இன்று வந்ததே ஒருசெய்தி-நம்
இதயம் துளைக்கும் அச்செய்தி
கொன்றது ஈழத்தில் போதாதா-மாதர்
கொங்கையை அறுக்கும் தீதேதான்
என்று தீரும் இக் கொடுமை-தமிழன்
இருப்பதோ வடவர் கொத்தடிமை
ஒன்றும் செய்ய இயலாதே-பாழும்
உலகமும் ஏதும் முயலாதே
அவிழ்த்த நெல்லி மூட்டையென-ஈழர்
அவனியில் எங்கும் சிதறிவிட
கவிழ்த்த தலையும் கண்ணீரும்-ஈழம்
காண்பதா தினமும் செந்நீரும்
தவித்த வாயிக்கி தண்ணீரே-சிங்களர்
தரவே மறுத்து உண்ணீரேல்
புழுத்துப் போகும் உம்நாக்கே-இந்த
புலவனின் சத்திய மாம்வாக்கே
இதயம் துளைக்கும் அச்செய்தி
கொன்றது ஈழத்தில் போதாதா-மாதர்
கொங்கையை அறுக்கும் தீதேதான்
என்று தீரும் இக் கொடுமை-தமிழன்
இருப்பதோ வடவர் கொத்தடிமை
ஒன்றும் செய்ய இயலாதே-பாழும்
உலகமும் ஏதும் முயலாதே
அவிழ்த்த நெல்லி மூட்டையென-ஈழர்
அவனியில் எங்கும் சிதறிவிட
கவிழ்த்த தலையும் கண்ணீரும்-ஈழம்
காண்பதா தினமும் செந்நீரும்
தவித்த வாயிக்கி தண்ணீரே-சிங்களர்
தரவே மறுத்து உண்ணீரேல்
புழுத்துப் போகும் உம்நாக்கே-இந்த
புலவனின் சத்திய மாம்வாக்கே
இந்தியா என்பது நாடல்ல-நன்கு
எண்ணி ஆய்வது கேடல்ல
இந்தியா என்பது துணைக்கண்டம்-அன்று
எழுதினார் உண்மை எனக்கண்டோம்
இந்தியா என்பது ஒருநாடே-என
எண்ணிய விளைவா இக்கேடே
இந்தியா என்பதோர் நாடென்றால்-உடன்
ஈழத் தமிழரைக் காப்பீரே
எண்ணி ஆய்வது கேடல்ல
இந்தியா என்பது துணைக்கண்டம்-அன்று
எழுதினார் உண்மை எனக்கண்டோம்
இந்தியா என்பது ஒருநாடே-என
எண்ணிய விளைவா இக்கேடே
இந்தியா என்பதோர் நாடென்றால்-உடன்
ஈழத் தமிழரைக் காப்பீரே
போனது போகட்டும் இனியேனும்-இந்தியா
போக்கினை மாற்றி கனிவேனும்
தானது தரட்டும் அவர்வாழ-உற்ற
தருணம் இதுவென உளம்சூழ
ஆனது அனைத்தும் செய்வீரா-அவர்
அவலம் நீக்கி உய்வீரா
வீணது என்றே எண்ணாதீர்-மேலும்
வேதனை எதுவும் பண்ணாதீர்
போக்கினை மாற்றி கனிவேனும்
தானது தரட்டும் அவர்வாழ-உற்ற
தருணம் இதுவென உளம்சூழ
ஆனது அனைத்தும் செய்வீரா-அவர்
அவலம் நீக்கி உய்வீரா
வீணது என்றே எண்ணாதீர்-மேலும்
வேதனை எதுவும் பண்ணாதீர்
புலவர் சா இராமாநுசம்
அவிழ்த்த நெல்லி மூட்டையென-ஈழர்
ReplyDeleteஅவனியில் எங்கும் சிதறிவிட
கவிழ்த்த தலையும் கண்ணீரும்-ஈழம்
காண்பதா தினமும் செந்நீரும்
தவித்த வாயிக்கி தண்ணீரே-சிங்களர்
தரவே மறுத்து உண்ணீரேல்
புழுத்துப் போகும் உம்நாக்கே-இந்த
புலவனின் சத்திய மாம்வாக்கே//
ஒட்டு மொத்த தமிழர்களின்
உணர்ச்சி வெளிப்பாடு!
வெடிக்குது தங்கள் கவிதையில் !
அவிழ்த்த நெல்லி மூட்டையென-ஈழர்
ReplyDeleteஅவனியில் எங்கும் சிதறிவிட
கவிழ்த்த தலையும் கண்ணீரும்-ஈழம்
காண்பதா தினமும் செந்நீரும்
வாசிக்கும் போது கவலை தான் வருகுறது........
ஒருநாள் ஒன்றுபடுவோம் எனும் நம்பிக்கையில் நமது வாழ்வு....
நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)
குணம் மற்று இந்தியா!!
ReplyDeleteதினம் தினம் வேகும்
கண்ணிய மாண்போர்
பிணமாக போகுமுன்
குணம் மாற்று!!
அருமையான மரபுக்கவிதை புலவரே
வீணது என்றே எண்ணாதீர்-மேலும்
ReplyDeleteவேதனை எதுவும் பண்ணாதீர்
வேதனையாக இருக்கிறது.
போனது போகட்டும் இனியேனும்-இந்தியா
ReplyDeleteபோக்கினை மாற்றி கனிவேனும்
தானது தரட்டும் அவர்வாழ-உற்ற
தருணம் இதுவென உளம்சூழ
ஆனது அனைத்தும் செய்வீரா-அவர்
அவலம் நீக்கி உய்வீரா
வீணது என்றே எண்ணாதீர்-மேலும்
வேதனை எதுவும் பண்ணாதீர்
எங்கள் வேதனைகளை உங்கள் வேதனைகளாகக் கருதி இத்தை வலிகொண்டு வடித்த அழகிய மரபுக் கவிதைகண்டு வியக்கின்றேன் தந்தையே .உங்கள் வேண்டுதல் நிட்சம் ஓர் நாள் நிறைவேறும் .கவலை வேண்டாம் .சற்று இன்று உங்களை சிரிக்க வைக்கப் போகின்றேன் வாருங்கள் என் தளத்திற்கு.உங்கள் வருகைக்காக காத்திருப்பேன் .நன்றி ஐயா பகிர்வுக்கு
//இந்தியா என்பது ஒருநாடே-என
ReplyDeleteஎண்ணிய விளைவா இக்கேடே
இந்தியா என்பதோர் நாடென்றால்-உடன்
ஈழத் தமிழரைக் காப்பீரே//
இது யார் காதிலும் விழாதோ ..
நன்றி ஐயா
/கவிழ்த்த தலையும் கண்ணீரும்-ஈழம்
ReplyDeleteகாண்பதா தினமும் செந்நீரும்
தவித்த வாயிக்கி தண்ணீரே-சிங்களர்
தரவே மறுத்து உண்ணீரேல்/
இதுதான் தமிழர் தலைவிதியா?
மனம் கொதிக்கிறது,,
கவிதையில் வலிகள் கூடி..
அற்புதமாக தமிழர் நிலையை படமாக காட்டுகிறது கவிதை..
கொன்றது ஈழத்தில் போதாதா-மாதர்
ReplyDeleteகொங்கையை அறுக்கும் தீதேதான்
என்று தீரும் இக் கொடுமை-//
கெட்டவர்கள் வாழும் வரை... நல்லவர்களுக்கு கேடே..
//தவித்த வாயிக்கி தண்ணீரே-சிங்களர்
தரவே மறுத்து உண்ணீரேல்
புழுத்துப் போகும் உம்நாக்கே-இந்த
புலவனின் சத்திய மாம்வாக்கே//
கொடுமை செய்த அந்த நாதிரிகளேல்லாம் புழுத்து தான் போவார்கள் உங்கள் சத்திய வாக்கு பழிக்கட்டும் ஐயா
மனதுக்கு வேதனை அளிக்கக்கூடிய கவிதை வேதனை படும் இவர்கள் விரைவில் மீண்டு வருவர் என ஆண்டவனை பிரார்த்திப்போம்.தங்களின் சாபம் பலிக்கட்டும்.
ReplyDelete//போனது போகட்டும் இனியேனும்-இந்தியா
ReplyDeleteபோக்கினை மாற்றி கனிவேனும்
தானது தரட்டும் அவர்வாழ-உற்ற
தருணம் இதுவென உளம்சூழ
ஆனது அனைத்தும் செய்வீரா-அவர்
அவலம் நீக்கி உய்வீரா
வீணது என்றே எண்ணாதீர்-மேலும்
வேதனை எதுவும் பண்ணாதீர்//
நல்லதோர் எதிர்பார்ப்பு.
கவிதைக்குப் பாராட்டுக்கள்.vgk
கவலை கண்ணீர் இறக்கம் கோபம் வலி வேதனை கலந்த கவிதை
ReplyDeleteவாசிக்க வலிக்கிறது இதயம்
வேதனை..அருமையான மரபுக்கவிதை புலவரே..
ReplyDeleteஉங்கள் சத்திய வாக்கு நிச்சயம் பலிக்கும்.
ReplyDeleteகவிதைக்கனல்!
உணர்சிகளை தட்டி விடும் கவிதை,
ReplyDeleteஉங்கள் ஆசையே எங்கள் ஆசையும்
நிறைவேறுமா???
நெஞ்சு பொறுக்குதில்லையே..
ReplyDeleteதமிழன் என்றால்...எப்போதும் துன்பம் தொடரும் என்பதற்கு இப்போதைய செய்திகளும் சாட்சிகளாய்.
ReplyDeleteசில விஷயங்கள் ஓயாது வெளிப்படுத்தப்பட வேண்டும்,
ReplyDeleteஏன் என்றால் மறதி நமக்கு வாய்த்த வரமா, சாபமா தெரியவில்லை. விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டி இருக்கிறது. மறதி போற்றுவோம் என்ற என் பதிவு மூலம், அன்றே என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். படித்துப் பாருங்களேன்.