Tuesday, August 9, 2011

முதலாளித்துவத்தின் சுறண்டல்

முதலாளி தத்துவமே சுறண்ட லென்றே-என
மொழிதலிலே வேறுபாடு ஏதும் இன்றே
அதனாலே பிறந்ததுவே மேதினமும் ஒன்றே
அகிலமே கொண்டாடும் திருநாளாம் நன்றே
இதனாலே அடங்கியது முதலாளி உலகம்
என்றாலும் அங்கங்கே நடக்கிறது கலகம்
எதனாலே என்றாலே நல்ஊதியமே கோரி
எழகிறது போராட்டம் தடைதன்னை மீறி

சங்கங்கள எல்லாமே ஒன்றாக கூட-பெரும்
சங்கடம் முதலாளி நெஞ்சிலே ஓட
உங்களை அழைப்பதாய் ஓடிவரும் செய்தி
உடன்சென்று பேசிட ஒப்பந்தம் யெயதி
இவ்வாறு நடக்கிறது நாட்டினிலே இன்றே
இனிமேலும் ஆகாது சுறண்டலாம் ஒன்றே
எவ்வாறு நடந்தாலும் முடிவாக வெற்றி
என்றுமே உழைப்பாளி காண்பாரே வெற்றி

புலவர் சா இராமாநுசம்

13 comments:

  1. எவ்வாறு நடந்தாலும் முடிவாக வெற்றி
    என்றுமே உழைப்பாளி காண்பாரே வெற்றி


    ..... உண்மை.

    ReplyDelete
  2. தொழிலாளிகளைச் சுறண்டி வாழும் முதலாளிகள் மீது, தொழிலாளிகளின் போராட்டம் உதயமாகும் போது ஏற்படுகின்ற நிலமையினை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க ஐயா.

    ReplyDelete
  3. அழகான வரிகள் ஐயா , தொழிலாளிகள் சுரண்டல் நடந்து கொண்டுதான் உள்ளது

    ReplyDelete
  4. எவ்வாறு நடந்தாலும் முடிவாக வெற்றி
    என்றுமே உழைப்பாளி காண்பாரே வெற்றி

    நிட்சயமாக உழைப்பாளிதான் வெல்வான்
    என்று ஆணித்தரமாய் உரைத்த கவிதைவரிகள்
    அருமை.நன்றி ஐயா பகிர்வுக்கு ..........

    ReplyDelete
  5. எவ்வாறு நடந்தாலும் முடிவாக வெற்றி
    என்றுமே உழைப்பாளி காண்பாரே வெற்றி //

    அவ்வாறே வெற்றி காண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அருமை ஐய்யா..

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  7. தொழிலாளிக்கு எப்போதுமே வெற்றி..
    அருமையாய் சொன்னீங்க ..
    முதாலாளித்துவ சுரண்டலைப்பற்றியும்
    அதற்காய் போராடும் தொழிலால வர்க்கத்தையும்...
    நல்ல கவிதை ஐயா..

    ReplyDelete
  8. எவ்வாறு நடந்தாலும் முடிவாக வெற்றி
    என்றுமே உழைப்பாளி காண்பாரே வெற்றி
    ...
    அழகான வரிகள் ஐயா...

    என் கோபமெல்லாம் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் சுரண்டி வாழும் இடைத்தரகர் மேல் தான்..

    ReplyDelete
  9. கடின உழைப்பு என்றும் வீண்போகாது.வெற்றியேதான் !

    ReplyDelete
  10. உழைப்புக்கு தான் கண்டிப்பாக இறுதியில் வெற்றி கிடைக்கும்.. ஏனெனில் தன் உணவுக்காக தான் உழைக்கிறான்... ஆனால் பணம் கொழிப்பவரோ தன் வேலை செய்யக்கூட இன்னொருத்தரை அண்டி இருப்பதால் உழைப்புக்கு தான் இறுதியில் வெற்றி....

    சிறப்பான வரிகள் ஐயா.... அன்பு வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. உழைப்பவர்க்கே என்றும் வெற்றி!
    அருமை ஐயா!

    ReplyDelete