காலச் சுவடுகள் கடந்திட நடந்திட-எழில்
காட்சிகள் இங்கே பாடமாய் கிடந்திட
கோலம் காட்டும் செம்மண் முகடுகள்-உற்றுப்
கூறின் பொன்போல் மின்னும் தகடுகள்
ஞாலம் இதுபோல் கொண்டது பலவே-ஆனால்
நாமதில் கண்டதோ மிகவும் சிலவே
சீலம் மிக்கதாம் செம்மண் பூமி-பயிர்
செழித்திட வளர்கும சிறந்த பூமி
இயற்கைக் காட்டும இணையில் காட்சி-கண்
இமைக்க மறக்கும தகையதன் மாட்சி
செயற்கை மிகமிக செழிப்பினை அழிக்கும்-என
செப்பியும் கேளார் சந்ததி பழிக்கும்
இயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே
செயற்கை என்றும் சிகப்பு விளக்கே-மேலும்
செய்வது அனைத்தும் தவறொன விளக்கும்
இயற்கையோட ஒட்டி வாழுவதா?
ReplyDeleteஊரோட ஒட்டி வாழுவதா?
கொஞ்சம் குழப்பமாய் உள்ளது ஐயா..
செப்பியும் கேளார் சந்ததி பழிக்கும்
ReplyDeleteஇயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே//
காலச் சுவடுகள் பதித்துச்
சொல்லும் பாடம்.
ஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே
ReplyDeleteமிக அழகாச் சொன்னீங்க புலவரே.
இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் அழகு நிறைந்துள்ளது.
ReplyDeleteநிலம், நீர், தீ, காற்று, வான் என ஐந்து இயற்கைக் கூறுகளில் நாம் வாழ்ந்தாலும், தாமரை இலை மேல் நீர்த்துளி போல இயற்கையை நீங்கி நம்மால் வாழ முடிகிறது?
புலவரே..
இதோ எனது இயற்கை சார் பதிவு..
அந்தியளங்கீரனார்.
http://gunathamizh.blogspot.com/2010/05/blog-post_17.html
அன்பரே!
ReplyDeleteஇயற்கையோடு இணைந்து
வாழ்வது என்பது காடுகளை அழிப்பதால் வரும் கேடு, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாமை போன்றவை ஆகும்
வருகை தந்து கருத்துரை நல்கினீர் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
''...செயற்கை என்றும் சிகப்பு விளக்கே-மேலும்
ReplyDeleteசெய்வது அனைத்தும் தவறொன விளக்கும்..''
மிக அழகாச் சொன்னீங்க புலவரே.
வேதா.இலங்காதிலகம்.
செயற்கை என்றும் சிகப்பு விளக்கே-மேலும்
ReplyDeleteசெய்வது அனைத்தும் தவறொன விளக்கும்.
மிக அழகாச் சொன்னீங்க புலவரே.
வேதா.இலங்காதிலகம்.
என்றுமே இயற்கையுடன் ஒன்றி வாழ்வது தான்
ReplyDeleteசிறந்தது. நான் ஒரு இயற்கை விருமியும் கூட.
//செயற்கை மிகமிக செழிப்பினை அழிக்கும்-என
ReplyDeleteசெப்பியும் கேளார் சந்ததி பழிக்கும்
இயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே//
super varikal.. vaalththukkal
அழகான வரிகள் புலவரே...
ReplyDeleteவாழ்வு இனிமையானதாய் அமைந்தால், காலச்சுவடும் இனிமையே.
ReplyDeleteசொன்னால் கேட்டுக்கோ
ReplyDeleteஇயற்கையோட வாழக் கத்துக்கோ என
உரைக்கும் படி அழகா சொல்லியிருகீங்க
புலவர் ஐயா,
இயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ReplyDeleteஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே//
முற்றிலும் உண்மையான அற்புத வரிகளையுடைய கவிதை... கலக்குது ஐயா
///இயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ReplyDeleteஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே////
நித்திய, சத்தியமான வரிகள்...
இயற்கையினோடு இயைந்த வாழ்வே
இன்னல்கள் தீர்க்கும் அந்த இருப்போடு
நம்மை கொண்டு கலக்கும்...
நன்றிகள் ஐயா!
இயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ReplyDeleteஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே/
உண்மைதான் ஐயா...
இயற்கையுடன் ஒத்து போகணும் என்கிறீங்க...
அருமையான கவிதை புலவரே
இயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ReplyDeleteஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே
.... well said!
செயற்கை மிகமிக செழிப்பினை அழிக்கும்-என
ReplyDeleteசெப்பியும் கேளார் சந்ததி பழிக்கும்
இயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-// அருமையான வரிகள் அய்யா..
சில நாட்கள் வலை பக்கமாக வர இயலவில்லை ...நலமா ஐயா ...
ReplyDeleteஇயற்கையை நேசிக்கும் வார்த்தைகளுக்கு வணக்கங்கள் ......
ReplyDeleteஉண்மைதான் செயற்கை இயற்கையை அழித்துதான் விடுகிறது ஐயா .
ReplyDeleteஆனால் என்ன செய்ய செயற்கை ஆளுமை அதிகரித்தே வருகிறதே
இயற்கையை ஒன்றிப்போனால் எல்லாம் சுபமே !
ReplyDelete//இயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ReplyDeleteஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே//
அழகாகச் சொன்னீர்கள்!
நம் மண்ணின் வளத்தையும் அது தரும் அளவறியா செல்வங்களையும் இயற்கையை அழிக்கும் முயற்சியில் ஈடுபடும் இன்றைய சிரார்களுக்கு அன்பாய் எடுத்துரைக்கும் மிக அருமையான வரிகளாக கவிதை வரைந்த விதம் மிக மிக சிறப்பு ஐயா....
ReplyDeleteஇயற்கையை அழிக்காதீங்க செயற்கைக்கு மயங்காதீங்க..
செயற்கை செய்யும் நல்லவை ஒன்றுமே இல்லை அழிவைத்தவிர என்று ஆணித்தரமாய் சொன்ன கவிதை மிக சிறப்பு ஐயா...
அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு நன்றிகள் ஐயா....
(செயற்கை என்றும் சிகப்பு....)அற்புத வரிகள் புலவரே
ReplyDeleteகாலங்கள் சுழன்றுகொண்டு... நாம் இயற்கையின் பாத சுவடுகளை அழித்துகொண்டு...
ReplyDeleteஅருமையான வரிகள் ஐயா...
செப்பியும் கேளார் சந்ததி பழிக்கும்
ReplyDeleteஇயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே//
வரும் பகைதடுக்க வல்ல சத்திய வரிகள் அருமை ஐயா ....
பகிர்வுக்கு மிக்க நன்றி ....
தமிழ் மணம் ஒட்டுப் போட்டாச்சு ...........
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteஇயற்கை தரும் வாழ்விற்கு நாம் இசைந்து வாழ வேண்டும் எனும் உணர்வினை உங்களின் கவிதை தந்துள்ளது.
அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
ReplyDeleteநல்வணக்கம்!
திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
வலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோம்!
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr