் காதல் ஒரு பகுதி மட்டுமே.... அன்பான பெற்றோர், சகோதரர், நட்பு, அன்பு உறவுகள் இப்படி எல்லோரும் உடனிருக்கும்போது தற்கொலை முடிவுக்கு போகலாமா என்று ஆதங்கத்துடன் எழுதிய வரிகள் சிறப்பு ஐயா....
மனோதைரியம் பெருக்கும் கம்பீர வரிகளை சமர்ப்பித்து கவிதையை சிறப்பானதாக்கிய ஐயாவுக்கு என் அன்பு வாழ்த்துகள்....
அனுபவித்து எழுதிய வரிகள்...:)
ReplyDeleteசாதல் தான் புலவரே...ரெவெரி
காதல் வேண்டாமென்று கட்டுப்பாடுகள் உணர்த்தும் மூத்த தலைமுறையிடமிருந்து முரணாய், காதலைக் கைவிட்டு, சாதலைத் தேடவேண்டாமென்று வேண்டுகோள் விடப்பட்ட செழுங்கவி. பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteநல்ல கவிதை ஐயா!
ReplyDeleteவீழவா முடிவு எடுப்பது விவேகம்-முயன்று
ReplyDeleteவெற்றியை எட்டிட காட்டுவீர் வேகம்//
மரபைப் போற்றும் மரபு. அழகாகப் புனைந்துள்ளீர்கள். கருத்தும் வடிவும் பொருந்திய கவிதை. காலத்திற்கேற்றாற்போல...
உண்மைக் காதல் வெல்லும் என்று காட்டிய கவிநயம் அருமை.
ReplyDeleteகாதலைவிட ,காதல் செய்வ்தைவிட,அய்யாவின் கவிதை அருமை.அனுபவம் பேசுகின்றதோ?
ReplyDeleteமஞ்சுபாஷிணி said...
ReplyDeleteநீண்ட கருத்துரை வழங்கிய
அன்புச் சகோதரிக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
id said...
ReplyDeleteநன்றி!நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
கீதா said
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கும்
கருத்துரைக்கும்
நன்றி!
விக்கியுலகம் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துரைக்கும்
நன்றி ஐயா!
புலவர் சா இராமாநுசம்
ஆதிரா said...
ReplyDeleteமுதல் வருகை தந்து
முத்தானக் கருத்துரைத்தீர் நன்றி
ரிஷபன் said
ReplyDeleteநன்றி ரிஷபன் அவர்களே நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ezhilan said...
ReplyDeleteமுதல் முறையாக வந்த தங்களுக்கு
வரவேற்பும் வணக்கமும் உரியன!
.அனுபவம் பேசுகின்றதோ
ஆம்!ஐயா!
இன்று என் வலையில்
வந்துள்ள , அவளும் நானும்
என்ற கவிதை என் சொந்த வாழ்வாகும்
அந்த அனுபவமே இந்த கவிதை!
பெயருக்கேற்ற எழுத்து நடை . கவிதை சிறப்பு
ReplyDeleteபனித்துளி சங்கர் ❤ ! said...
ReplyDeleteநன்றி பனித்துளி சங்கர் அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
காதலுக்காய் சாவது தவறு எனும் உண்மையினையும்,
ReplyDeleteவாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கங்கள் வருவது நிஜம் எனும் தத்துவத்தினையும் தாங்கி வந்து காதலில் தோல்வியுற்றுத் தற்கொலை தான் முடிவென எண்ணும் உள்ளங்களுக்கு நல்லதோர் உறுதி மிக்க கவிதையினைத் தந்திருக்கிறீங்க ஐயா.
அழகாகச் சொன்னீர்கள் புலவரே..
ReplyDeleteபுலவரே தங்கள் கருத்தியலோடு தொடர்புடைய
ReplyDeleteபழந்தமிழர் வாழ்வியல் குறித்த பதிவு
http://www.geotamil.com/pathivukal/Dr_Gunaseelan_on_madaleRuthal.htm
வாழத் பிறந்தவர் உலகில் நாமே-காதல்
ReplyDeleteவாலிப வயதில் வருவது ஆமே
ஆழமாய் சிலரின் மனதில் அதுவே-சிறந்த
அன்பென ஊன்றி நிலைத்திடும் பதிவே
சூழவும் உள்ள சொந்த பந்தம்-எதிர்ப்பு
சொல்லியே ஆதனைத் தடுத்திட முந்தும்
வீழவா முடிவு எடுப்பது விவேகம்-முயன்று
வெற்றியை எட்டிட காட்டுவீர் வேகம்
தரமான அறிவுரை தந்த கவிதை அருமை
ஐயா வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .
புதிய ஆக்கத்தை எதிர்பார்த்து வந்தேன் .
நீங்கள் நலந்தானா ?......