Thursday, July 21, 2011

இறுதிமூச்சு உள்ள வரை

இறுதிமூச்சு உள்ள வரை-நம்
இதயம் எண்ணம் எண்ணும்வரை
உறுதி நீயும் கொள்வாயா-தனி
ஈழம் தானென சொல்வாயா
குருதிசிந்த கணக் கற்றோர்-அங்கே
குழந்தை குட்டி தனைப்பெற்றோர்
இறுதிச் சடங்கும் ஆளின்றி -செய்ய
இறந்தோர் தம்மை மறப்பாயா

முள்ளி வய்கால் படுகொலையை-நம்
மூச்சும் பேச்சும் உள்ளவரை
சொல்லி ஒன்றாய் நம்மவரை-உடன்
சேரச் செய்தே அறப்போரை
ஒல்லும் வகையெலாம் சொய்வோமே-இந்த
உலகம் உணர உய்வோமே
தள்ளி நின்ற நம்மவரும்-தம்
தவறை உணரந்து வருவரே

அடங்கிப் போனோம் நாமன்றே-ஆளும்
ஆணவ ஆடச்சியை நாம்வென்றே
முடங்கிப் போக வைப்போமே-இறுதி
மூச்சையும் பணயம் வைப்போமே
ஒடுங்க மாட்டோம நாமென்றே-அவர்
உணர எதிர்த்து தினம்நின்றே
நடுங்கச் செய்வதே நம்வேலை-நம்
இறுதிமூச்சு உள்ள வரை

புலவர் சா இராமாநுசம்

11 comments:

  1. சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் புலவரே.

    இன்று தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்

    http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html

    நன்றி புலவரே.

    ReplyDelete
  2. உள்ளக் கனல் அணையாது காக்கும்
    தங்கள் கவிதை அருமையிலும் அருமை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நடுங்கச் செய்வதே நம்வேலை-நம்
    இறுதிமூச்சு உள்ள வரை//

    கண்டிப்பாக...

    ReplyDelete
  4. உணர்சி ஊடும் வரிகள் ஐயா.....
    எம் உடம்பில் ஓடும் சிங்குருதி இறக்கும் முன்னர் நாம் ஏதாவது செய்வோம்...

    மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

    ReplyDelete
  5. அடைந்தே தீரவேண்டிய
    நம் மண்ணை
    உயிராய் காக்கவேண்டிய
    நம் கண்ணை
    உயர் தமிழால்
    உயிர் தமிழால்
    உயிர்ப்பித்த
    உயர் பெருந்தகையே
    வணங்குகிறேன்.

    ReplyDelete
  6. ஐயா இப்படியான ஒரு கவிதைக்கு என்னால் குழ மட்டுமே போடமுடியும் மனசு வலிக்கிறது...

    ReplyDelete
  7. பாரதியைப் போன்ற மன உறுதி.உங்கள் எண்ணமெல்லாம் ஈடேற வேண்டும்.

    ReplyDelete
  8. நல்ல கவிதை...சிறந்த எண்ணம்...உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது..புலவரே..
    வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன்..

    ReplyDelete
  9. அருமையான கவிதை.... வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா

    தமிழ்வாசியில் இன்று:
    அட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - இரண்டாம் பாகம்!

    ReplyDelete
  10. ஐயா,
    தங்களின் கவிதைப்பக்கத்தை வலைச்சரம் வழி அறிந்தேன் இன்று. மகிழ்ச்சி.
    உணர்வூட்டும் கவிதைகளுக்கு நன்றி

    ReplyDelete