Wednesday, July 27, 2011

புத்தரைப் போல தெளியுங்கள்

தியாகம் தியாகமென -காந்தி
தினமும் செய்தார் யாகமென
யோகம் சிலருக் கதனாலே -அதனை
சொல்ல வந்தேன் இதனாலே
போகம் கருதி சுகம்தேடி-அவர்
புகுந்தார் அரசியல் தனைநாடி
தாகம் இன்னும் தணியவில்லை-தினம்
தந்திடும் துயருக் குண்டோ எல்லை

பெற்ற விடுதலை பறிபோகும்-அதைப்
பேணிக் காக்கும் நெறிகூறும்
கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
கவலையற்றே வீணே தான்
மற்றவர் வேலையே பார்க்கின்றார்-கேட்டால்
மனதைமமூடி மறைக் கின்றார்
அற்றவர் வாழ்வே போராட்டம்-என
ஆனது ஆட்சி தேரோட்டம

எத்தனை காலம் இப்படியே-ஆள்வோர்
எடுத்து வைத்தால தப்படியே
அத்தனை வகையும் ஒன்றாக-சேரின்
அழிவும் வருமே நன்றாக
மெத்தனம் வேண்டாம் கட்சிகளே-இனி
மேலும் வேணாம் சாட்சிகளே
புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
போற்ற ஆட்சியை அளியுங்கள்

புலவர் சா இராமாநுசம்

10 comments:

  1. ஐயா எல்லாரும் நல்ல தெளிவோடுதான் இருக்கிறார்கள்
    செயல்பாடுகளில் ஏனோ நல்லதை தவறவிடுகிறார்கள்

    புத்தரைப் போல தெளியுங்கள்
    உங்கள் சமூகப் பாடல் அருமை

    ReplyDelete
  2. கவிதை கட்டுக்கடங்காமல் சீறி பாயுது அருமை

    ReplyDelete
  3. ///கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
    கவலையற்றே வீணே தான்
    மற்றவர் வேலையே பார்க்கின்றார்///

    அருமை! அருமை!! அருமை!!!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா, வாழ்க்கையில் மேன்மையடைய வைக்கும் அருமையான பாடலினைத் தந்திருக்கிறீங்க. அரசியலையும் மெதுவாய்ச் சாடி, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதனையும் விளக்கியிருக்கிறீங்க.

    ReplyDelete
  5. நல்ல சிந்தனையுடைய பாடல்..

    ReplyDelete
  6. வழமை போல் அருமை

    ReplyDelete
  7. பெற்ற விடுதலை பறிபோகும்-அதைப்
    பேணிக் காக்கும் நெறிகூறும்
    கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
    கவலையற்றே வீணே தான்
    மற்றவர் வேலையே பார்க்கின்றார்-கேட்டால்
    மனதைமமூடி மறைக் கின்றார்
    அற்றவர் வாழ்வே போராட்டம்-என
    ஆனது ஆட்சி தேரோட்டம

    அருமையான நீதிகூறும் சந்தவரிகள்
    பார்த்து ரசித்து பரவசம் அடைந்தேன்
    பாமரர்க்கும் புரியும் வண்ணம் பகிர்ந்த
    இக் கவிதை அருமை!.. அருமை!.. அருமை!..
    ஐயா...

    ReplyDelete
  8. எல்லா வசதிகளும் கொண்ட ஆடம்பர வாழ்க்கையை ஒரு நொடியில் தூக்கி எறிந்து துறவறம் பூண்டார் புத்தர்... காரணம் மரணத்தில் மூப்பில் பிணியில் ஏற்பட்ட தெளிவு... இது எதுவுமே அண்டாத இடமென துறவறத்தை தேர்ந்தெடுத்தார் புத்தர்.... எங்கும் அன்பும் சமாதானமுமே தவழவேண்டும் என்பதே இவரின் தத்துவம்...

    காந்தி நாடு எப்படி போனால் எனக்கென்ன என்றிருக்காமல் எல்லோருக்காகவும் பாடுபட்டு ஆட்சி மீதி பற்று வைக்காமல் தேசப்பிதாவாய் இன்றும் நம் மனதில் நிலைத்து நிற்கிறார்..

    இன்றிருக்கும் கட்சிகளில் எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்லக்கொள்ளி என்பது போலாகி வருபவரெல்லாம் தன் கஜானா நிரப்பி தன் சுகத்தை பார்த்துக்கொண்டு நன்றாக வாழ்ந்து உண்டு ஜீரணித்து விதி வரும் வரை கூட பதவி மோகத்தில் அலைகின்றனர்...

    எல்லாவற்றிர்க்கும் காரணம் ஆசை, இந்த ஆசையை துறந்தாலே நாடு சுபிட்சமாகும் என்று எல்லோருக்கும் புகட்டும் நல் அறிவுரை வரிகளாக அமைத்த சிறப்பு கவிதைக்கு என் அன்பு வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete