மீள் பதிவு
சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம் அமைவாரே ஓய்வாக ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீரம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீ ரம்மா
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே
உண்ணுகின்ற உணவென்ன பார்துத்தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுதானே
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீரம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மாஅம்மா
மண்மூடிப் போனாலும் அந்தோஉன்னை-மனம்
மூட யியலாது வருந்தும் அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கேஎங்கே
புலவர் சா இராமாநுசம்
அன்னையை நினைந்துருகும் அருமையான வரிகள்.. ரொம்ப நல்லாருக்கு.
ReplyDeleteபட்டினத்தார் புலம்பல் இன்னும் கேட்கிறது.
ReplyDeleteகவிஞரே இன்று வேர்களைத்தேடி கவிதை ஊர்தி வந்திருக்கிறது.
ReplyDeletehttp://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_03.html
மண்மூடிப் போனாலும் அந்தோஉன்னை-மனம்
ReplyDeleteமூட யியலாது வருந்தும் அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கேஎங்கே
.... மனதை தொட்ட வரிகள். அருமையாக வந்துள்ளன.
அருமை வரிகள்
ReplyDeleteசீராட்டிப் பாராட்டி பால் ஊட்டுவது போல, அருமையான கவிதை அம்மாவைப்பற்றி. நன்றி.
ReplyDeleteஅன்னையை பற்றி கவிதை என்றாலே அருமை தானே ..அழக்காக இருக்கு ஐயா ..
ReplyDeleteபண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ //
ReplyDeleteஅன்னைக்குப் பகிர்ந்த கவியாடை அழகு.
அன்னையின் அன்பு என்னவென்றே அறியாமல் இருக்கும் எனக்கு அன்னையைப் பற்றிய வரிகள் மனதைக் கனக்கச் செய்யும்.ஓரிரு பதிவுகள் அதை பறை சாற்றும் முறையில் எழுதி உள்ளேன். பண்ணோடு பாவாக இங்கே-- அருமையான வரிகள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஇமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ReplyDeleteஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே
அருமையான கவிதை.
மனதை அசைக்கிறது.
மனப்பூர்வ வாழ்த்துக்கள் ஐயா.
ஐயா,
ReplyDeleteதமிழ் மணத்தில் பதிந்து கொள்ளுங்கள்.
நன்றி.
மரபு கதையா?
ReplyDeleteஅம்மாவின் தன்னலமற்ற அன்பு தன் உயிர் போனப்பின்னும் இறைவனடி சேர்ந்தப்பின்னும் தன் பிள்ளைகளின் நலனுக்காக மடிப்பிச்சை ஏந்தும் இரக்க மனமுள்ளவர் தான் தாய்...
ReplyDeleteஅந்த தாயின் மறைவு எதைக்கொண்டும் ஈடு செய்யமுடியாது... வரிகளில் தாயை பிரிந்த சோகமும் திரும்ப தன் தாய் வந்து சேர்வாளோ என்ற ஏக்கமும் பிரதிபலிக்கிறது ஐயா வரிக்கு வரி....
சிறப்பான வரிகள் படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துகள் ஐயா...
சொல்லாமல் பறந்து சென்ற அன்னையை நினைத்து...
ReplyDeleteஎனக்கும் இதே நிலை..வாசிக்கும் போதே கண்ணோரம் ஈரம்...
நன்றி புலவரே...எங்கே மறந்து விடுவேனோ என்று ஐயப்படும் அந்த நினைவுகளை
புதுப்பித்ததுக்கு...
அருமையான வரிகள் சேர்து அம்மாவை போலவே அழகாய் இருக்குதய்யா...
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்...
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே
ReplyDeleteஎமைதாங்கி பத்துமாதம் சுமந்தீரம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீ ரம்மா ..
ஐயா அற்புதமான கவிதை ..
தாயின் தியாகத்தை சொல்லவே முடியாது...
தாயின் பிரிவின் ஏக்கம் கவிதையில் சன்னங்களாக துளைக்கிறது...
அன்புடன் பகிர்வுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்
தாய்மைக்கு ஈடு இணையேது?நல்ல கவிதை ஐயா.
ReplyDeleteநல்ல கவிதை ஐயா...
ReplyDeleteகருவறை கூட ஒரு சுகமான சுமைதாங்கியே - கவிதை கலக்கல் ஐயா
ReplyDelete