மீண்டும் மீண்டும் வருகின்றான்-நம்
மீனவர் வலையை அறுக்கின்றான்
தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும்
துயரக் கண்ணீர் வடிக்கின்றார்
ஈண்டும் ஆட்சி மாறியதே-ஆனால்
எனினும் பழைய காட்சியதே
வேண்டும் துணிவு அதுவொன்றே-அவர்
வேதனை போக்கும் வழியின்றே
எத்தனை தரம்தான் போவார்கள்-சிங்ளர்
எடுபிடி யாக ஆவார்கள்
மொத்தமாய் போய்விடும் தன்மானம்-அங்கே
மேலும் போவது அவமானம்
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித
புத்தரே சொல்லினும் கேளாரே
எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே
எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்
ஆறினால் சோறு பழஞ்சோறே-ஆளும்
அம்மா அவர்கே கதிநீரே
கூறினால் மட்டும் போதாதே-அழுத்தம்
கொடுப்பீர் மத்திக்கு இப்போதே
மீறினால் வருமே போராட்டம்-என
மத்தியில் ஆள்வோர் உணரட்டும்
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
மக்களை அரசே திரட்டட்டும்
பிடித்த மீனையும் அள்ளுகின்றான்-படகை
பிணைத்து இழுத்துத் தள்ளுகின்றான்
அடித்தான் நேற்றும் தொடர்கதையா-இந்த
அவலம் மீனவன் தலைவிதியா
தடுக்க மத்திக்கு வக்கில்லை-ஆளும்
தமிழக அரசே உடன்ஒல்லை
எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய்
எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை
புலவர் சா இராமாநுசம்
கவிதை அருமை....
ReplyDeleteஅருமையான ஒரு வலிதரும் பாடல் வரிகள்
ReplyDeleteநன்றி ஐயா பகிர்வுக்கு .இன்று என் தளத்தில்
உறவுகளால் வஞ்சிக்கப்பட்ட ஒரு அவலையின்
சோககீதம் உள்ளது. உங்கள் கருத்தினையும் சொல்லிவிடுங்கள்
ஒவ்வொரு வரியும் வலியை உணர்த்தும் வரிகள்...
ReplyDeleteஐயா கவிதையை பாராட்டுகிறதா ,இல்லை வலிகளை பகிர்ந்துகொள்வதா என்று தெரியவில்லை..
ReplyDeleteஇந்த சம்பவங்கள் இப்போ தொடர்கதை ஆகி விட்டது..
////புத்தியில் அவருக்கு கோளாரே-புனித
புத்தரே சொல்லினும் கேளாரே/// நான் ரசித்த வரிகள் ...
ஐயா ஒரு பழமொழி சொல்வார்களே.துள்ளும் மாடு பொதி சுமக்குமென்று.அடங்காமல் துள்ளிக்கொண்டே இருக்கிறது இந்தச் சிங்களக் கும்பல்.பார்க்கலாம் எதுவரையென்று !
ReplyDeleteஅசத்தல் கவிதை ..
ReplyDeleteஅருமையான வரிகள்...
ReplyDeleteReverie
வணக்கம் ஐயா, மத்திய அரசின் மௌனத்தினைக் கலைக்கும் வண்ணம் அம்மா அழுத்தம் கொடுத்து, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்பதனைக் கோபக் கனல் நிறைந்த கவியாகப் பதிவு செய்திருக்கிறீங்க.
ReplyDeleteஇனிமேல் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் ஐயா.
அவசியமான கருவினை வேதனை கலந்த வரிகளாக்கிய புலமைக்கு மனமார்ந்த பாராட்டுகள் ஐயா
ReplyDeleteநிச்சயம் காலம் பதில் சொல்லும்
இதே கருவுக்கு எனது வரிகள் உங்கள் பார்வைக்கு
http://hafehaseem00.blogspot.com/2011/07/blog-post_18.html
மீறினால் வருமே போராட்டம்-என
ReplyDeleteமத்தியில் ஆள்வோர் உணரட்டும்
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
மக்களை அரசே திரட்டட்டும்
அடித்தான் நேற்றும் தொடர்கதையா-இந்த
அவலம் மீனவன் தலைவிதியா
///// //// ///
ஈனவர் சிங்களர் எங்கள் தமிழ்க்குல
மீனவர்க் கிழைக்கும் மிடிபலவாம் -மானமில்லா
இந்தியப் பேடியர(சு) யாண்டுமவர்க் குற்றுதவும்
சிந்தையிலாச் செம்மறியே போல்!
ஈனவர் சிங்களர் எங்கள் தமிழ்க்குல
ReplyDeleteமீனவர்க் காற்றும் மிடிபலவாம் -மானமில்லா
இந்தியப் பேடியர(சு) யாண்டுமவர்க் குற்றுதவும்
சிந்தையிலாச் செம்மறியே போல்!
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteநன்றி! நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
அம்பாளடியாள் said...
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஆகுலன் said...
ReplyDeleteநன்றி! தம்பீ நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கந்தசாமி. said...
ReplyDeleteஅன்பரே!
கருத்துரை வழங்கி பாராட்னினீர்!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteநன்றி!நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
id said...
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
௵ said...
ReplyDeleteநன்றி! நிரூபன் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நேசமுடன் ஹாசிம் said...
ReplyDeleteவருக!வருக!
நேசமுடன் ஹாசிம் அவர்களே
தங்களின் முதல் வருகைக்கு நன்றி1
மீண்டும் வருவீர்
அகரம் அமுதன் said...
ReplyDeleteஅன்பு நண்பரே!
வணக்கம் நான் நடைப் பயிற்சியில் இருந்தபோது தொலைபேசி வழியே
தொடர்பு கொண்டீர்கள்
வீடுவந்து சேர்வதற்குள் வலை வழி
வந்து கருத்துரை வழங்கி விட்டீர்கள் என் பால் தாங்கள் வைத்துள்ள என்றும் கடமைப் பட்டவன்
ஆவேன்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
//மீறினால் வருமே போராட்டம்-என
ReplyDeleteமத்தியில் ஆள்வோர் உணரட்டும்
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
மக்களை அரசே திரட்டட்டும்//
அருமை ஐயா
யாருக்கும் அக்கறை இல்லை அய்யா.
ReplyDeleteதொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது தாக்குதல்கள்.
பள்ளிக் குழந்தைகள் மீதே அக்கறை இல்லாத அரசு, பாவம் மீனவர்களையா காக்கப் போகிறது ?
நெஞ்சைத் தொட்டக் கவிதை அய்யா
மாய உலகம் said...
ReplyDeleteநன்றி!மாயா!
தம்பீ இதுவரை என கண்ணுக்கு
நீங்கள் மாயா உலகமே! என்று பறையா உலகமாக வருவீரகள்...?
புலவர் சா இராமாநுசம்
சிவகுமாரன் said...
ReplyDeleteமுற்றிலும் உண்மை! நானும் அறிவேன்.
ஆனால் சில நாடகங்கள் வெளிப்படுமே!