Tuesday, September 6, 2011

பேணிக் காப்போமே மருந்தின்றே!

நோயற்ற வாழ்வுக்கு என்னவழி-காண
   நோக்குவீர் முன்னோரும் சொன்னமொழி
 வாயற்ற சீவனை உண்ணவேண்டா-என
   வாழ்வினில் எவருமே உறுதிபூண்டா
 பாயுற்று நோயுற்று வீழவேண்டாம்-தூய
   பச்சை காய்தன்னை உண்ணலிண்டாம்
காய்முற்றி கனிதன்னை நாளுமுண்ண-தேடி
         காலனும் வருநாளும் தள்ளபின்னே

அற்றது அறிந்துமே உண்பீரெனில்-அதுவும்
    அளவாய் அறிந்துமே உண்பீரெனில்
மற்றது குறையினும் அதிகமெனில்-நோய்
    மறைவது வருவது ஆகுமெனில்
உற்றதை வள்ளுவர் உரைத்தபடி-நாம்
    உணர்ந்துமே செயல்படின் அன்னபடி
பெற்றிட உணவினை அருந்தின்றே-உடலை
    பேணிக் காப்போமே மருந்தின்றே

46 comments:

  1. அற்றது அறிந்துமே உண்பீரெனில்-அதுவும்
    அளவாய் அறிந்துமே உண்பீரெனில்
    மற்றது குறையினும் அதிகமெனில் ///

    அமிர்தமானாலும் அளவோடு இருந்தால்தான் மதிப்பு..


    வாழ்த்துக்கள் அய்யா..

    ReplyDelete
  2. வேடந்தாங்கல் - கருன் *! said...

    உண்மைதான் நண்பரே!

    பசித்துப் புசி என்பதின் விரிவே இது
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. சரியான வார்த்தை ஐயா நீங்க சொன்னது....

    இம்சை செய்து வாயில்லா பிராணியை வதைத்து நம் ருசிக்காக கொன்று உண்டு அதனால் வரும் வியாதியை தடுக்க நீங்க படைத்த வரிகள் மிக மிக அருமை ஐயா...

    பச்சை காய்கறிகள் கனிகள் கீரை வகைகள் பால் இப்படி உண்பதால் உடலுக்கு தேவையான எல்லா போஷாக்கும் அதிலேயே கிடைத்துவிடுவதால் நமக்கு மாமிசம் உண்ணும் அவசியமே இல்லை.... அவைகளும் பிழைத்து போகட்டுமே....

    நோயற்ற வாழ்வு வாழ சிறந்த வரிகள் அமைத்த கவிதை மிக மிக சிறப்பு ஐயா...

    தங்கள் உடல்நலம் இப்போது எப்படி இருக்கிறது ஐயா?

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு ஐயா...

    ReplyDelete
  4. ஆகுலன் said...

    நன்றி! ஆகுலன்!

    ஆகுலன் said...

    ReplyDelete
  5. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    நன்றி!நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. மஞ்சுபாஷிணி said

    அன்பு சகோதரியே நீங்கள் காட்டும் அன்பும் பாசமுமே என் உள்ளத்தையும உடலையும் வாழவைக்கும் மாமருந்தாகும் கவலற்க!நன்றி! இராமாநுசம்

    ReplyDelete
  7. எப்போதுமே பச்சைக்காய்கறிகள் உண்டு வாழ்வது உடலுக்கு அத்தனை நன்மை பயக்கும், அளவோடு உண்பது ஆயுளை அதிகரிக்கும் என்ற உண்மைகளை வலியுறுத்தும் இந்தக் கவிதை மிகச் சிறப்பாக இருக்கிறது!

    ReplyDelete
  8. அருமையான பதிவு
    சட்டென முடித்துவிட்டதைப்போல ஒரு எண்ணம்
    தோன்றுவதைத் தவிர்க இயலவில்லை
    கூடுதலாக இன்னும் ஒரு பத்தி எழுதி இருக்கலாமோ?
    பயனுள்ள தரமான பதிவைத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள் த.ம 3

    ReplyDelete
  9. உண்ணும்போது இன்னும் சிறிது சாப்பிடலாம் என்று தோன்றும்போதெ உணவை முடித்துக் கொள்ளல் அளவாக உண்ண ஒரு வழி. இன்னொரு பயிற்சி. உணவு பரிமாற வரும்போது உண்பவர் தன் தலையை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று நான்கு முறை ஆட்டவேண்டும். பரிமாறுபவர் புரிந்து கொள்வார். பயனுள்ள பகுதி. அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நோயற்ற வாழ்வே
    குறைவற்ற செல்வம்
    விளக்கம் சொல்ல
    விளம்பிய கவிதை
    விரும்பிப் படித்தேன்.

    தமிழ்மணம் 4

    ReplyDelete
  11. (அளவாய் அறிந்துமே உண்பீரெனில்
    மற்றது குறையினும் அதிகமெனில்...)மிக சரியான வரிகள். காலத்துக்கு தேவையான பதிவு. பெரிய விடையத்தை கவிதை வடிவில் மிக அழகாக சுருங்கச் சொல்லி விளக்கும் கவிதை 1

    ReplyDelete
  12. முதுகுவலி இப்போது எப்படி இருக்கிறது ஐயா?

    ReplyDelete
  13. வளருற பிள்ளை முட்டை இறைச்சி சாப்பிடனும் எண்டு சொல்லி சொல்லியே நம்மள கெடுத்துட்டான்கையா

    ReplyDelete
  14. மனோ சாமிநாதன் said

    தங்களின் மனங்கவர்ந்த
    பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  15. Ramani said...

    சட்டென முடித்துவிட்டதைப்போல ஒரு எண்ணம்
    தோன்றுவதைத் தவிர்க இயலவில்லை
    உண்மை சகோ முற்றிலும் உண்மை!!
    என் உள்ளத்து ஏற்பட்ட இதே உணர்வை
    உங்கள் உள்ளத்தும் ஏற்பட்டது நம்இருவர்
    எண்ணம் எப்போதும் ஒன்றே என்பதை
    உணர்துகிறது அல்லவா
    ஆம் குறைப் பிரசவமே!
    சூழ்நிலை அப்படி ஆயிற்று

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. வள்ளுவர் வழியில் நல்ல பதிவு!

    ReplyDelete
  17. G.M Balasubramaniam said

    பெருமைக்கும், பெருந்தன்மைக்கும்
    உரிய ஐயா! மிக்க நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. மகேந்திரன் said...

    நோயற்ற வாழ்வே
    குறைவற்ற செல்வம்
    விளக்கம் சொல்ல
    விளம்பிய கவிதை
    விரும்பிப் படித்தேன்

    சுருங்கச் சொல்லி நல் விளக்கம்
    தந்தீர் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said

    பாராட்டுக்கு நன்றி
    பாசத்தோடு உடல் விசாரிக்கும்
    உங்களைப் போன்ற அன்பு உள்ளங்கள்
    என்னைச் சுற்றியுள்ள வரை எந்த வலியும்
    துன்புறுத்தாது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. கவி அழகன் said

    முட்டை சாப்பிடுவதா இல்லையா
    உன் முடிவு!-வயிறு
    முட்ட சாப்பிடாதே என்பதே
    என் வேண்டுகோள்
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. சென்னை பித்தன் said...

    சித்தம் மகிழ பணியைச்
    செய்துவிட்டு வந்த
    பித்தரே! வணக்கம் நன்றி!

    ReplyDelete
  22. பசிக்கு உண்போமே தவிர ருசிக்கு அல்ல!
    உணர்ந்தால் உணவே மருந்து!
    உணர்த்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  23. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  24. வணக்கமையா சரியாத்தான் சொல்லுறீங்க ஆனா நான் இத கடைப்பிடிக்கிறேன்னு சொன்னால் எல்லோரும் சிரிப்பாங்க.. நான் கோழியடிச்சத பதிவிலேயே போட்டுட்டேனேய்யா ஹி ஹி.. இனி மாமிச உணவுகளை குறைத்துக்கொண்டு வருகிறேனையா... வாழ்துக்கள் ஐய்யா கவிதை அருமை..

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  25. வணக்கம் ஐயா,
    வயதான பின்பும் நாம் நோயின்றி வாழ வேண்டும் எனில் ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ண வேண்டும் எனும் உண்மையினை அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  26. மருந்தின்றி உடலைக் காத்து
    மகத்தானா வாழ்வு வாழும் வழியை
    விருத்தத்தில் தந்தீரே ஐயா
    விருட்சமாய் நீரும் நீடுழி வாழி ஐயா!

    ReplyDelete
  27. வெளிநாட்டில் குளிர் தாங்கனும் என்றாள் மாமிசம் சாப்பிடனும் என்றாலும் நீங்கள் சொல்லும் வழிமுறைகள் தான் வாழ்விற்கு சிறந்தது ஐயா!

    ReplyDelete
  28. //அற்றது அறிந்துமே உண்பீரெனில்-அதுவும்
    அளவாய் அறிந்துமே உண்பீரெனில்//

    மொத்த சாராம்சத்தையும் உள்ளடக்கியிருக்கும் அருமையான வரிகள்..

    ReplyDelete
  29. உணவே மருந்து என்பதை கவிதையில் கலக்கலாக உணரவைத்துவிட்டீர்கள் ஐயா...

    ReplyDelete
  30. பசித்துப் புசி...அருமையான கவிதை...
    நல்லாயிருந்தது அய்யா..
    ரெவெரி

    ReplyDelete
  31. இன்றைய காலத்துக்கு ஏற்ற பதிவு. தற்போது குழந்தைகளின் உணவுப்பழக்கம் முற்றிலும் மாறுபட்டு வருகிறது. எது கெடுதலோ அதைத்தான் பிடிவாதமாக உண்டு உடல் பெருத்துப் போகின்றனர். போதாக்குறைக்கு உடற்பயிற்சியோ ஓடிவிளையாடுவதோ கிடையாது. கணினி, தொலைக்காட்சி முன் அமர்ந்துவிடுகின்றனர். உணவே மருந்து என்பதை இளமையில் மறந்தால் முதுமையில் மருந்தே உணவு என்றாகிப் போகிறது. அதற்கு இளமையிலேயே உணவில் கட்டுக்கோப்பாயிருந்து, ஆரோக்கியத்தைக் கடைபிடிக்கலாமே... நல்லக் கருத்துகளை நச்சென்று கவிதையில் உரைத்திருக்கிறீர்கள். ஏற்றுக்கொள்வோருக்கு உடனடிப் பலன் கிட்டுவது உறுதி. மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  32. கோகுல் sai

    நன்றி! நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. Rathnavel said...

    நன்றி! ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. காட்டான் sa

    நன்றி காட்டான்!
    முதலில் என் பேரன் பேத்திகளின்
    படிப்பைகு கவனியுங்கள்
    மற்றது பிறகு!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. நிரூபன் said...

    எத்தனைப் பணிகள் இருந்தாலும்
    தவறாமல் கருத்துரை வழங்கும்
    உமக்கு என்நன்றி என்றென்றும் உரியது
    சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. Nesan said...

    சூழ்நிலையின் காரணமாக நாம்
    விரும்பாத சில செயல்களை செய்ய வேண்டியுள்ளது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. அமைதிச்சாரல் said...

    மொத்த சாராம்சத்தையும் உள்ளடக்கியிருக்கும் அருமையான வரிகள்..

    குற்றால சாரலென குளிர்விக்கும் கருத்துரையே
    நன்றி நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  38. கீதா said...


    ஏற்றுக்கொள்வோருக்கு உடனடிப் பலன் கிட்டுவது உறுதி. மிகவும் நன்றி ஐயா.

    அன்பின் வழி வரும் பாராட்டு ஆர்வத்தைத்
    தருகின்றது
    நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  39. விக்கியுலகம் said...

    நன்றி!நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. Thekkikattan|தெகா said...

    ம் அது பலவே
    புரிந்திட இலவே

    நன்றி!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  41. மாய உலகம் said...

    உணவே மருந்து என்பதை கவிதையில் கலக்கலாக உணரவைத்துவிட்டீர்கள் ஐயா...

    நன்றி மாய!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  42. id said...

    பசித்துப் புசி...அருமையான கவிதை...
    நல்லாயிருந்தது அய்யா..
    ரெவெரி
    நன்றி ரெவெரி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete