Sunday, September 4, 2011

என்னை சுற்றி உங்கள் சிந்தனைகள்

என்னை சுற்றி உங்கள் சிந்தனைகள்
எதற்கு வீணாம் தருவீர் நிந்தனைகள்
தன்னைத் தானே இவ்வுலகம் தினம்
தட்டா மாலையாய் சுற்றல் போல்
அன்னை வயிற்றில் அவதறித்து இந்த
அவனியில் உதித்த  இன்று வரை
சொன்னதை ஏதும் செய்தேனா நானும்
சுற்றம் உலகென நாளும் வந்தேனா

வையம் தன்னில வாழ்வாங்கு வாழ
வகுத்த வள்ளுவன் குறள் ஓங்க
செய்யும் செயலில் கொண்டேனா நான்
செய்வது தவறெனக் கண்டேனா
பொய்யும் புரட்டும் உலகெங்கும்
போகிற வழியில் நானெங்கும்
பையில் பணமே உள்ளவரை நடந்த
பாதையைச் சொன்னால் நிந்தனைகள்

பெரிதாய் என்ன சாதித்தேன் செய்த
பிழையைச் சொன்னால் நிந்தித்தேன்
அரிதாய் ஏதே இரண்டொன்றே நானும்
ஆற்றிய துண்டா அறியேனே
உரிதா ஏதும் இல்லையென நீர்
உணர்வீர் தெளிவீர் எனவே தான்
தெரியாத் தனமாய் எனைச் சுற்றி வீணாக
எதற்கு வேண்டும் உங்கள் சிந்தனைகள்

புலவர் சா இராமாநுசம்

52 comments :

  1. விடுமுறையில் அழகிய கவிதை..
    வாசித்தேன் ரசித்தேன்...

    ReplyDelete
  2. ////////
    பெரிதாய் என்ன சாதித்தேன் செய்த
    பிழையைச் சொன்னால் நிந்தித்தேன்
    /////////


    உண்மைதான்...

    ReplyDelete
  3. நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. கவிதை வீதி # சௌந்தர் said

    வார்ப்பில் வந்த தலைப்பு!
    எப்போதோ எழுதியது.
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. பெரிதாய் என்ன சாதித்தேன் செய்த
    பிழையைச் சொன்னால் நிந்தித்தேன்
    அரிதாய் ஏதே இரண்டொன்றே நானும்
    ஆற்றிய துண்டா அறியேனே
    உரிதா ஏதும் இல்லையென நீர்
    உணர்வீர் தெளிவீர் எனவே தான்
    தெரியாத் தனமாய் எனைச் சுற்றி வீணாக
    எதற்கு வேண்டும் உங்கள் சிந்தனைகள்




    அருமையான வரிகள் ஐயா. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    ReplyDelete
  7. //பொய்யும் புரட்டும் உலகெங்கும்
    போகிற வழியில் நானெங்கும்
    பையில் பணமே உள்ளவரை நடந்த
    பாதையைச் சொன்னால் நிந்தனைகள்//

    அழகிய சீரிய சிந்தனை மிக்க
    வாழ்வியல் நோக்கம் கொண்ட வரிகள் ஐயா.
    அருமை.
    தமிழ்மணம் 3

    ReplyDelete
  8. பெரிதாய் என்ன சாதித்தேன் செய்த
    பிழையைச் சொன்னால் நிந்தித்தேன்
    அரிதாய் ஏதே இரண்டொன்றே நானும்
    ஆற்றிய துண்டா அறியேனே
    உரிதா ஏதும் இல்லையென நீர்
    உணர்வீர் தெளிவீர் எனவே தான்
    தெரியாத் தனமாய் எனைச் சுற்றி வீணாக
    எதற்கு வேண்டும் உங்கள் சிந்தனைகள்
    நல்ல சிந்தனை எல்லோரும் உண்மையில் சிந்திக்க வேண்டிய சிறப்பான சிந்தனை பாராட்டுகள் ஐயா

    ReplyDelete
  9. பொய்யும் புரட்டும் உலகெங்கும்...

    நிதர்சனமான உண்மை ஐயா....

    நல்ல கவிதை வரிகள்...

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. Lakshmi said...

    நன்றி சகோதரி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. Rathnavel said...

    நன்றி ஐயா!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. மகேந்திரன் said

    அழகிய சீரிய சிந்தனை மிக்க
    வாழ்வியல் நோக்கம் கொண்ட வரிகள் ஐயா.
    அருமை.

    என்னை நானே ஆய்ந்த போது
    என்னுள் எழுந்த எண்ணங்களின்
    வெளிப்பாடே இக் கவிதை
    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. சென்னை பித்தன் said

    நன்றி ஐயா!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. மாலதி said...

    அன்பு மகளே!
    பாராட்டுக்கு நன்றி!
    படிப்பு தொடரட்டும்.

    ReplyDelete
  15. வெங்கட் நாகராஜ் said...

    வளரும் உலகோடு வளரும் கேடுகள்
    கண்டு மனம் வருந்துகிறது
    நன்றி அன்பரே!

    ReplyDelete
  16. படிப்பவர்கள் அனைவரும்
    அவரவர்களை ஒருமுறை
    நினைத்துப் பார்க்கச் செய்யும் கவிதை
    அருமையிலும் அருமை
    நான் கவிதையைப் படித்து முடித்ததும்
    சிறிது நேரம் என்னைப்பற்றி யோசித்துவிட்டுத்தான்
    இந்தப் பின்னூட்டமே இடுகிறேன்
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம6

    ReplyDelete
  17. நல்ல சிந்தனை புலவரே.

    தொடர்ந்து வேர்களைத்தேடி வந்து இலக்கியத் தேன் பருகி என் சிந்தனைகளை உள்வாங்கி தங்கள் சிந்தனையை முன்வைத்துச் சென்றமையா உங்களுக்கு “சிந்தனைச் சிற்பி“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

    நன்றி.

    ReplyDelete
  18. ரெம்ப ரசித்தேன்....

    ReplyDelete
  19. அருமையான பாடல் அண்ணாச்சி !

    ReplyDelete
  20. //பெரிதாய் என்ன சாதித்தேன் செய்த
    பிழையைச் சொன்னால் நிந்தித்தேன்
    அரிதாய் ஏதே இரண்டொன்றே நானும்
    ஆற்றிய துண்டா அறியேனே//

    பெரிதாய் நீவீர் சாதித்தீர் எனவே
    சாதித் தேன் என்பதை நிந்தித்தேன்
    அரிதாய் ஏதோ இரண்டொன்று
    கவி பாடுவ்தும் சாதனையே!

    ReplyDelete
  21. தமிழ்மணத்தில் தங்களுக்கு 10 out of 10 கொடுக்கும் பாக்யம் பெற்றேன். நல்ல நயமான கவிதை.


    சிந்தனைச் சிற்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  22. One has to do an introspection once in a way. You have done it. Can I call it AKANOKKU.?Good.

    ReplyDelete
  23. நண்டு @நொரண்டு -ஈரோடு said

    நன்றி நண்பரே நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. Ramani said...

    நம் இருவர் உணர்வும் ஒன்றுதானே சகோ!

    உணர்ச்சி தான் நட்பாங் கிழமைதரும்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. என்ன அழகாய் உருண்டு வருது வரிகள்
    குழந்தை போல

    ReplyDelete
  26. முனைவர்.இரா.குணசீலன் said

    தம்பீ உடையான் படைக்கு அஞ்சான்
    இங்கு.. பட்டத்துக்கு அஞ்சானா

    நன்றி முனைவரே!நன்றி!
    நான் வேர்களைத் தேடி வரும் விழுதாகவே
    வாழும் வரை இருப்பேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. துஷ்யந்தன் said...

    மிகவும் நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. koodal bala said...

    நன்றி பாலா நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. ராஜ நடராஜன் said

    பெரிதாய் நீவீர் சாதித்தீர் எனவே
    சாதித் தேன் என்பதை நிந்தித்தேன்
    அரிதாய் ஏதோ இரண்டொன்று
    கவி பாடுவ்தும் சாதனையே!

    தங்கள் பாராட்டு, நான் கற்ற
    தமிழ் தந்த பேறு நன்றி சகோ!

    ReplyDelete
  30. பெரிதாய் என்ன சாதித்தேன் செய்த
    பிழையைச் சொன்னால் நிந்தித்தேன்

    மனித இயல்பே அதுதானே.
    அதை உணர்ந்தால் உண்டு நன்மை..

    ReplyDelete
  31. வணக்கம் ஐயா,
    எப்போதுமே படைப்பாளிகளை ஆராய்வதை விடுத்து,
    அவரின் படைப்புக்களோடு உங்கள் பார்வை நின்று விடலாமே எனும் உணர்வினை இக் கவிதை தாங்கி வந்திருக்கிறது..
    பரந்த மனம் கொண்ட சிறந்த கவியின் நிறைந்த பொருள் துலங்கும் கவிதை.

    ReplyDelete
  32. //பொய்யும் புரட்டும் உலகெங்கும்
    போகிற வழியில் நானெங்கும்
    பையில் பணமே உள்ளவரை நடந்த
    பாதையைச் சொன்னால் நிந்தனைகள்//

    அருமையான கவிதை...

    ReplyDelete
  33. நிறைகுடம் தளும்பாது என சொல்வார்கள்... தன்னடக்கம் மிகுந்த கவிதையினை கலக்கலாக கொடுத்து அசத்தியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  34. வை.கோபாலகிருஷ்ணன் said...

    உள்ளுவதெல்லாம் உயர்உள்ளல் என்ற
    நோக்கோடு கருத்துரை வழங்கினீர் ஐயா
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. கவி அழகன் said...

    தம்பீ வாழ்க!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. ரிஷபன் said...

    நல்ல கருத்துரை வழங்கினீர் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. நிரூபன் said

    காலில் இறக்கை கட்டிய
    நண்பருக்கு கனிவான நன்றி!

    நிரூபன் said

    ReplyDelete
  38.  வாழ்த்துக்கள் ஐயா எதையுமே உங்கள் கவிதைக் கண்னோட்டத்தில் பார்பதே அழகுதானய்யா..(ஐயாவிடம் கோவமா..!!? துடித்துவிட்டேன் ஐயா வேலைப்பளுவிற்கிடையிலும் மூன்று பேரின் தூக்கு சம்பந்தமான பதிவிலும் முடங்கிவிட்டேனையா என்மீது  உங்களுக்கு கோவம் இல்லைத்தானே.. உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்)

    காட்டான் குழ போட்டான்(என்மீதான உங்கள் அன்புக்கு நன்றி ஐயா)

    ReplyDelete
  39. Riyas said...

    தம்பீ வலைதேடி வந்தேனே
    பார்த்தீரா நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. அருமையான கவிதை ஐயா.வெகு சிறப்பான வரிகள்.

    ReplyDelete
  41. மாய உலகம் said...

    தம்பீ நான் வர இயலா காலத்தும்
    வந்துவந்து வாழ்த்திய வள்ளலே நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  42. காட்டான் said
    காட்டான் said...

    தேடினேன் வந்தீர் நண்ப!
    தேனென இனித்தன்ப
    வாடினேன் வந்தீர் நண்ப!
    வருத்தமும் நீங்க‍அன்ப

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  43. Murugeswari Rajavel said...

    நன்றி! சகோதரி.


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  44. சிறப்பான சிந்தனை...அருமையான கவிதை...புரண்டு வரும் தாமிரபரணி போல் வரிகள்...

    ரெவெரி

    ReplyDelete
  45. தினம் தினம் தமிழ்ப்பாகில் தோய்த்த கவிப்பாக்கள் அள்ளித் தரும் தங்கள் பணியொன்றே போதுமே வாழ்நாளின் சாதனை பறைசாற்ற! பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  46. நல்ல கவிதை வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  47. நல்லவை செய்திட சொல்லிட தயங்கிடா மனது
    அல்லாதவை தடுத்திட துடித்திடும் எண்ணமது
    எல்லாமே இறைவன் சித்தப்படிஎன விட்டுவிட எண்ணாது

    நம்மை நாமே பகுத்தறிய நினைக்கவைத்த அருமையான வரிகள் ஐயா உங்களுடையது....

    உங்கள் வரிகள் நாளுக்கு நாள் வாசிக்கும்போது எங்களை நாங்கள் பண்படுத்திக்கொள்ள வழி காமிக்கும் ஒரு அருமையான பொக்கிஷமாக அமைவது சிறப்பு ஐயா....

    அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு...

    ReplyDelete
  48. கீதா said...

    அன்பு சகோதரி
    நன்றி!
    ஒவ்வொரு கவிதையையும் கண்டு
    கருத்துரை வழங்கும் தங்களுக்கு நான்
    என்றும் கடமைப் பட்னவனாவேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  49. தேனம்மை லெக்ஷ்மணன் said

    முதற்கண் வலைவந்து கருத்துரை வழங்கும் தங்களுக்கு நான்
    என்றும் மறவா நன்றி செலுத்துகிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  50. மஞ்சுபாஷிணி said...

    சகோதரி
    சற்று காலம் கடந்து நன்றி
    தெரிவிக்க நேர்ந்தது! பொறுத்தருள்க!
    உடல் உள்ளம் இரண்டும் நலமே
    நன்றி !

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  51. id said...

    விளக்கம் கூறி கருத்துரை வழங்கினீர்
    நண்ப! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...