மண்ணுக்கு மரியாதை தாமே-பிறந்த
மண்ணுக்குத் தருவது ஆமே
விண்ணுக்குச் சென்றாலும் மறையா-சிங்கள
வெறியர்கள் வென்றதும் முறையா
கண்ணுகுத் தெரிந்திட ஈழம்-விரைவில்
'கை'தட்டி வரவேற்க வாழும்
புண்ணுக்கு மருந்தாக நன்றாய்-உலகம்
போற்றிட சேருவோம் ஒன்றாய்
ஈழத்து மண்ணிலே இரத்தம்-அன்று
இழந்தனர் அந்தோ நித்தம்
வாழத்தான் வழியின்றி அவரே-இன்று
வாடிட விடுவதும் தவறே
சூழத்தான் வேண்டாமா இங்கே-பதில்
சொல்லுங்கள் தமிழுணர் வெங்கே
வீழத்தான் பார்பதும் கெடுதல்-தமிழ்
வேரிலே வென்னீரும் விடுதல்
இன்றில்லை என்றாலும் நாளை-இதை
எண்ணி வருந்திடும் வேளை
ஒன்றது வந்திடும் பாரும்-அது
உருவாக வேண்டுமா கூறும்
நன்றெது விரைவாக எண்ணி-தமிழ்
நாட்டோரே முடிவொன்று பண்ணி
குன்றென உறுதியாய் நின்றே-ஈழம்
கொடுத்திடத் துணையாவோம் இன்றே
புலவர் சா இராமாநுசம்
நன்று .
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா.
-சிங்கள
ReplyDeleteவெறியர்கள் வென்றதும் முறையா..... அரக்கர்கள் ஜெயித்தது ஒரு மாயை..... அவர்கள் அழிவது உறுதி என்று சபிக்கிறேன் இந்த மாயா... நன்றி ஐயா
தமிழ் மணம் 3
ReplyDeleteநண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteமுதல்வரே! வருக!
நன்று என்றீர்! நன்றி நவின்றேன்!
புலவர் சா இராமாநுசம்
Rathnavel said...
ReplyDeleteதவறாமல் வரும் ஐயாவுக்கு
தலைதாழ்ந்த வணக்கம்
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said...
ReplyDeleteதங்கள் சாபம் அவனை அழிக்கட்டும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said
ReplyDeleteஓட்டுக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
///இன்றில்லை என்றாலும் நாளை-இதை
ReplyDeleteஎண்ணி வருந்திடும் வேளை
ஒன்றது வந்திடும் பாரும்-அது
உருவாக வேண்டுமா கூறும்///
நாளை என்றொரு
நாளிருக்கு
அதில் யாம் என்பதன்
பொருளிருக்கு!!
அழகு அழகு
அற்புதமான கவிதை புலவர் ஐயா
மாண்பிழந்தோர் மடியும் காலம் வரும் ....
ReplyDeleteஇன தொடர்ந்து உணர்வு நெருப்பு அணையாது
ReplyDeleteதொடர்ந்து காக்கும் உங்கள் கவிதைகள்
அனைத்தும் அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 6
ReplyDeleteமகேந்திரன் said...
ReplyDeleteநாளை என்றொரு
நாளிருக்கு
அதில் யாம் என்பதன்
பொருளிருக்கு!!
சரியான கருத்து சகோ!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteமாண்பிழந்தோர் மடியும் காலம் வரும்
முற்பகல் செயின் பிற்பகல் வருமே
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteநன்றி சகோ நன்றி!!
உங்கள் சைத்தானின் கவிதை மிக மிக
அருமை! நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமாக தங்கள் கவி வளம் வளர்வது கண்டு
இந்த அன்பு அண்ணன் அளவின்றி மகிழ்ச்சி
அடைகிறேன்
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteஓட்டளிப்புக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மீண்டும் நல்லதொரு கவிதை தந்தமைக்கு வாழ்த்துக்கள், ஐயா.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
புலவர் சா இராமாநுசம்
இனிய காலை வணக்கம் ஐயா,
ReplyDeleteநாம் பிறந்த மண்ணுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், எம் தமிழ் உறவுகளின் நிலத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனும் சேதியினை உங்கள் கவிதை தாங்கி வந்து, விரைவில் விடுதலை கிடைக்கும் எனும் நம்பிக்கை மேலும் வலுச் சேர்த்து மனசைக் குளிர வைக்கிறது உங்கள் கவிதை.
மிக்க அருமையான கவிதை ...தங்களை வாழ்த்த வயதில்லை .......
ReplyDeleteஅருமையான கவிதை.. மண்ணுக்கு மரியாதை செய்வோம்,..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
நிரூபன் said...
ReplyDeleteவிரைவில் விடுதலை கிடைக்கும் எனும் நம்பிக்கை மேலும் வலுச் சேர்த்து மனசைக் குளிர வைக்கிறது உங்கள் கவிதை.
நன்றி நிரூபன்
புலவர் சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteமிக்க அருமையான கவிதை ...தங்களை வாழ்த்த வயதில்லை .......
மனமிருந்தால் அதுவே போதும் பாலா!
புலவர் சா இராமாநுசம்
!* வேடந்தாங்கல் - கருன் *! said
ReplyDeleteஅருமையான கவிதை.. மண்ணுக்கு மரியாதை செய்வோம்,..
வாழ்த்துக்கள்..
நன்றி கருன் அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
மண்ணுக்கு மரியாதை வேண்டும் தங்கள் பண்ணுக்கு என் பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteவணக்கமையா...
ReplyDeleteஇன்றில்லை என்றாலும் நாளை-இதை
எண்ணி வருந்திடும் வேளை
ஒன்றது வந்திடும் பாரும்-அது
உருவாக வேண்டுமா கூறும்
நன்றெது விரைவாக எண்ணி-தமிழ்
நாட்டோரே முடிவொன்று பண்ணி
குன்றென உறுதியாய் நின்றே-ஈழம்
கொடுத்திடத் துணையாவோம் இன்றே
ஆமையா நாங்களும் துணையாவோமையா.. வாழ்த்துகள்..
கீதா said... மண்ணுக்கு மரியாதை வேண்டும் தங்கள் பண்ணுக்கு என் பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteநன்றி சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
9 September 2011 12:00 AM
காட்டான் said...
ReplyDeleteஆமையா நாங்களும் துணையாவோமையா.. வாழ்த்துகள்..
நன்றி! காட்டான் அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்
ReplyDeleteவேரிலே வென்னீரும் விடுதல்.......
தகுமோ..??
நல்லதொரு சிந்தனை புலவரே.
உணர்வுகள் பொங்கும் வரிகள் .... தமிழன் என்று மறந்து மதிக்கெட்டு அரசியல் வியாதிகளின் பின்னே செல்லும் மூடர்கள் நம்மில் மடிய வேண்டும் முதலில் ...
ReplyDeleteமுனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteநல்லதொரு சிந்தனை புலவரே
நன்றி முனைவரே!
புலவர் சா இராமாநுசம்
தினேஷ்குமார் said
ReplyDeleteஉணர்வுகள் பொங்கும் வரிகள் .... தமிழன் என்று மறந்து மதிக்கெட்டு அரசியல் வியாதிகளின் பின்னே செல்லும் மூடர்கள் நம்மில் மடிய வேண்டும் முதலில் ...
மிகத் தெளிவாக சொன்னீர் அன்பரே!நன்றி
புலவர் சா இராமாநுசம்
மண்ணுக்கு மரியாதையை செய்யும் கவிதை.
ReplyDeleteதுஷ்யந்தன் said...
ReplyDeleteமண்ணுக்கு மரியாதையை செய்யும் கவிதை
நன்றி துஷ்யந்தன் அவர்களே
இன்றில்லை என்றாலும் நாளை-இதை
ReplyDeleteஎண்ணி வருந்திடும் வேளை
ஒன்றது வந்திடும் பாரும்-
விரைவில் வரட்டும் அந்நாள்
பகிர்வுக்கு நன்றி நண்பரே
மண்ணுக்கு மரியாதை அருமை!
ReplyDeleteM.R said
ReplyDeleteவிரைவில் வரட்டும் அந்நாள்
நிச்சியம் வரும் அன்பரே!
புலவர் சா இராமாநுசம்
M.R said...
ReplyDeleteஓட்டளிப்புக்கு நன்றி
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said
ReplyDeleteநன்றி பித்தரே!
ஈழத்து மண்ணிலே இரத்தம்-அன்று
ReplyDeleteஇழந்தனர் அந்தோ நித்தம்
வாழத்தான் வழியின்றி அவரே-இன்று
வாடிட விடுவதும் தவறே
சூழத்தான் வேண்டாமா இங்கே-பதில்
சொல்லுங்கள் தமிழுணர் வெங்கே
வீழத்தான் பார்பதும் கெடுதல்-தமிழ்
வேரிலே வென்னீரும் விடுதல்
மனதை நெகிழவைக்கும் வலிதரும்
கவிதை வரிகளையா .உங்கள் பேத்தியை
பார்க்க வேண்டுமா?...இந்த மகளோட தளத்தில்
வந்து பாருங்க .நன்றி ஐயா பகிர்வுக்கு .......
தமிழ்மணம் 15
ReplyDeleteஅம்பாளடியாள் said...
ReplyDeleteமனதை நெகிழவைக்கும் வலிதரும்
கவிதை வரிகளையா .உங்கள் பேத்தியை
பார்க்க வேண்டுமா?...இந்த மகளோட தளத்தில்
வந்து பாருங்க .நன்றி ஐயா பகிர்வுக்கு
நன்றி மகளே! ஓட்டுக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நம்பிக்கை வரிகளில் மனம் நிறைந்தது....
ReplyDeleteஈழம் மலரும் என்று மனமும் வேண்டி நின்றது....
உங்கள் உணர்வுகளை இங்கே கவிதையாக்கி சிறப்பிக்கிறது....
அன்பு வாழ்த்துகள் ஐயா....