Wednesday, August 31, 2011

தேசப் புகழைப் பாடுங்கள்

மீள் பதிவு-
             முத்துக்குமாருக்குப் பின் உயிர்த் தியாகம்
                செய்த கிருட்டினமூர்தியை
              நாம் நினைவு கூர  அது போது எழுதிய
               கவிதையே இது

      முத்துக் குமாரை பின்பற்றி-கிருட்டின
            மூர்த்தியும் பெட்ரோல் தனைஊற்றி
      வைத்துக் கொண்டார் தீயென்றே-இங்கே
            வந்தசெய்தி பொய் யென்றே
      செத்துப் போனது எதற்காக-என
            செய்கிறார் வாதம் அதற்காக
      எத்தனை கொடுமை தமிழ்நாடே-இனி
            எரிக்க வேண்டாம் சுடுகாடே
    
     ஒற்றுமை நம்மிடை வேண்டாமா-கூடி
            ஒன்றாய் உறுதி பூண்டோமா
     பெற்றவர் அங்கே அழுதிடவும்-அவர்
            பிள்ளையை பலவாய் எழுதிடவும்
     கற்றவர் செய்யும் செயலல்ல-வீண்
              கதைகள் சொல்வதும் பயனல்ல
     மற்றது உண்மை எதுவென்றே-யாரும்
              மறைக்க இயலா வரும்நன்றே

     மூடி மறைப்பதால் பலனில்லை-இன்னும்
              முள்ளி வாய்க்கால முடியவில்லை
     கேடி பக்சே கொடுங்கோலே-தட்டிக்
                கேட்க அங்கே நாதியிலே
     வாடியே பட்டி மாடுகளாய்-அங்கே
              வாழ்வார் துயரை ஏடுகளே
        தேடி எடுத்துப் போடுங்கள் –பின்
                தேசப் புகழைப் பாடுங்கள்

40 comments:

  1. உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.com/

    ReplyDelete
  2. ரஜினி கிட்டத்தட்ட ஏனெனில் அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையில் அது சித்தரிக்கப்பட்ட உள்ளது வழியில், அசல் வார்த்தை பொருள்படுவதாகவே மாறிவிட்டது. ஒரு படி மேலே இந்த எடுத்து, ரஜினி இப்போது அசல் இருப்பது எப்படி அது நீண்ட கால பலன் பற்றி பேசுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம், அவர் அது பற்றி செல்கிறது எவ்வாறு மேலும் கண்டுபிடிக்கவும்
    http://bit.ly/n9GwsR

    ReplyDelete
  3. மீள்பதிவாயினும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும்
    ஒவ்வொரு சொற்றொடர் ஒரு புதிய அர்த்தத்தைக்
    கொடுத்துப் போகிறது.நெஞ்சக் கனல் ஆறாது இருக்க
    கொஞ்சம் ஊதிவிட்டுப்போகிறது.தரமான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்.த.ம 1

    ReplyDelete
  4. மீள்கவிதையை மீண்டும்
    இன்றைய தினத்தில்
    படிக்கையில்
    ஆயிரம் அர்த்தங்கள்
    சொல்கிறது
    பகிர்வுக்கு நன்றி புலவர் ஐயா

    ReplyDelete
  5. தேடி எடுத்துப் போடுங்கள் –பின்
    தேசப் புகழைப் பாடுங்கள்.

    எழுத்துக்களால் வேள்வி செய்கிறீர்கள்..

    ReplyDelete
  6. எத்தனை கொடுமை தமிழ்நாடே-இனி
    எரிக்க வேண்டாம் சுடுகாடே
    //

    ஆம் ஐயா... உயிர்கள் பலியாவது போதும்... மக்கள் சக்தி ஒன்று திரண்டு போராடுவோம்... கவிதைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  7. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  8. //மூடி மறைப்பதால் பலனில்லை-இன்னும்
    முள்ளி வாய்க்கால முடியவில்லை
    கேடி பக்சே கொடுங்கோலே-தட்டிக்
    கேட்க அங்கே நாதி//

    உறைக்கும்.. நம் நிலையை ஆதங்கத்தோடு சொல்லும் கவிதை
    இவ் வரிகளில் தங்கி உள்ளது எம் தற்போதைய நிலை /

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா,
    ஈழத்தில் வாழ்வோரின் துயரினை ஊடகங்கள் சரியான முறையில் வெளிக்கொணர வேண்டும் என்கின்ற ஆதங்கத்தினையும் தீக்குளிப்பு என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க முடிவல்ல எனும் கருத்தினையும் உங்களின் கவிதை தாங்கி வந்திருக்கிறது.

    ReplyDelete
  10. மனோ சாமிநாதன் said...

    அறிமுகப் படுத்தினீர் நன்றி!அதையும்
    அறிவித்தமைக்கும் மிகமிக நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. Ramani said...

    மனம் நிறைந்தது
    மகிழ்ச்சி மலர்ந்தது
    நன்றி!சகோ
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. மகேந்திரன் said...

    மறவாமல் வரும் அன்பரே நன்றி நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. முனைவர்.இரா.குணசீலன் said

    தம்பீ முனைவருக்கு
    அண்ணனி அன்பு வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. மாய உலகம் said...

    மாய அன்புக்கும் உண்டோ
    அடைக்கும் தாழ்...
    நன்றி!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. துஷ்யந்தன் said...

    அல்லவை தேய
    நல்லவை நடக்கும் நண்ப!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. நிரூபன் said...

    இங்கங்கெனாதபடி வலையுலக மெங்கும்
    எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனே
    இல்லை இல்லை ஆள்பவரே! நிரூப
    வணக்கம் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. //வாழ்வார் துயரை ஏடுகளே
    தேடி எடுத்துப் போடுங்கள் –பின்
    தேசப் புகழைப் பாடுங்கள் //
    சரியாகச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  18. சென்னை பித்தன் said

    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  20. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்....

    தற்போது முதுகுவலி சரியாகிவிட்டதா? உடல்நலனைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் ஐயா...

    ReplyDelete
  21. ரெவெரி said...

    நன்றி சகோ

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. வெங்கட் நாகராஜ் said

    அன்பு நண்பரே
    பாசத்தோடு விசாரிக்கும் தங்களுக்கு
    என் உளங்கனிந்த நன்றி!

    சற்று குறைத்துள்ளது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. வணக்கமையா உங்கட வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா.. மீள்கவிதை என்றாலும் இப்போதும் அதன் வீரியம் வீழவில்லை..

    ReplyDelete
  24. உடல் நிலையில் பதிவினைவிட கூடுதல்
    கவனம் கொள்ளவேனுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    இனிய சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. கவிவரிகளில் சோகம் தமிழ் இனத்தில் பாசம்

    ReplyDelete
  26. காட்டான் said...

    காட்டான் கருத்துரைப்பதில் பலருக்கும்
    எடுத்துக் காட்டாக இருப்பார் நன்றே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. Ramani said...

    அன்பு சகோ!

    உங்கள் நலம் விசாரிப்புக்கும் அக்கரைக்கும் நான் என்றும் கடமைப் பட்டவனாவேன்
    சற்று வலி குறைந்துள்ளது வாளாய் இருக்க
    இயலவில்லை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. கவி அழகன் said...

    என்ன நான் வந்தாதான் வருவீங்களா..?
    நான் வைக்கிறது பொட்டு!
    நீங்க எனக்குப் போடுவது சோறு!
    உணர்ந்தா சரி புரிந்தா சரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. மூடி மறைப்பதால் பலனில்லை-இன்னும்
    முள்ளி வாய்க்கால முடியவில்லை
    கேடி பக்சே கொடுங்கோலே-தட்டிக்
    கேட்க அங்கே நாதியிலே
    வாடியே பட்டி மாடுகளாய்-அங்கே
    வாழ்வார் துயரை ஏடுகளே
    தேடி எடுத்துப் போடுங்கள் –பின்
    தேசப் புகழைப் பாடுங்கள்

    கவிதையில் உங்கள் ஆதங்கம் புரிகிறதையா...
    என் செய்வது இதை யாரும் உணருவதாய்த்
    தெரியவில்லையே!.......அழகிய கவிதை வரிகளால் எம் நெஞ்சை நெகிழ வைக்கின்றீர்கள் .உங்கள் வரவுக்காக நான் காத்திருக்கின்றேன் .நன்றி ஐயா பகிர்வுக்கு ....

    ReplyDelete
  30. செங்கொடியின் ஞாபகமும் வருகிறது...

    ReplyDelete
  31. அம்பாளடியாள் said

    நன்றி மகளே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

    வருகைக்கும் கருத்துரைக்கும்
    நன்றி அன்பரே!

    ReplyDelete
  33. நாட்டின் அவலத்தை நன்றாய் உரைக்கின்றது உங்கள் நாவெழுதுகோல்!
    கூரான எழுத்துளிகள் கொண்டு குடைகிறீர் ஊடகங்களின் பொறுப்பின்மையை!

    ReplyDelete
  34. அருமையான கவிதை

    ReplyDelete
  35. கீதா said...

    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. என் ராஜபாட்டை"- ராஜா said

    நன்றி இராஜா அவர்களே

    ஊக்கம் பெற அடிக்கடி வருக!

    ReplyDelete
  37. சாட்டையை தான் வரியாக்கி எழுதியது போல் உணர்கிறேன் ஐயா....

    அத்தனை அருமை கவிதை வரிகள்...

    உடல்நலம் ரொம்ப முக்கியம் ஐயா....

    அன்பு வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete