விண்மீது வலுவாக கருத்தமேகம்-அட
வீசுகின்ற காற்றோ புயலின்வேகம்
மண்ணீரம் அணுவளவு காயவில்லை-ஆனால்
மழைமட்டும் பொழிகிறது ஓயவில்லை
தண்ணீரும் வெள்ளமென பெருகியோட-அது
தரைப்பாலம் தெரியாமல் நன்குமூட
கண்பாலம் எங்ககேயென அறியவேண்டி-சில
கம்பங்களை நட்டாரோ குழியும்தோண்டி
கரைதாண்டி செல்கின்ற வெள்ளமூரே-எங்கும்
காணாமல் அழித்திடும் தடுப்பார்யாரே
முறைதாண்டி இதுபோல ஈழப்போரே-நடத்தி
முடித்ததை உலகத்தில் தடுத்தார்யாரே
இறைவாநீ எங்கேயோ இருக்கின்றாயா-சிங்கள
ஈனரின் செயல்தன்னை பொறுக்கின்றயா
மறையாது உடனிங்கே வந்திடுவாய்-ஈழம்
மலர்ந்திட வழிவகை தந்திடுவாய்
தண்ணீரில் வாழ்கின்ற மீனைப்போன்றே-நம்
தரைவாழும் மீனவன் கடலில்சென்றே
கண்ணீரில் மிதக்கின்றான் நாளுமின்றே-அவன்
கண்ணீரைத் துடைக்கின்ற நாளுமென்றே
அடித்தவன் வீட்டிற்கே மீண்டுமீண்டும்-பேச
அடிமையா நாமங்கே செல்லவேண்டும்
கொடுப்பதை விடுத்தாலே போதுமவன்-கை
கும்பிட அவனிங்கே ஓடிவர செய்வீரா---?
புலவர் சா இராமாநுசம்
''...தரைப்பாலம் தெரியாமல் நன்குமூட
ReplyDeleteகண்பாலம் எங்ககேயென அறியவேண்டி-சில
கம்பங்களை நட்டாரோ குழியும்தோண்டி...''
இது போல அறிவினால பல தடிகள் நட்டு நாமும இந்த வாழ்வில் வெளிச்சம் கண்டு முன்னேற வேண்மல்லவா?...மிக்க நன்று ஐயா! தொடர் பணி முன்னேறட்டும். எனது புது ஆக்கம் இடும் போது புத்தம் புதிதாக உங்கள் ஆக்கம் தமிழ் வெளியினூடாகக் கண்டு வந்தேன்.
வேதா. இலங்காதிலகம்.
ஐயா உங்கள் கவிதைகளில் குறிப்பிட ஒருவரியை நான் சொல்ல விரும்பவில்லை ஏனெனில் எல்லாமே அழகு...வந்தேன் படித்தேன்...
ReplyDeleteமறையாது உடனிங்கே வந்திடுவாய்-ஈழம்
ReplyDeleteமலர்ந்திட வழிவகை தந்திடுவாய்
..... எல்லோருடைய பிரார்த்தனையும் அதுதான்.
இறைவாநீ எங்கேயோ இருக்கின்றாயா-சிங்கள
ReplyDeleteஈனரின் செயல்தன்னை பொறுக்கின்றயா
மறையாது உடனிங்கே வந்திடுவாய்-ஈழம்
மலர்ந்திட வழிவகை தந்திடுவாய்/
!!!அவையெல்லாம் கூவி அழைத்தாலும் வரமாட்டினம்...
அவர்கள் எங்கோ எம்மைவிட்டு தொலைந்து போனார்கள் ஐயா../
மழைவெள்ளத்துடன் ஒப்பிட்டு..
அருமையான ஆதங்கம் நிறைந்த கவிதை..
///தண்ணீரில் வாழ்கின்ற மீனைப்போன்றே-நம்
ReplyDeleteதரைவாழும் மீனவன் கடலில்சென்றே
கண்ணீரில் மிதக்கின்றான் நாளுமின்றே-அவன்
கண்ணீரைத் துடைக்கின்ற நாளுமென்றே
அடித்தவன் வீட்டிற்கே மீண்டுமீண்டும்-பேச
அடிமையா நாமங்கே செல்லவேண்டும்
கொடுப்பதை விடுத்தாலே போதுமவன்-கை
கும்பிட அவனிங்கே ஓடிவர செய்வீரா---?///
மனத்தைக் பிசையும் வார்த்தைகள்...
அருமையான கவிதை புலவர் ஐயா
கண்ணீரில் மிதக்கின்றான் நாளுமின்றே-அவன்
ReplyDeleteகண்ணீரைத் துடைக்கின்ற நாளுமென்றே//
ஏங்கி உருகும் வரிகள்.
மனதை பிழியும் வரிகள்..
ReplyDeleteஅருமை.
//கண்ணீரில் மிதக்கின்றான் நாளுமின்றே//
ReplyDeleteகண்ணீர் வரவழைக்கிறீர்கள்!
கல்லும் கண்ணீர் வடிக்கும்!
ReplyDeleteகாந்தியையே குத்தகைக்கு எடுத்ததாய்
ReplyDeleteகாட்டிக் கொள்ளும் கயவர்களே
சாந்தி தரும் அவர் கொள்கை அறிவீரோ?
ஓருயிரை இழந்ததால் ஒருகோடி உயிரது போதுமா?
ஓயாது ரத்தம் குடிக்கவேண்டும் என்பது தான் திட்டமா?
ஆதிகாலம் தொட்டே உலகாண்டத் தமிழினம் இப்போது
நாதி அத்துப் போனதே இந்த இனம்...
ஐயகோ! மனித நேயமே இல்லையா?
மனித இனத்தில் பிறந்ததே ஞாபகம் இல்லையா?
சத்திய சோதனை இருந்தும்
விடியலுக்கு இல்லை தூரம்.
மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது கவிதை ,பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநேயர் விருப்பம்...மழைக்கவிதை கேட்டேன்...கொடுத்து விட்டீர்கள்...பாரி வள்ளலே...
ReplyDeleteதண்ணீரில் வாழ்கின்ற மீனைப்போன்றே-நம்
ReplyDeleteதரைவாழும் மீனவன் கடலில்சென்றே
கண்ணீரில் மிதக்கின்றான் நாளுமின்றே-அவன்
கண்ணீரைத் துடைக்கின்ற நாளுமென்றே
அடித்தவன் வீட்டிற்கே மீண்டுமீண்டும்-பேச
அடிமையா நாமங்கே செல்லவேண்டும்
கொடுப்பதை விடுத்தாலே போதுமவன்-கை
கும்பிட அவனிங்கே ஓடிவர செய்வீரா---?
வலிதரும் கவிதைவரிகள் அருமை ஐயா....
//கண்ணீரில் மிதக்கின்றான் நாளுமின்றே-அவன்
ReplyDeleteகண்ணீரைத் துடைக்கின்ற நாளுமென்றே//
அருமையான வரிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அடித்தவன் வீட்டிற்கே மீண்டுமீண்டும்-பேச
ReplyDeleteஅடிமையா நாமங்கே செல்லவேண்டும்
கொடுப்பதை விடுத்தாலே போதுமவன்-கை
கும்பிட அவனிங்கே ஓடிவர செய்வீரா---?//
எளிமையான சொற்கள்தான்
ஆயினும் அவைகள் எம்முள்
ஏற்படுத்திப்போகும் தாக்கம்
மிக மிக அதிகம்
கண்ணீரில் மிதக்கின்றான் நாளுமின்றே-அவன்
ReplyDeleteகண்ணீரைத் துடைக்கின்ற நாளுமென்ற//
பாராமுகமாய் அரசியல்வாதிகள் இருப்பதனால் தினமும் அப்பாவி மீனவர்களின் உயிர்கள் பறி போகின்றது என்பதனை ஆதங்கத்தோடு எழுதியிருக்கின்றீஙக.
வணக்கமையா கவிதை அருமையா எங்கள் மனவலியைச் சொல்லிச் செல்கிறது.. மீனவன் வாழ்கையில் என்றுதான் விடியல் வருமோ..!!??
ReplyDeleteவரிகளில் இருக்கும் வலிகளை படிப்போர் உணரும்படி செய்திருக்கிறீர்கள் ஐயா...
ReplyDeleteமழை எல்லோருக்குமே சந்தோஷம் தரும் என்று யார் சொன்னது?
பருவம் தவறி பெய்யும் மழையால் என்னென்ன விளைவுகள் வரும் என்று சொல்லிச்சென்றது அருமை...
ஈழத்தின் கொடுமைகளை சட்டென்று நினைவுக்கு கொண்டு வரவைத்தது... ஈவிரக்கமில்லாத செயல்கள் நடந்தும் இதோ நாம் இன்னும் நம்பிக்கையை விடவில்லை.....கண்டிப்பாக ஈழம் மலரும் என்று நம்பிக்கை இருக்கிறது....
மழையினால் மீனவர்களுக்கு எத்தனை அவஸ்தை என்பதும் அறிய முடிகிறது வரிகளில்....
உயிரோடு திரும்பி வந்தால் உலை கொதிக்கும் வீட்டில் உள்ளோர் பசி தீரும்...
அருமையான நிதர்சன கவிதைக்கு அன்பு வாழ்த்துகள் ஐயா...
வரிகளில் வலிகள் இருக்கிறது... இதற்கு வழிகள் பிறக்காதா ஐயா...
ReplyDelete