கோடைக் காலம் வந்து துவே
கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே
ஆடை முழுதும் நனைந் திடவே
ஆனதே குளித்த தாய் ஆகிடவே
ஓடை போல நிலமெல் லாம்
உருவம் காண வெடித் தனவே
வீ(ட்)டை விட்டே வெளி வரவே
விரும்பா நிலையை அனல் தரவே
பச்சைப் பயிரும் பொசுங்கி டவே
பசுமை முற்றும் நீங்கி டவே
உச்சியில் வெய்யில் வந்த தெனில்
உடம்பைத் தீயென தொட்ட தனல்
மூச்சை இழுத் தால் அக்காற்றும்
மூக்கை சுடவே அனல் மாற்றும்
சேச்சே என்ன வெயி லென
செப்பிட வார்தை செவி விழுமே
பத்து மணிக்கே பகல் தன்னில்
பாதம் பட்டால் சுடும் மண்ணில்
எத்தனை வேகம் காட்டு கின்றார்
எங்கே நிழலெனத் தேடு கின்றார்
இத்தனை நாள் போல் வீட்டோடு
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு
பித்தனைப் போலவர் தமக் குள்ளே
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே
வற்றிய நீர்நிலை இல் லாமே
வளர்ந்த புல்பூண் டெல் லாமே
பற்றி எரிய முற்ற றாக
பறந்திடக் காற்றில பஞ் சாக
வெற்றிடம் தன்னில் கால் நடைகள்
வெறுமையாய் வாயை மென்றி டவே
சுற்றி சுற்றி மேய்ந் தாலும்
சுருண்டது அந்தோ பசி யாலே
புலவர் சா இராமாநுசம்
கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே
ஆடை முழுதும் நனைந் திடவே
ஆனதே குளித்த தாய் ஆகிடவே
ஓடை போல நிலமெல் லாம்
உருவம் காண வெடித் தனவே
வீ(ட்)டை விட்டே வெளி வரவே
விரும்பா நிலையை அனல் தரவே
பச்சைப் பயிரும் பொசுங்கி டவே
பசுமை முற்றும் நீங்கி டவே
உச்சியில் வெய்யில் வந்த தெனில்
உடம்பைத் தீயென தொட்ட தனல்
மூச்சை இழுத் தால் அக்காற்றும்
மூக்கை சுடவே அனல் மாற்றும்
சேச்சே என்ன வெயி லென
செப்பிட வார்தை செவி விழுமே
பத்து மணிக்கே பகல் தன்னில்
பாதம் பட்டால் சுடும் மண்ணில்
எத்தனை வேகம் காட்டு கின்றார்
எங்கே நிழலெனத் தேடு கின்றார்
இத்தனை நாள் போல் வீட்டோடு
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு
பித்தனைப் போலவர் தமக் குள்ளே
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே
வற்றிய நீர்நிலை இல் லாமே
வளர்ந்த புல்பூண் டெல் லாமே
பற்றி எரிய முற்ற றாக
பறந்திடக் காற்றில பஞ் சாக
வெற்றிடம் தன்னில் கால் நடைகள்
வெறுமையாய் வாயை மென்றி டவே
சுற்றி சுற்றி மேய்ந் தாலும்
சுருண்டது அந்தோ பசி யாலே
புலவர் சா இராமாநுசம்
This comment has been removed by the author.
ReplyDeleteகோடை கவிதை அருமை...விரைவில் மழைக் கவிதை தானே..கோடை மழையாய் இருந்தாலும் பரவாயில்லை புலவரே...
ReplyDeleteஇன்ட்லி யில் உங்கள் பதிவு பகிரப்பட்டுள்ளதைக்கண்டேன்...அதற்குரிய பட்டையை உங்கள் பக்கத்தில் இணைக்கலாமே...
வணக்கமையா உங்குதான் வெய்யிலை கண்டு பயப்படுகிறார்கள்.. இங்கு கொஞ்சம் வெய்யில் அடித்தால் போச்சு காட்டானைப்போல் கோமணத்துடன் நீர்நிலைகளை நோக்கி ஓடுகிறார்கள் அதுவும் இப்போது கோடைகால விடுமுறை சொல்லவும் வேண்டுமா..!!?
ReplyDeleteஅருமையான கவிதையை தந்ததற்கு நன்றி ஐயா... கோடை கவணம் வீட்டில் இருந்து நன்றாக ஓய்வெடுங்களைய்யா..,
காட்டான் குழ போட்டான்..
கவிதை நன்றாகவுள்ளது புலவரே.
ReplyDeleteஇயற்கையைப் போற்றுவோம்!
இயற்கையைப் போற்றுவோம்!
வெயிலின் அருமை மழையில் தெரியும்!
ReplyDeleteமழையின் அருமை வெயிலில் தெரியும்!
ஆடை களட்டும் கோடை பற்றி அழகு கவிதை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete/சேச்சே என்ன வெயி லென
ReplyDeleteசெப்பிட வார்தை செவி விழுமே /
கோடைகாலத்தை அருமையாய் கவிதையில் தந்தீர்கள்..
நல்ல கவிதை ஐயா...
எனது பகுதியில் இந்தமுறை கடும் கோடை இல்லை சந்தோஷம்...
ReplyDeleteகோடைக்கவிதை கலக்கல் ஐயா!
ReplyDeleteகவிதையே சுடுகிறதே!
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா.
கோடையில் ஆக்னி நட்சத்திரமாய் ஒரு கவிதை ...
ReplyDeleteநன்றி ஐயா
மழைக் காலத்தில் கோடையை நினைவு படுத்தரிங்களே....
ReplyDeleteபச்சைப் பயிரும் பொசுங்கி டவே
ReplyDeleteபசுமை முற்றும் நீங்கி டவே //
வாட்டும் கோடை.
கோடைக்கு குடைபிடித்தது போல
ReplyDeleteஇருந்தது உங்கள் கவிதையை படித்தபோது
அருமை புலவரே.
உங்கள் கவிதைச்சந்தத்தில் கோடையிலும் குளிர்சியே!
ReplyDeleteமழைகாலம் ஆரம்ப நிலையில் கோடையை நினைவு கூற ஒரு கவிதை .
ReplyDeleteஅருமை .
கொளுத்தும் கோடைக்கே
ReplyDeleteபருத்தியில் ஆடை உடுத்தியது
போன்ற நல்லதொரு கவிதை.
பாராட்டுக்கள். vgk
நல்லா திட்டுங்கய்யா..இங்கயும் அனல் பறக்குது!
ReplyDeleteஅளவுக்கதிகமான வெப்பத்தினை மனித உடலால் தாங்க முடியாது எனும் உணர்வின் வெளிப்பாடாய் உங்கள் கவிதை இங்கே வந்திருக்கிறது.
ReplyDeleteகோடை பற்றிய கவிதை படிக்கும்போதே அந்த நாட்
ReplyDeleteகளை உணர முடிந்ததுஐயா. நன்றி.
நிதர்சன வரிகள் வேதனையுடன் வரைந்த கவிதை அருமை ஐயா....
ReplyDeleteகோடைக்காலம் என்றாலே பறவைகளும் இடம் மாறுகிறது மிருகங்களும் தன் வசிப்பிடத்தை மாற்றிக்கொள்கிறது... மனிதரும் கொஞ்சம் தன்னை ஆசுவசப்படுத்திக்கொள்ள ஊட்டி கொடைக்கானல் என்று நிழல் குளுமை தேடி படையெடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர்..
இப்படி ஒரு கோடையில் பசியில் பச்சை பசேலென தேடினாலும் கட்டாந்தரையாக பூமி வெடித்து விரக்தியாக காட்சி அளிக்கிறதை உங்கள் வரிகளை படிக்கும்போதே மனக்கண்முன் தோன்றுகிறது காட்சி...
இங்கே குவைத்தில் உஷ்ணத்தின் டிகிரி சொன்னால் மயக்கமடைய கூடாது... 54 டிகிரி .... ராத்திரியும் அனல்காற்று நெருப்பில் நடப்பது போலிருக்கும்... நடந்துவரும்போதே பயம் மனதில் கவ்வும் ரோட்டில் அனாதரவாய் மயக்கம் போட்டு விழுந்துவிடுவோமோ என்று.... ஸ்வாமி ஸ்லோகம் சொல்லிக்கொண்டே வேகமாக எட்டி நடைப்போட்டு வீட்டில் ஓடி வந்து முடங்கிக்கொள்வோம்...
அருமையான வரிகள் ஐயா கோடைவெயிலை அற்புதமாய் சொன்ன கவிதை படைத்தமைக்கு அன்பு நன்றிகள் ஐயா....
''...மூக்கை சுடவே அனல் மாற்றும்
ReplyDeleteசேச்சே என்ன வெயி லென
செப்பிட வார்தை செவி விழுமே..''
நாங்களும் வெயில் வர ஏசுவோம் அனல் என்று . பின்பு ஏங்குவோம்...இக்கரைக்கு அக்கரை பச்சை...கவிதை அருமை.
வேதா. இலங்காதிலகம்.
கோடை வெய்யிலை படிப்பவர் அனைவரையும்
ReplyDeleteஉணர வைக்கும் அழகிய படைப்பு
வெம்மையில் இருந்து மனம் வெளியேற
வஸந்தத்தைப் பாடினால் நன்றாக இருக்குமே
என்கிற எண்ணம் வருவதை தவிர்க்க இயலவில்லை
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இங்கே குவைத்தில் நாங்கள் அனுபவிக்கும் வெப்பத்தின் கொடுமையை கண் முன்னே நிருத்தியிருக்கிறது உங்கள் கவிதை வரிகள்!
ReplyDeleteபதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!