கட்டிய நாய்கள் கூட-தம்
கயிற்றொடு எகிறி ஆட
எட்டிய மட்டும் பாயும்-மூச்சு
இறைக்கவே குரைத்து ஓயும்
பட்டியில் அடைத்த மாடாய்-உடல்
பசியினால் வற்றி ஓடாய்
தொட்டியும் உடைந்த மீனாய்-ஈழர்
துயரொடு வாழல் காணாய்கண்டுமே காண நிலையில்-வட
கயவரின் வஞ்சக வலையில்
துண்டுமே தோளில் போட்டே-கட்சி
தொண்டினை செய்வார் மட்டே
வேண்டியே சொல்லல் ஒன்றே-ஈழ
வேதனை தீர்க்க இன்றே
துண்டினைத் தாண்டி வருவீர்-ஈழத்
துயர்தனை நீக்கித் தருவீர்
தொப்புளின் உறவு அங்கே-இன்று
துடித்திட நாளும் இங்கே
செப்பியும் பலன்தான் எங்கே-கேட்கா
செவிதனில் உதிய சங்கே
துப்பிட எச்சில் கூட-சிங்கள
துரோகிகள் அனுமதி நாட
தப்பினார் போரில் சிலரே-அவரும்
தரமொடு வாழ்வார் இலரே
உலகிலா கேடி பக்சே-அவர்க்கு
உதவிடும் இந்திய கோட்சே
இலவுமே காத்த கிளியே-தவளை
இனமொடு சேர்ந்த எலியே
புலருமே பொழுது ஒருநாள்-பார்
புகழவே வருமே திருநாள்
மலருமே தனியாய் நாடே-ஈழம்
மகழ்விலே திளைத்து ஆட
புலவர் சா இராமாநுசம்
உங்களின் எண்ணமே
ReplyDeleteஉண்மை தமிழர் அனைவரின்
எண்ணம் அய்யா.
அந்த நாளும் வந்திடாதோ
அந்த நாளும் வாராதோ?
ReplyDeleteவிரைவில் அந்த நாள் வரும் ஐயா...
ReplyDeleteஈழம் உறுதியாய் மலரும்
ReplyDeleteஇது காலத்தின் கட்டாயம்
உங்கள் கவிதைகள் எல்லாம்
அதற்கான முன்னறிவிப்புகளே
சூப்பர் கவிதை
தொடர வாழ்த்துக்கள்
/////தொப்புளின் உறவு அங்கே-இன்று
ReplyDeleteதுடித்திட நாளும் இங்கே
செப்பியும் பலன்தான் எங்கே/////
தங்களின் பாசம் புரிந்தேன் ஐயா..
அத்தனையும் பாச வரிகள்...
கவிஞரே உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும். அன்று உங்கள் கவிதை உள்ளம் போல் அத்தனை உலகத் தமிழரின் உள்ளமும் இன்பத்தில் துள்ளும் மகிழ்ச்சியில் திளைத்தே ஆடும். நன்றி ஐயா.
ReplyDelete//உலகிலா கேடி பக்சே-அவர்க்கு
ReplyDeleteஉதவிடும் இந்திய கோட்சே
இலவுமே காத்த கிளியே-தவளை
இனமொடு சேர்ந்த எலியே//
கவிதையால் சவுக்கடி கொடுத்துள்ளீர்கள்....
//புலருமே பொழுது ஒருநாள்-பார்
புகழவே வருமே திருநாள்//
பூவாய் உதிர்ந்தார்கள்... பூகம்பமாய் அதிர்வார்கள்
மலருமே தனியாய் நாடே-ஈழம்
ReplyDeleteமகழ்விலே திளைத்து ஆட
வெகுவிரைவில் நடக்கும் ஐயா....
இதுதான் எமது வாழ்கை....இருந்த இடத்தில் அடி வேண்டுவது இல்லையெனில் என்னொருவன் இடத்தில் அடிமை இல்லை என்று சொல்லி வழுவது....
ReplyDeleteகூகிளுக்கு ஏன் இந்த வேலை?????
புலருமே பொழுது ஒருநாள்-பார்
ReplyDeleteபுகழவே வருமே திருநாள்//
அந்தநாளும் வந்திடாதோ
இனிமை தந்திடாதோ!!
நம்பிக்கை ஒரு நாள் பலிக்கும் என்பார்கள்.நானும் நம்பிக்கைமீதுதான் ஐயா !
ReplyDeleteநம்பிக் கை தொழுவோம்.
ReplyDeleteVetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
அய்யா இந்த கவிதைக்கு காட்டானால் குழ மட்டுமே போடமுடியுமய்யா..
ReplyDeleteஈழத்தமிழர் சார்பாக கையெடுத்து வணங்குகிறேன் ஐய்யா..
கங்கணம் கட்டியே கருவருத்தக் கயவனே
ReplyDeleteஇங்ஙனம் செய்ததை வீரமென்று எண்ணாயோ
அங்ஙனம் எண்ணினால் அதுநின தறிவீனமே
எங்ஙனம் ஆயினும் நீ சீண்டியது என்னவோ
வேங்கினம் அது மீண்டும் பாய்ந்து வந்து
வேரறுக்கும் நீ எங்கே போயினும்...
"புலியை முறத்தால் விரட்டிய மறத்தாய் ஈன்றக் கூட்டமிது"
"கணவனுக்கு ஒப்பாரி வைக்காது தனது மகனை வேல் கொடுத்த் போருக்கு அனுப்பிய வீரத் தாய் பெற்ற மக்கள் யாம்"
"போரில் புறமுதுகில் வேல் பாய்ந்து வீழ்ந்தானோ என்று எண்ணி பாலோடு வீரமும் கொடுத்து ஊட்டிய தனது முலையையே கொய்து எரியத் துணிந்த பெண்டீர் கொண்டக் கூட்டம் இது"
வீழ்ந்தோம் என்று நினைத்தாயோ!
அது வீறு கொண்டு எழவே வீணனே அறிவாயோ.
சத்தியம் வெல்லும், நிச்சயம் வெல்லும், விரைவில் வெல்லும்.
தங்களின் கவிதை என்னையும் கொட்ட வைத்து விட்டது.