Monday, August 1, 2011

தரணியில் என்றும் நிலையாகும்

பிறப்பு வாழ்வில் ஒருமுறைதான்-மேலும்
இறப்பு வழவில் ஒருமுறைதான்
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா
வெறுப்பா மற்றவர நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைதாக்க

எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதிவ திகழ ஞாலத்தே
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை

மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும் ஓடிவர
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்க பண்ணிரேல்
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும் நிலையாகும்

30 comments:

  1. வாழ்வின் முடிவுரை இப்படி கவிதை போல இருந்தால்
    மண்ணில் மனிதருக்கு என்றும் ஜெயமே

    ReplyDelete
  2. மறைந்தபின் பெயர் நிலைக்க வேண்டுமெனில் வாழ்வாங்கு வாழ வேண்டும்.அருமை.

    ReplyDelete
  3. ஐயா இன்று என் வலைபக்கத்தில்
    இன்று எனக்கு மரணம் தற்கொலை

    http://tamilyaz.blogspot.com/2011/07/my-dead-bed.html

    ReplyDelete
  4. அருமை புலவரே... அருமை....

    ReplyDelete
  5. முதல் இரண்டு வரிகள் தத்துவ வரிகள் கவிஞரே

    ReplyDelete
  6. பண்ணிய பாவம் ஏதுமில்லை -எனில்
    பயப்பட இங்கு ஏதுமில்லை
    மணியான வாசகம்
    மனம் கவர்ந்த கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வணக்கமய்யா கவிதை அருமை... உங்கள் மனம் இப்போது.. ஒரு ஞானியின் நிலைக்கு சென்றுவிட்டதை இந்த சிற்றறிவு உனர்கிறது..

    காட்டான் குழ போட்டான்....

    ReplyDelete
  8. அனைவருக்குமான
    அறிவுரை.

    “புலவர்” - என அறிந்த பின்னும் “கவிதை அருமை” என்று சொன்னால்.... பொருந்தாது என நினைக்கிறேன் ஐயா.

    ஐயாவிடம் ஒரு ஐயம்:

    //மனதிவ திகழ // - இது ”மனதில் திகழ” என்றிருக்க வேண்டுமோ?

    ReplyDelete
  9. ரியாஸ் அஹமது said...

    நன்றி!சகோ
    வலைப் வந்தேனே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. சென்னை பித்தன் said...

    நன்றி!ஐயா
    வலைப் வந்தேனே!

    ReplyDelete
  11. கவிதை வீதி # said

    நன்றி! சௌந்தர்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. தமிழ் விரும்பி said...

    நன்றி! சகோ நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. தமிழ்வாசி - Prakash said...

    கருத்துரைக் கண்டு மகிழ்ந்தேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. Ramani said...

    நன்றி சகோ
    சற்று அலுவல் அதிகமென்று கருது
    கிறேன்.
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. காட்டான் said...

    சகோ!
    வலைப பக்கம் வந்தேனே
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. சத்ரியன் said

    முதற்கண் என் அழைப்பை ஏற்று என்
    வலை வந்து கருத்துரை வழங்கியதற்கு
    நன்றி!
    மேலும் சுட்டியுள்ள பிழையை
    நானும் வலையில் வெளிவந்த பின்னரே
    கவனித்தேன் உடன் அதை சரி செய்யும்

    தொழில் நுட்பம் எனக்குத் தெரியாது
    சுருக்கமாகச் சொல்வதென்றால்
    கவிதையை எழுதுவது மட்டுமே என் வேலை
    முறைப்படி வலை ஏற்றுவது எல்லாம் என் பத்துவயது பேரன் செய்து விடுவான் அவன் பள்ளிக்கு சென்று விடவே தவறு கண்டும் திருத்த
    இயலவில்லை
    பழக்கமற்ற தட்டச்சு செய்வதில் ஏற்படும்
    தடுமாற்றமும் காரணமாகும்
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. அருமை புலவரே..அருமை..வைர வரிகள்...

    ReplyDelete
  18. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  19. //பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
    பயப்பட வாழ்வில் எதுவுமிலை//

    ரொம்ப சரி. மடியில் கனமிருந்தாத்தானே வழியில் பயப்படணும்..

    அழகான கவிதை.

    ReplyDelete
  20. வணக்கம் ஐயா, எம் வாழ்வின் இறுதிக் காலங்களில் மனதில் ஏற்படும் உணர்வுகளைக் கவியாக்கியிருக்கிறீங்க.
    மரணத்தைக் கண்டு அஞ்சுதல் முறையல்ல எனும் தத்துவத்தினை உங்கள் கவி எனக்குப் போதித்திருக்கிறது.

    ReplyDelete
  21. அழகாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள்

    ReplyDelete
  22. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. //சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
    சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா
    வெறுப்பா மற்றவர நமைநோக்க-பெரும்
    வேதனை வந்து நமைதாக்க //

    அருமையான செந்தமிழ் கவிதையை தங்கள் பதிவுகளில் எப்பொழுதும் ரசிக்கலாம்...

    ReplyDelete
  24. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  25. அருமையான கவிதை.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  26. வாழ்வை வென்று வளமை கொண்டு
    பேதைமை கொன்று முக்காலம் கண்டு
    வாழ்ந்தவர் இங்கு யாருமில்லை- அவர்க்கு
    மரணம் போல் மருந்து வேறில்லை....

    ReplyDelete
  27. உங்கள் கவிதையின் பாதிப்பாக
    எனது இந்த வரிகளை சொல்லலாம்...
    கவிதை நன்று .... கவிதைக்கு நன்றி....

    ReplyDelete
  28. பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
    பயப்பட வாழ்வில் எதுவுமிலை
    வாழ்வின் உண்மையான வரிகள் ஐயா அருமை

    ReplyDelete
  29. மிக அருமையான வரிகள் ஐயா...

    வாழ்வதும் வீழ்வதும் ஒரு முறைதான் வாழ்க்கையிலே... இடைப்பட்ட நாட்களில் என்ன செய்தோம் இந்த உலகுக்கு? நல்லதை செய்து நல்லவையே பேசி நல்லதையே கண்டு எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பெற்று நிலைத்துவிட்டால் இறப்பது உடல் மட்டுமே.... என்று ஸ்பஷ்டமாக உரைக்கும் மிக அழகிய வரிகள் ஐயா....

    என்னது உங்கள் கவிதைகளை வலைப்பூவில் பதிவுடுவது பத்து வயது குழந்தையா? இறைவனின் அருள் பூரணமாக கிடைக்கட்டும் ஐயா குழந்தைக்கு....

    அன்பு வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete