போதுமடா சாமி-நாங்க
பொழைக்க வழி காமி
தீது மலிந்து போச்சே-இந்து
தேச மெங்கும ஆச்சே
சாதி சண்டை ஓங்க-நல்
சமத் துவமே நீங்க
பீதி போக நாங்க-நாளும்
பிழைக்க வழி தாங்க
ஊற்று போல ஊழல்-இங்கே
ஊறி வரும் சூழல்
மாற்ற வேண்டும் சாமி-உடன்
மாற்ற வாரும் பூமி
போற்று வோமே வந்தே-நீர்
பதுமை பலவும் தந்தே
ஆற்றும் உங்கள் பணியே-மேலும்
அழிக்க வேண்டும பிணியே
புலவர் சா இராமாநுசம்
பொழைக்க வழி காமி
தீது மலிந்து போச்சே-இந்து
தேச மெங்கும ஆச்சே
சாதி சண்டை ஓங்க-நல்
சமத் துவமே நீங்க
பீதி போக நாங்க-நாளும்
பிழைக்க வழி தாங்க
ஊற்று போல ஊழல்-இங்கே
ஊறி வரும் சூழல்
மாற்ற வேண்டும் சாமி-உடன்
மாற்ற வாரும் பூமி
போற்று வோமே வந்தே-நீர்
பதுமை பலவும் தந்தே
ஆற்றும் உங்கள் பணியே-மேலும்
அழிக்க வேண்டும பிணியே
புலவர் சா இராமாநுசம்
ஊற்று போல ஊழல்-இங்கே
ReplyDeleteஊறி வரும் சூழல்
மாற்ற வேண்டும் சாமி!
சக்தி இருந்தா மாத்திக்காட்டு சாமி!!
ஊற்று போல ஊழல்-இங்கே
ReplyDeleteஊறி வரும் சூழல்
மாற்ற வேண்டும் சாமி-//
எந்த சாமியாவது கண்திறந்தா பரவாயில்லை!
வரிகள் அற்புதம் ஐயா..........
ReplyDeleteசிறப்பான பாடல் வரிகள் ஐயா....
ReplyDeleteஅதெப்படி ஊழல் மலிந்து கிடக்கிறதே என்று ஒதுங்கி போகாமல் ஊழலை ஒழித்து தீர்க்க எவரேனும் வருவாரோன்னு ஏக்கமா வரிகள் அமைக்க முடியுது? இறைவன் அருள் கூர்ந்தாலும் இங்க மனிதர்கள் முற்படவேண்டுமே....
இறைவனே அவதாரம் எடுத்து வந்தாலொழிய ஊழலை மொத்தமா அழிக்க முடியாதுன்னு நச்னு சொல்லிட்டீங்க ஐயா...
அன்பு வாழ்த்துகள் ஐயா சிறப்பான வரிகளுக்கு....
சமூக சிந்தனை வரிகள்
ReplyDeleteவந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!
ஊற்று போல ஊழல்-இங்கே
ReplyDeleteஊறி வரும் சூழல்
மாற்ற வேண்டும் சாமி-
..... ஊழல் ஒழிய வேண்டும். இதுதான் எல்லோருடைய ஆசையும் கனவும்.
''..ஊறி வரும் சூழல்
ReplyDeleteமாற்ற வேண்டும் சாமி-உடன்
மாற்ற வாரும் பூமி...''
நல்ல வரிகள் ...
வேதா. இலங்காதிலகம்.
உங்க சாமி உங்க வேண்டுதலுக்கெல்லாம் செவி மடுப்பார்...புலவரே...
ReplyDeleteஊழல் என்ற பிணியை அழிக்க வேண்டுமென்பதை கவிதையில் கலக்கிவிட்டீர்களைய்யா...வாழ்த்துக்களைய்யா
ReplyDeleteஅடியேனின் வணக்கம் ஐயா,
ReplyDeleteஊழல் ஒழிய வேண்டும் என்று அனைவரையும் நினைக்க வைத்துவிட்டீர்கள் அய்யா...
சாமிதான் காப்பாத்தணும் ....நல்ல பாடல் ஐயா !
ReplyDeleteபோதுமடா சாமி-நாங்க
ReplyDeleteபொழைக்க வழி காமி
சாமியைப் பார்த்து நிறைய பேர் கேட்கும் கேள்வி
அருமை ஐய்யா
கவிதை வரியில் உணர்வுகளை கொட்டியிருக்கிறீர்கள்
பகிர்வுக்கு நன்றி .
தொடர்ந்து வருகிறேன்
ஐயா,ஒங்க விருப்பம் நிறைவேறணும்னா,ஒலகம் அழியணும்!கெட்டவங்க மட்டும் ஒழியணும்.(இறக்க வேண்டும்)புதுசா ஒரு தல முற வரணும்! நாளுக்கு நாள் பேப்பரத் தொறந்தா ஊழல்,கொல,கொள்ளன்னு தானே காலைப் பொழுது விடியுது?
ReplyDeleteபீதி போக நாங்க-நாளும்
ReplyDeleteபிழைக்க வழி தாங்க..
அருமை ஐயா..
நாட்டு அவலத்தை நச்சென்று பாடியுள்ளீர், ஆதங்கம் வெளிப்படுத்தும் அத்தனை வரிகளும் அருமை
ReplyDelete