அந்த ஒருநாள் அறிவீரா-அவர்
அழைத்தால காண வருவீரா
சொந்த மண்ணாம் தனிஈழம்-உலகம்
சொல்ல வளமே நனிசூழும்
நொந்த மக்கள் கொண்டாட-அவரை
நேகச் செய்தார் திண்டாட
வந்தார் தம்மை வரவேற்றே-தமிழர்
வாழ்ந்த முறையை நிறைவேற்ற
காண
அந்த ஒருநாள் வந்திடுவோம்-அவர்
அழைக்க வாழத்தும் தந்திடுவோம்
புலவர் சா இராமாநுசம்
அழைத்தால காண வருவீரா
சொந்த மண்ணாம் தனிஈழம்-உலகம்
சொல்ல வளமே நனிசூழும்
நொந்த மக்கள் கொண்டாட-அவரை
நேகச் செய்தார் திண்டாட
வந்தார் தம்மை வரவேற்றே-தமிழர்
வாழ்ந்த முறையை நிறைவேற்ற
காண
அந்த ஒருநாள் வந்திடுவோம்-அவர்
அழைக்க வாழத்தும் தந்திடுவோம்
புலவர் சா இராமாநுசம்
Nice.,
ReplyDeleteநிச்சயம் ஒரு நாள் விடியும் ஐயா ...
ReplyDeleteஇன்டிலியில் உங்கள் படைப்புக்களை வெளியிடலாமே. இன்னும் பலர் தரிசிக்கும் வாய்ப்பு பெறும்.
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
கந்தசாமி. said...
ReplyDeleteநன்றி நண்பரே!
இன்டிலி, தமிழ் மணம், தமிழ் வெளி
ஆகிய மூன்றிலும் வருகிறதே
புலவர் சா இராமாநுசம்
நொந்த மக்கள் கொண்டாட-அவரை
ReplyDeleteநேகச் செய்தார் திண்டாட
வந்தார் தம்மை வரவேற்றே-தமிழர்
வாழ்ந்த முறையை நிறைவேற்ற
aiyaa athuvE engkal eekkamum..
supper poem...
அருமையான கவிதை ஐயா
ReplyDeleteநன்றி பகிந்தமைக்கு
அந்த ஒருநாள் வந்திடுவோம்-அவர்
ReplyDeleteஅழைக்க வாழத்தும் தந்திடுவோம்
அருமை ஐய்யா...
அந்த நாளுக்காக உங்களுடன் நானும் காத்திருக்கிறேன்..
காட்டான் குழ பொட்டான்..
நம்பிக்கையான வார்த்தைகள் ஐயா....எல்லோரின் ஏக்கவரிகள் இங்கே கவிதையாக வடித்தது சிறப்பு....
ReplyDeleteஈழம் கண்டிப்பாக ஒரு நாள் மலரும்..
எல்லோரும் நெஞ்சம் நிறை நன்றியுடன் தன்னையே தியாகம் செய்த ஆத்மாக்களை நினைப்பார்கள்....
போராட்டங்கள் எத்தனை கண்ணீர் காவியங்கள் எத்தனை உயிர் பலிகள் எத்தனை... எல்லாவற்றிர்க்கும் ஒரே பதில் ஈழம் மலர்வதே ஐயா...
அன்பு நன்றிகள் ஐயா அருமையான நம்பிக்கைத்தரும் கவிதை படைத்தமைக்கு...
கவிதை அருமை.
ReplyDeleteஅம்பாளடியாள் அவர்கள் என் பதிவில் இட்டுள்ள பின்னூட்டத்தை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.அவர்கள் ஆதங்கம் நெகிழ வைக்கிறது.
//அம்பாளடியாள் கூறியது...
ஐயா .எனக்காக இன்னொரு தகவல் பரிமாற்றம்
நீங்கள் செய்ய வேண்டும் .எங்கள் புலவர் ஐயா
சா இராமாநுசம் அவர்களின் கருத்துரைப் பெட்டியில்
என்னால் கருத்துரை இட முடிவதில்லை அந்தப் பெரியவர்
மீதும் அவர்கவிதைகள்மீதும் நான்கொண்டிருக்கும் விருப்பை
கருத்திட முடியாமல் தவிக்கும் என் மனதின் ஆதங்கத்தைத்
தெருவிப்பீர்களா?......//
வேதனைக்கு அளவில்லை - ஆயினும்
ReplyDeleteவிடியலுக்கும் வெகு தூரமில்லை
சாத்தியத்தை வீழ்த்திடலாம் - அந்த
சத்தியம் தான் வீழ்ந்திடுமோ?
நித்திய சுதந்திரம் விரைவிலே
நிச்சயம்! நிச்சயம்!! நிச்சயம்!!!
சுதந்திரப் பள்ளுப்பாட
துடிக்கும் புலவரே...
நீவீர் வாழி வாழியவே.
நிச்சயம் எல்லோரும் வருவார்கள். நல்லதே நடக்கும்.
ReplyDeleteஅருமைத்தமிழில் கவிதை அற்புதமாக இருக்கிறது!
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி பகிர்வுக்கு........
அந்த ஒருநாள் வந்திடுவோம்-அவர்
ReplyDeleteஅழைக்க வாழத்தும் தந்திடுவோம்
கண்டிப்பக ஐயா
நம்பிக்கையோடு பல வருடங்களாக எதிர்பார்த்திருக்கும் அந்த நாளின் வரவினை எதிர்பார்த்திருக்கும் கவிஞனின் உள்ளத்து உணர்வாக இங்கே கவிதை வந்திருக்கின்றது.
ReplyDeleteநம்புங்கள்....நமக்கொரு நாடு பிறக்கும் என நீங்கள் எம்மைத் தேற்றுவது போன்ற உணர்வினைக் கவிதை தாங்கி வந்திருக்கின்றது.
அன்பு நெஞ்சங்களே!
ReplyDeleteநன்றி மறப்பது நன்றல்ல-என்பதை வகுப்பறையில்,பாடமாக சொல்லிய புலவன்
நான், இங்கே உங்கள் அனைவருக்கும், தனித்தனியாக நன்றி சொல்ல, தற்போதைய
உடல்நிலை(முதுகுவலி)இடம் தரவில்லை
மன்னிக்க!
ஆனால் உங்கள் பதிவுகளைக்
கண்டு கருத்துரைகளை உறுதியாக (சற்று முன பின்)
பதிவு செய்வேன்
உண்ணும் உணவைவிட, உட்கொள்ளும்
மருந்தைவிட என்னை வாழ வைத்துக் கொண்
டிருப்பது உங்கள்பதிவும், மறுமொழிகளுமே
ஆகும் என்பதே உண்மை!
புலவர் சா இராமாநுசம்