Thursday, September 1, 2011

தண்டனை இரத்தா செய்துள்ளார்

தள்ளியே  நாட்களை வைத்துள்ளார்-தூக்குத்
    தண்டனை இரத்தா செய்துள்ளார்
உள்ளுவீர் தமிழரே ஓயாதீர்- இன
    உணர்வில் அணுவும் தேயாதீர்
கொள்ளியை வைத்தவர் அவரென்றே-மேலும்
    கொடுமை செய்வது தவரென்றே
எள்ளியே உலகம் நகைக்கட்டும்-செய்ய
    ஏதும் வழியின்றி திகைக்கட்டும்

மக்கள் எழுச்சி கண்டாரே-இன்று
     மாநிலம் மாற்றிக் கொண்டாரே
இக்கணம் முதலாய் மேன்மேலும்-ஏதும்
     இடையின்றி ஒவ்வொரு நாள்போலும்
திக்கது எட்டும் பரவட்டும்-இனத்
      தீயெனும் உணர்வே விரவட்டும்
தக்கது அறவழி போராட்டம்-உயிர்
     தருவது அல்லென கூறட்டும்

எட்டு  வாரம் எதற்காக-ஆட்சி
    இணங்கி வருமா இதற்காக
குட்டுப் பட்டதை மறப்போமா-மேலும்
   குட்டுப்  படுதல் சிறப்பாமா
ஒட்டும் உறவும் வேண்டாமே-இன
    உணர்வது ஒன்றாம் ஈண்டாமே
கொட்டும் முரசே ஒலிக்கட்டும்-வெற்றி
    கொண்டதை சங்கே முழங்கட்டும்

முடங்கிட அனைத்து வேலைகளும்-நகரின்
    முக்கிய  அனைத்து சாலைகளும்
தொடங்கிட ஊர்வல ஆர்பாட்டம்-நாளும்
    தொடர்கதை ஆகிட போராட்டம்
திடங்கொள செய்வீர் மறவர்களே-நன்கு
    திட்டமே வகுப்பீர் உறவுகளே
அடமிகு  அரசும் இறங்கிவரும்-போர்
     அறவழி செய்யின் நன்மைதரும்

54 comments:

  1. இன்னும் 8 வாரங்கள் காத்திருந்து போராட்டதை தொடர்வதைவி்ட...

    இடைவிடாமல் தொடர்ந்து விழிப்புணர்வு போராட்டங்களை செய்துக் கொண்டே இருக்க வேண்டும்...

    ReplyDelete
  2. அர்த்தமுள்ள கவிதை...

    நன்றி ஐயா..!

    ReplyDelete
  3. போர் அறவழி செய்யின் நன்மைதரும்.

    நன்றாகச் சொன்னீர்கள் புலவரே.

    ReplyDelete
  4. மக்கள் எழுச்சி கண்டாரே..

    இவ்வவெழுச்சித் தீப்பொறி எல்லோருக்கும் பற்றிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  5. மிகச்சரியாக சொன்னீர்கள் புலவர் ஐயா!ஐயா தங்களுக்கு முதுகு வலி தற்பொழுது எப்படி உள்ளது.

    ReplyDelete
  6. வந்தேன் ஐயா!
    ஆம்!தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர
    நிரந்தர தடை செய்யப்படவில்லை!
    நாம் தோய்ந்து விடக்கூடாது!
    அறவழி போராட்டத்தை இறுதி வரை தொடருவோம்!
    பகிர்வுக்கு நன்றி ஐயா!எழுச்சி தரும் கவிதையை படைத்தமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  7. # கவிதை வீதி # சௌந்தர் said
    எனக்கு ஊக்கம் தருவது
    உங்கள் வரவு
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. போராடுவோம் ஓயாமல்
    உயிர் காப்போம்

    ReplyDelete
  9. கவிதை வீதி # சௌந்தர் said...

    நன்றி அன்பரே

    ReplyDelete
  10. முனைவர்.இரா.குணசீலன்

    சங்கச் செல்வரே!
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. முனைவர்.இரா.குணசீலன்

    ஆம் !முற்றிலும் உண்மை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. ஸ்ரீதர் said...

    நன்றி அன்பரே
    வலி குறைந்துள்ளது.
    இன்னும் சற்று ஒய்வுதேவை
    மனம் அமைதி காணவில்லை செங்கெடியின்
    தியாகம் மனதை கிளரிக் கொண்டே இருக்கிறது
    தியாகம் வீண்போகக் கூடாது
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. கோகுல் said

    சுவற்றில் அடித்த பந்து
    உங்கள் வரவு நன்றி நண்பரே!
    தங்கள் உறுதி கண்டு மகிழ்கிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. கவி அழகன் said...

    நல்லது நடக்க நம்புவோம் தம்பீ

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. எனது ஆதங்கமும் இதுதான்........தள்ளித்தான் வைக்க பட்டிருக்கிறது.....தடை செய்ய படவில்லை...

    ReplyDelete
  16. ஆகுலன் said...

    ஆகவேதான் முதுகுவலியும் பொருட்படுத்தாமல்
    இக் கவிதையை எழுதினேன் தம்பீ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. அனல் பறக்கும் வார்த்தைகளுடன் கூடிய
    அழகான வழிகாட்டும் ஒளியாக உள்ளது
    உங்கள் கவிதை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 5

    ReplyDelete
  18. Ramani said...

    உண்மைதான் சகோ
    செங்கொடியின் மரணம் என்
    மனதை விட்டு அகலவில்லை அதன்
    விளைவே வலியையும் பொருட்படுத்தாது
    இக் கவிதையை எழுதினேன்
    ஓட்டுக்கும் கருத்துரைக்கும் நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  19. உணர்ச்சிக்கவிதை நல்லாயிருந்தது...புலவரே...

    ReplyDelete
  20. ரெவெரி said...

    நன்றி நண்பரே
    கருத்துரைக்கும் ஓட்டளிப்புக்கும்

    சா இராமாநுசம்

    ReplyDelete
  21. நீங்கள் சொல்வது சரிதான் ஐயா..தொடர்ந்து நாம் விழிப்புடன் இருக்கவேண்டிய நேரம் இது.

    ReplyDelete
  22. போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி ..கவிதை நன்று ஐயா ...

    ReplyDelete
  23. செங்கோவி said...

    ஆறினால் கஞ்சி பழங்கஞ்சி
    ஆகிவிடக் கூடாது நண்பரே!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. கந்தசாமி. said...

    கருத்துரை வழங்கினீர்
    நன்றி அன்பரே!


    சா இராமாநுசம்

    ReplyDelete
  25. சென்னை பித்தன் said...

    நன்றி ஐயா!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  26. ஐயா..இன்று ஓர் மரபுக் கவிதை எழுதியுள்ளேன். தங்களின் கருத்தினை எதிர்பார்க்கிறேன்.
    ஓய்வாக இருக்கும் போது வாருங்கள்.

    ReplyDelete
  27. மக்களின் குரல் ஓயாது ஓங்கில் ஒலித்தால் தான் நிச்சயமாக தண்டனை நிறுத்தப்படும் என்பதை ஆணித்தரமான கவி வரிகள் ஊடாக நினைவுபடுத்தியிருக்கிறீங்க.

    ReplyDelete
  28. உணர்ச்சிமிக்க கவிதை ஓயாக்கூடாது என்ற சொல்லை கடைபிடிப்போம் ஐயா....கவிதைக்கு நன்றி

    ReplyDelete
  29. பாரதிதாசன் சாயல் உங்கள் கவிதையில்!

    ReplyDelete
  30. புரட்சி வரிகள் பிரமாதம்.

    ReplyDelete
  31. நீங்கள் சொல்வது சரிதான் அய்யா,
    யார் யார் எப்போ எப்போ மாறுவார்களோ......

    ReplyDelete
  32. அடமிகு அரசும் இறங்கிவரும்-போர்
    அறவழி செய்யின் நன்மைதரும்//

    சரியான கவிதை.

    ReplyDelete
  33. நிரூபன் said...

    உடனடியாகப் பார்த்து
    எழுதுகிறன் சகோ!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  34. நிரூபன் said...

    வேகம் இன்னும் வேகம் எடுக்கவேண்டும்
    அதுதான் விவேகம் ஆகும் என்பதே என்
    கருத்து
    நன்றி! சகோ!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  35. மாய உலகம் said

    உண்மை! தம்பீ!
    கருத்துரைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  36. ராஜ நடராஜன் said...

    அன்பு சகோ நடராச!
    பாராட்டுக்கு தன்றி!

    இராமாநுசம்

    ReplyDelete
  37. துஷ்யந்தன் said...

    நன்றி அன்பரே!

    ராமாநுசம்

    ReplyDelete
  38. துஷ்யந்தன் said...

    தங்கள் வலை வந்து படித்தேன்
    கருத்துரை எழுத முயன்ற போது
    மின் தடை இயலவில்லை
    ஆனால் நான் எழுத நினைத்ததை....அது

    , யார் யார் எப்போ எப்போ மாறுவார்களோ

    அதை நீங்களே எழுதிவிட்டீர் நண்ப!
    நன்றி

    கருத்து மட்டுமல்ல! சொற்களும் அப்படியே
    சா இராமாநுசம்

    ,

    ReplyDelete
  39. இராஜராஜேஸ்வரி said...

    வருகை தந்துக் கருத்துரைத்தீர்
    நன்றி!

    இராமாநுசம்

    ReplyDelete
  40. அர்த்தமுள்ள கவிதை... காத்திருப்போம்....

    ReplyDelete
  41. வெங்கட் நாகராஜ் said

    நன்றி! நாகராஜ்!

    இராமாநுசம்

    ReplyDelete
  42. தமிழ்மணம் 13


    உணர்ச்சியின் உச்சம்
    ஆயிரம் கோர்த்து நின்றால் ஆதவனும் மறையும்
    தொடர்ந்து போராடினால்
    வெற்றி நிச்சயம்

    போற்றத்தகுந்த கவிதை புலவர் ஐயா...

    ReplyDelete
  43. மகேந்திரன் said

    நன்றி அன்பரே!

    வலைவந்தேன் பார்த்துதீரா

    இராமாநுசம்

    ReplyDelete
  44. மிக மிக அருமை ! வாழ்த்துக்கள் !வெற்றி கிட்டட்டும் !

    ReplyDelete
  45. koodal bala said

    நன்றி பாலா!

    இராமாநுசம்

    ReplyDelete
  46. நண்டு @நொரண்டு -ஈரோடு said

    நன்றி நண்பரே!

    இராமாநுசம்

    ReplyDelete
  47. //எட்டு வாரம் எதற்காக-ஆட்சி
    இணங்கி வருமா இதற்காக
    குட்டுப் பட்டதை மறப்போமா-மேலும்
    குட்டுப் படுதல் சிறப்பாமா
    ஒட்டும் உறவும் வேண்டாமே-இன
    உணர்வது ஒன்றாம் ஈண்டாமே
    கொட்டும் முரசே ஒலிக்கட்டும்-வெற்றி
    கொண்டதை சங்கே முழங்கட்டும்//

    என்னை கவர்ந்த வரிகள்

    நன்றி ஐயா.

    நட்பு பாராட்டும்
    சம்பத்குமார்

    ReplyDelete
  48. சம்பத்குமார் said...

    அன்பரே!
    முதற்கண் தாங்கள் என் வலைவந்து
    வாழ்த்துரைத்தமைக்கு மனங்கனிந்த நன்றி!
    வணக்கம்
    மீண்டும் மீண்டும் வருக!வருக!!
    வேண்டுகோள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  49. மிக அருமையான தாக்கமுள்ள வரிகள் ஐயா...

    உயிரின் மதிப்பை உலகுக்கு உணர்த்த ஒரு உயிரும் பலியாகிவிட்டதே..

    இன்னமும் இவர்களின் தேவை தான் என்ன?

    இருபது வருடமும் ஜெயிலில் கழித்த தண்டனை போதாதா?

    அருமையான வரிகள் ஐயா....

    உங்க மனக்கவலை உங்கள் உடல்நலத்தை இன்னும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்க....

    முதலில் உங்க ஆரோக்கியத்தை தான் நீங்க கவனிக்கனும் ஐயா....

    அன்பு வாழ்த்துகள் ஐயா....

    ReplyDelete
  50. உடன் பிறவா அன்பு சகோதரியே
    நீங்கள் காட்டும் அன்பும் பாசமுமே
    என் உள்ளத்தையும உடலையும்
    வாழவைக்கும் மாமருந்தாகும்
    கவலற்க!நன்றி!
    இராமாநுசம்

    ReplyDelete
  51. உடன் பிறவா அன்பு சகோதரியே
    நீங்கள் காட்டும் அன்பும் பாசமுமே
    என் உள்ளத்தையும உடலையும்
    வாழவைக்கும் மாமருந்தாகும்
    கவலற்க!நன்றி!
    இராமாநுசம்

    ReplyDelete
  52. எத்தனை அன்பு எத்தனை அன்பு இந்த அன்பு என்றும் ஆசிகளாக தொடர்ந்திட இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஐயா,. நீங்கள் நோயற்று நிறைந்த ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ என்றென்றும்....

    ReplyDelete