உடுக்கை இழந்தவன் கைபோல-துயர்
உற்றால் நண்பனும் உடன்சால
தடுக்கத் தானே முன்சென்றே-உதவி
தந்திட வேண்டும் அஃதொன்றே
இடுக்கண் களைதல் நட்பென்றே-குறள்
இயம்பிய கருத்தும் மிகநன்றே
எடுப்பின் நட்பில் முடிவொன்றே-பெயரும்
எடுப்பார் பிரியா இணையென்றே
உணர்ச்சி ஒன்றே நட்பாகும்-இருவர்
உள்ளம் ஒன்றின் பொட்பாகும்
புணர்ச்சி பழகுதல் வேண்டாவே-இது
புரிந்தால் போதும் ஈண்டாவே
தளர்ச்சி இன்றி நடைபோடும்-நட்பு
தமிழ்போல் அழியா நிலைநாடும்
வளர்ச்சி காணும் எழுமதியாம்-தேய்வு
வாரா என்றும் முழுமதியாம்
நவில்தொறும் நூல்நயம் போலுமென-நல்
நட்பினைச் சொல்லல் சாலுமென
பயில்தொறும் பண்புளர் தொடர்புயென-அவர்
பழகினால் அவர்பால் ஆகும்மென
முகநக நட்பது நட்பல்ல-நண்பர்
முறையின்றி நடப்பின் தடைசொல்ல
அகமது மலரல் நட்பென்றே-ஐயன்
அறைந்ததை அறிவீர் நீரின்றே
உற்றால் நண்பனும் உடன்சால
தடுக்கத் தானே முன்சென்றே-உதவி
தந்திட வேண்டும் அஃதொன்றே
இடுக்கண் களைதல் நட்பென்றே-குறள்
இயம்பிய கருத்தும் மிகநன்றே
எடுப்பின் நட்பில் முடிவொன்றே-பெயரும்
எடுப்பார் பிரியா இணையென்றே
உணர்ச்சி ஒன்றே நட்பாகும்-இருவர்
உள்ளம் ஒன்றின் பொட்பாகும்
புணர்ச்சி பழகுதல் வேண்டாவே-இது
புரிந்தால் போதும் ஈண்டாவே
தளர்ச்சி இன்றி நடைபோடும்-நட்பு
தமிழ்போல் அழியா நிலைநாடும்
வளர்ச்சி காணும் எழுமதியாம்-தேய்வு
வாரா என்றும் முழுமதியாம்
நவில்தொறும் நூல்நயம் போலுமென-நல்
நட்பினைச் சொல்லல் சாலுமென
பயில்தொறும் பண்புளர் தொடர்புயென-அவர்
பழகினால் அவர்பால் ஆகும்மென
முகநக நட்பது நட்பல்ல-நண்பர்
முறையின்றி நடப்பின் தடைசொல்ல
அகமது மலரல் நட்பென்றே-ஐயன்
அறைந்ததை அறிவீர் நீரின்றே
ஆகா...அருமை .
ReplyDeleteநண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteமுதல் வருகை! முதல்வர் வாழ்தாம்
நன்றி! நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
புலவரே மிக நன்று.
ReplyDeleteபாரி - கபிலர்
ReplyDeleteஔவை - அதியன்
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
துரியோதனன் - கர்ணன்
இப்படி இன்று யாரைச் சொல்லமுடிகிறது..
முக நகும் நட்புகளே..
ஒரு சிலரே நட்பின் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இன்றும் வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கோப்பெருஞ்சோழன்(அரசர்), பிசிராந்தையார்(புலவர்)இருவரும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களாவர். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்புக் கொண்டிருந்தனர். கோப்பெருஞ்சோழன் தம் பிள்ளைகளோடு மாறுபட்டு தன் அரசுரிமையைத் துறந்து வடக்கிருந்து தம் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டார்.
ReplyDeleteபுலவரே நான் சொல்வது பொய்யல்ல உண்மை.
ஒரு முனைவர்பட்ட வாய்மொழித்தேர்வில் வந்த ஆய்வாளர் புறநானூற்றில் தமிழ்ச்சமூகம் என்ற தலைப்பில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.
அப்போது..
கோப்பெருஞ்சோழனும்
பிசிராந்தையாரும் காதலர்கள் என்றார்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
யார் பெண் யார் ஆண் என்று கேட்டேன்.
கோப்பெருஞ்சோழன் காதலனாம்
பிசிராந்தயார் காதலியாம்
இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கமலேயே காதலித்தார்களாம்.
இந்தக்கொடுமையை எங்குபோய் சொல்ல.
நட்பின் அடையாளமாக வாழாவிட்டாலும்
நட்பின் அடையாளங்களைக் கூடத் தெரிந்துகொள்ள இன்றைய தலைமுறையினர் விரும்பவில்லை என்பதே உண்மை
கற்க கசடற
கற்பவை
கற்ற பின்
விற்க
அதற்குத்தக
என்ற குறள் தான் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
இவ்விடுகையோடு தொடர்புடைய இடுகை
ReplyDeletehttp://gunathamizh.blogspot.com/2009/06/blog-post.html
நரை நீக்கும் நல்ல மருந்து.
நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.
நல்ல நட்பே கோடி புண்ணியங்களுக்கு சமம்.
ReplyDeleteநட்பைப்பற்றி இத்தனை சிறப்பாக வரைந்த கவிதை டைமிங் கவிதை போல எனக்காகவே இட்டது போல தோன்றுகிறது ஐயா....
ReplyDeleteஉண்மையே...
உறவல்லாத இரு உள்ளங்கள் நட்பு கொண்டு சந்தோஷத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் தோளணைத்து எதிர்ப்பார்ப்பில்லாத அன்பை செலுத்தி நட்பைப்பேணி நட்புக்கே எடுத்துக்காட்டாக திகழும்படி வாழும் சிலரை உங்கள் கவிதை வரிகள் என் நினைவுக்கு வரவைத்தன ஐயா....
இன்றைய காலை உங்கள் கவிதையால் அழகாய் மிளிர்ந்தது..... அன்பு வாழ்த்துகள் ஐயா...
அன்பின் குணசீலன்,
ReplyDeleteநட்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கி சரித்திரத்தில் தன் பெயரை பொறிக்க காரணமாக இருந்த அத்தனை பேரையும் மிக அருமையாக எடுத்துக்காட்டி இருக்கீங்க குணசீலன்..
அன்பு வாழ்த்துகள்பா..
அருமையா இருக்குங்க அண்ணே!
ReplyDeleteஐயா.... சூப்பரா கவிதை... எளிமையாய் குறள் மூலமாக...
ReplyDeleteநட்பை போற்றிய குறள்களை
ReplyDeleteஅழகுற கையாண்டிருக்கிறீர்கள் புலவரே.
வடித்த கவிதை மனத்தைக் கவர்கிறது.
நட்புக் குறள்களுக்கு கவிதை விளக்கம்.
முனைவர்.இரா.குணசீலன் said
ReplyDeleteஅன்புதம்பீ முனைவர் அவர்களே!
இக் கவிதை பிறக்கக் காரணமே
நீங்கள்தான்!
முன்பு ஒருமுறை குறள் கருத்துக்களை
எளிய வழிகளில் நாம் பரப்ப வேண்டும் என்று
எழுதியிருந்தீர்கள்!
அதன் வழி வந்ததே இக் கவிதையும்
ஏன் நேற்றைய கவிதையும் ஆகும்
இதுபோல ஏனைய தலைப்புகளிலும் எழுத
முயற்சிப்பேன்
புலவர் சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said
ReplyDeleteநட்பின் அடையாளமாக வாழாவிட்டாலும்
நட்பின் அடையாளங்களைக் கூடத் தெரிந்துகொள்ள இன்றைய தலைமுறையினர் விரும்பவில்லை என்பதே உண்மை
முற்றிலும் உண்மை முனைவரே!
ஒருமுறை தமிழாசிரியர்க் கழகத்தின்
தலைவராக இருந்த போது ஒருபள்ளியின்
முதுகலை ஆசிரியர் ஒருவர் கேட்டார்
சேனாவரையத்துக்கு உரைநூல்
எங்கே கிடைக்கும் என்று.சேனாவரையமே
உரைநூல் என்பதே அவருக்குத் தெரியவில்லை
என்ன செய்வதுபுலவர்
புலவர் சா இராமாநுசம்
வேடந்தாங்கல் - கருன் *! said
ReplyDeleteநல்ல நட்பே கோடி புண்ணியங்களுக்கு சமம்
தங்களின் கருத்துக்கு மிகவும்
நன்றி
புலவர் சா இராமாநுசம்
மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteநாளும் வந்து ஊக்கம் தந்து
எழுத ஆக்கம் தரும் உங்களுக்கு
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
விக்கியுலகம் said...
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி!
நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
விக்கியுலகம் said...
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி!
நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteதம்பீ!
தமிழ் கற்ற பேறும்
தங்களைப் போன்றவர் தரும்
சீரும் இதுவாகும்
நன்றி
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteநட்பை போற்றிய குறள்களை
அழகுற கையாண்டிருக்கிறீர்கள் புலவரே.
வடித்த கவிதை மனத்தைக் கவர்கிறது.
நட்புக் குறள்களுக்கு கவிதை விளக்கம்.
நன்றி அன்பரே!
எனக்குப் பெருமை சேர்தீர்
புலவர் சா இராமாநுசம்
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா.
நட்பு பற்றிய நல்ல கவிதை1
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteநன்றி ஐயா
புலவர் சா இராமாநுசம்
நட்பு பற்றி எழுதிய மரபுப் பா. அருமை...அருமை...மகிழ்ந்தேன் பகிர்விற்கு. இறை அருள் கிட்டட்டும். அன்புடன்
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இடுக்கண் களைதல் நட்பென்றே-குறள்
ReplyDeleteஇயம்பிய கருத்தும் மிகநன்றே/
இயல்பாய் இயம்பிய கவி நன்றே!!
குறள் வழி ...புலவர் கவிதை வழி நட்பு... அருமை...
ReplyDeleteரெவெரி
குறளைச் சேர்த்துக் கவி படைத்து, உலகப் பொது மொழிக்குப் பெருமை சேர்த்த கவியே நீங்கள் வாழ்க!
ReplyDeleteநல்லது. இது தேவையும் கூட.
ReplyDeletekovaikkavi said
ReplyDeleteநன்றி சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
இராஜராஜேஸ்வரி said
ReplyDeleteநன்றி சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
நிரூபன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
id said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
JOTHIG ஜோதிஜி said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
குறள் வழி நட்பு அருமையா சொல்லியிருக்கீங்க ஐயா. நன்றி
ReplyDeleteநட்பின் பெருமையை வியந்து படித்தேன்
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்
Lakshmi said...
ReplyDeleteநன்றி! சகோதரி
புலவர் சா இராமாநுசம்
♔ம.தி.சுதா♔ said...
ReplyDeleteநன்றி! சகோ!
வலை வழிவந்தேன்
கண்டீரா..
புலவர் சா இராமாநுசம்
nallarukku sir!.....sorry sir no tamil font:(
ReplyDeleteஅன்புடன் அருணா said...
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
உணர்ச்சி ஒன்றே நட்பாகும்-இருவர்
ReplyDeleteஉள்ளம் ஒன்றின் பொட்பாகும்
புணர்ச்சி பழகுதல் வேண்டாவே-இது
புரிந்தால் போதும் ஈண்டாவே
தளர்ச்சி இன்றி நடைபோடும்-நட்பு
தமிழ்போல் அழியா நிலைநாடும்
வளர்ச்சி காணும் எழுமதியாம்-தேய்வு
வாரா என்றும் முழுமதியாம்
மிகவும் அருமையான வரிகளையா .
பாராட்டுக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ......
அம்பாளடியாள் said
ReplyDeleteநன்றி மகளே!
புலவர் சா இராமாநுசம்
நட்பின் மேன்மையை அழகாய் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தக் கவிதைக்கு என் பாராட்டுகள் ஐயா. தங்களது இந்த முயற்சி தொடர்ந்து வந்து அனைவருக்கும் பயனளிக்கட்டும்.
ReplyDelete