Friday, July 22, 2011

சித்தரைப் பெண்ணே

            இத்தரை மீதினில்
            சித்தரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப புடைசூழ பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமை தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமை தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

10 comments:

  1. என்னங்கய்யா இப்பவே சித்திரையை கூப்படறீக ?
    புரியலையே !

    எண்ணிப பதினொரு
    இன்னுயிர் தோழியர்
    நண்ணிப புடைசூழ பின்னே-நீ
    நடந்து வருவதும் என்னே

    11 தோழிகளுக்கு அப்புறம் தான் என்றாலும் - இப்போ
    ஆடியிலே சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?

    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  2. //இல்லாமை நீங்கிட
    ஏழ்மை மறந்திட
    வெள்ளாமை தந்திடு வாயே-உயிர்
    கொல்லாமை தந்திடு வாயே//

    கவிதை வரிகளில் வசந்தம் வீசுகின்றன...வாழ்த்துக்கள் ஐயா..!

    ReplyDelete
  3. //இல்லாமை நீங்கிட
    ஏழ்மை மறந்திட
    வெள்ளாமை தந்திடு வாயே-உயிர்
    கொல்லாமை தந்திடு வாயே///நல்ல வரிகள் ஐயா .

    ReplyDelete
  4. அருமையான கவிதை ஐய்யா..
    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  5. சித்திரைப் பெண் பற்றி ஒரு
    முத்திரைக் கவிதை!

    ReplyDelete
  6. ஆடி மாசத்தில் சித்திரை வலமா? அருமையான கவிதை

    ReplyDelete
  7. எத்தனை முறை வந்தாலும் புதுமைகள் தருவாள்.
    அத்தனை முறையும் வாவென்றும் அழைப்போம்.
    வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete