ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும்
எழுதிட நாளும் களைப் பாவே
எழுதிட நாளும் களைப் பாவே
தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும்
தேடுத லின்றி இதயத் தில்
தானாய் வந்தது அலை போல-இன்று
தவியாய் தவிக்குதே சிலை போல
வானாய் விரிந்திட சிந்தனை கள்-கவிதை
வடித்தால் வருஞ்சில நிந்தனை கள்
உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த
உணவின் சுவையும் துறந் தாச்சே
எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
எழுதத் தூண்டின தலைப் பூவே
போதை கொண்டவன் நிலை யுற்றேன்-நாளும்
புலம்பும் பயித்திய நிலை பெற்றேன்
பொழுதும் சாய்ந்தே போன துவே-களைப்பில்
புலவன் குரலும் ஓய்ந்த துவே
பாதி இரவில் எழுந் திடுவேன்-உடன்
பரக்க பரக்க எழுதி டுவேன்
வீதியில் ஒசைவந்த வுடன்-அடடா
விடிந்த உணரவும் வந்தி டிமே
தேதி கேட்டால தெரி யாதே-அன்றைய
தினத்தின் பெயரும் தெரி யாதே
காதில் அழைப்பது விழுந் தாலும-என்
கவன மதிலே செல்வ தில்லை
படுத்த படிய சிந்திப் பேன்-என்
பக்கத் தில் பேனா தாளுமே
தொடுக்க நெஞ்சில் இரு வரிகள்-வந்து
தோன்றும் ஆனல் நிறை வில்லை
அடுத்த வரிகள் காணா தாம்-அந்தோ
அலையும் நெஞ்சே வீணா தாம்
எடுத்த பாடல் முடியா தாம்- எனினும்
ஏனோ இதயம் ஒயா தாம்
அப்பா வேதனை ஆம் அப்பா-தினம்
ஆனது என் நிலை பாரப்பா
தப்பா-? தொடங்கின வலைப் பூவே-நெஞ்சம்
தவிக்க எண்ணம் சலிப் பாவே
ஒப்பா யிருந்ததே என் னுள்ளம்-தேடி
ஓடுமா சிந்தனை பெரு வெள்ளம்
இப்பா போதும் முடி யப்பா-சோர்வு
எழவே தொடரா படி யப்பா
புலவர் சா இராமாநுசம்
தாங்கள் காடு மேடு அலைந்து தேனீக்களின் கொட்டுப்பட்டு
ReplyDeleteஎடுத்து தருகிற கவித்தேனை
நாங்கள் எளிதாக சுவைத்து இன்புறுகிறோம்
தாங்கள் கவிஞன் கவிதைப் பெண்ணைக் கைப்பிடிக்க
படிகிற அவஸ்தையைக் கூட ரசிக்கும் படியாக
இனிக்கும் படியாக சொல்லிப் போவது அருமையிலும் அருமை
சிலையை வைத்து பாடம் கற்றுக் கொண்ட ஏகலைவன் போல
தங்கள் கவிதை கொண்டு பாடம் படிப்பவர்கள்
நிறையப் பேர் பதிவுலகில் இருக்கிறோம் என்பதை மனதில் கொள்ளவேணுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அட்டகாசமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஒரு பதிவரின் நிலையை அழகிய வார்த்தைகள் கொண்டு கவிதையாக்கி சாதித்து விட்டீர் ....இன்னும் வேண்டும் உங்கள் தமிழ் எங்கள் தமிழ் செழித்திடவே நன்றி நன்றி
ReplyDeleteவணக்கம் ஐயா
ReplyDeleteநான் ரமணி சாரின் கருத்தை முழுதாய் வழி மொழிகிறேன்
உங்களின் கவிதை படித்து மகிழ்ந்து வரும் எங்களைப் போன்றவர்களுக்காகவவது எழுதுங்கள்
தமிழ் கடமை ஆற்றுங்கள்
காதில் அழைப்பது விழுந் தாலும-என்
ReplyDeleteகவன மதிலே செல்வ தில்லை
அப்ப ஆத்துக்காரிட்ட பேச்சு கிடைக்குமே
அவளைத்தொடுவான் ஏன் கவலைப்படுவான் ஏன்
ReplyDeleteதொடர்ந்து படித்தும் எழுதியும் வருகிற பலரின் அவஸ்தைதான் இது.
ReplyDeleteஉங்கள் வார்த்தைகளில் அருமையாய் வந்திருக்கிறது ராமாநுசம் ஐயா.
எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
ReplyDeleteஎழுதத் தூண்டின தலைப் பூவே//
வண்ணமும், வாசமும் நிரம்பிய
கவிதைப் பூவிற்குப் பாராட்டுக்கள்.
பதிவுலக போதையும் சில நேரங்களில் வரும் சலிப்பும் உங்கள் கவிதையில் அருமையாக வெளி வந்திருக்கின்றன!தொடர்ந்து கவிதை படையுங்கள்!அதைப் பார்த்துக் கொஞ்சமாவது உண்மையான கவிதை எழுதக் கற்றுக் கொள்கிறேன்!
ReplyDelete//எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
ReplyDeleteஎழுதத் தூண்டின தலைப் பூவே//
//காதில் அழைப்பது விழுந் தாலும-என்
கவன மதிலே செல்வ தில்லை//
பதிவர்கள் பலரின் எண்ணங்களை, தவிப்புகளை, மதிமயங்க வைக்கும் கற்பனை உலக சஞ்சாரத்தை வெகு அழகாகத் தொடுத்துக் கொடுத்துள்ள, தங்களுக்கு என் பாராட்டுக்கள்.
Ramani said...
ReplyDeleteசிலையை வைத்து பாடம் கற்றுக் கொண்ட ஏகலைவன் போல
தங்கள் கவிதை கொண்டு பாடம் படிப்பவர்கள்
நிறையப் பேர் பதிவுலகில் இருக்கிறோம்
சகோ இரமணி அவர்களே தங்களி்ன் இந்த
பாராட்டு எனக்கல்ல, நான் கற்ற தமிழுக்கே உரியது
இருந்தாலும்,நன்றி நன்றி
இராமாநுசம்
ரியாஸ் அஹமது said...
ReplyDeleteஎன்றும் போல் இன்றும் வழங்கிய
தம்பி நன்றி
இராமாநுசம்
வேடந்தாங்கல் - கருன் *! said
ReplyDeleteநன்றி நண்பரே
இராமாநுசம்
ராஜகோபாலன் said...
ReplyDeleteமுன் மொழிந்தார் இரமணி
பின் மொழிந்தார் ராஜா
நன்றி சகோ
இராமாநுசம்
கவி அழகன் said
ReplyDeleteஅப்ப ஆத்துக்காரிட்ட பேச்சு கிடைக்குமே
தம்பீ, அவபோயி இரண்டு வருடமாயிற்றே
என்றாலும், அவள் தானே இங்கே கவிதையாக
வந்து கொண்டிருக்கிறாள்
நன்றி
இராமாநுசம்
சுந்தர்ஜி said...
ReplyDeleteஅள்ளித் தெளிக்கும் நீரே-வாழ்த்து
அனுப்பினீர் பெற்றேன் பேறே
தெள்ளிய தீந்தமிழ் மொழியே-நான்
தேடிக் கற்றதன் வழியே
சொல்லினேன் கவிதை நானே-உங்கள்
சொற்கள் எனக்குத் தேனே
நல்லன எடுத்துச் சொல்வீர்-கருத்தை
நாளும் இங்கே தருவீர்
நன்றி
இராமாநுசம்
-
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteவண்ணமும், வாசமும் நிரம்பிய
கவிதைப் பூவிற்குப் பாராட்டுக்கள்
கை வண்ண சகோதரிக்கு இந்தக் கவி அண்ணன் நன்றி
இராமாநுசம்
சென்னை பித்தன் said
ReplyDeleteஐயா
நான் குடத்துள் உள்ள விளக்கே என்னை
குன்றின் மேல் வைத்த விளக்கா மிகைப்
படுத்திய உங்கள் பெரும் தன்மைக்கு எடுத்துக்
காட்டு நன்றி
இராமாநுசம்
.கோபாலகிருஷ்ணன் said
ReplyDelete//எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
எழுதத் தூண்டின தலைப் பூவே//
ஐயா வரிகளை எடுதுக்காட்டி-நீர்
வழங்கிய பாராட்டுக்கு
உரியவனல்ல எனினும்-இங்கே
உரைத்திட்டேன் நன்றிநன்றி
இராமாநுசம்
தொடர்ந்தும் மரபுக் கவிதைகளால் எங்கள் மனதினை மகிழ்வுறச் செய்ய வேண்டும் ஐயா.
ReplyDeleteவலைப் பூவானது தொட்டால் இலகுவில் விட முடியாத போதை நிறை உலகம் என்பதனை அற்புதமாக உங்கள் கவிதையில் வடித்திருக்கிறீங்க..
தொடர்ந்தும் எழுதுங்கள். கூடவே வருவோம்.
அய்யா
ReplyDeleteதங்களின் பதிவுகள் அனைத்தும் நன்றாகத்தான் உள்ளது ...தங்களின் சிந்தனை நாளும் தேவை இந்த நாட்டுக்கு
//உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த
ReplyDeleteஉணவின் சுவையும் துறந் தாச்சே
எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
எழுதத் தூண்டின தலைப் பூவே
போதை கொண்டவன் நிலை யுற்றேன்-நாளும்
புலம்பும் பயித்திய நிலை பெற்றேன்
பொழுதும் சாய்ந்தே போன துவே-களைப்பில்
புலவன் குரலும் ஓய்ந்த துவே //
” விடைபெறும் பதிவர்கள் “ என்ற எனது பதிவை போட்டுவிட்டு வந்தால் எனது முகப்பு பலகை (DASHBOARD) - இல் உங்கள் கவிதை. முன்பே பார்த்து இருந்தால் எனது இந்த பதிவில் உங்களின் இந்த வரிகளை மேற்கோளாக தந்து இருப்பேன்.
வலைப்பூவின் தாக்கம் வரிகளில் விளையாடுது - நல்ல சொன்னீங்க
ReplyDeleteவலைக்கும் உங்களுக்குமான உறவை கவிதையால் சொல்லிவிட்டீர்கள்..
ReplyDeleteஐயா நீண்ட நாட்களுக்குப் பின் வருகிறேன்...
ReplyDeleteமிக அருமை.
சென்னைப் பதிவர் விழாவில் தங்கள் பங்களிப்பு பற்றி அறிகிறேன்.
சென்னைப் பதிவர் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள். கலந்து கொள்ள முடியா நிலைக்கு வருந்துகிறேன்..
எழுத்தாளரின் எண்ணங்களை கவியாக்கிய விதம் அருமை ஐயா.
ReplyDeleteஅனைவரின் நிலையும் இது தானோ ?
ReplyDeleteஆனால் 'பணம்' ஒன்றே உலகை ஆளுகிறது என்ற நினைப்பில் ...
மண் விழுந்து விட்டது மகிழ்ச்சியே .
இல்லை , இல்லை புகழ் [ பகிர்தல் ] ஒன்றே பெரிது என்று கூறுவது
வலைப்பூக்கள்.
கவிதை என்னமாய் இழைகிறது ஐயா !
ஐயா வணக்கம் ரொம்ப நாளுக்கு அப்புறம் வருகிறேன் .
ReplyDeleteஉங்கள் கவிதைகள் எப்புவும் போல அழகு
வாழ்த்துக்கள்
உடல் நலத்தில் கவனம் எடுங்கள்.
பதிவு எழுதுபவர்களின் மன நிலையை அப்படியே அழகான கவித்தமிழில் படம்பிடித்துக் காட்டிவிட்டீர்கள். இவை ஒவ்வொன்றும் நிஜம்.
ReplyDeleteஇதிலிருந்து மீள்வதற்கும் வழி சொல்லுங்கள் ஐயா!
த.ம. 1
எனது டேஷ் போர்டு தங்கள் பதிவு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக வெளியானதாக தெரிவிக்கிறது.
ReplyDeleteகிளிக் செய்து பார்த்தபோது கருத்தும் வாக்கும் 0 என்றே காண்பித்தது நான் கருத்தும் வாக்கும் இட்ட பின்னர் பார்த்தபோது உண்மையில் 28 கருத்துக்கள் பதிவாகி உள்ளது. மீண்டும் பார்க்கும்போது வாக்கு மட்டும் 1 காண்பிக்கிறது.கருத்துக்கள் 0 என்றே காண்பிக்கிறது. நிரலில் ஏதாவது மாற்றம் செய்திருக்கிறீர்களா?அல்லது என் கணினியில் பிழையா?
சரிபாருங்கள் அய்யா!
ayya !
ReplyDeletearumai!
//உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த
ReplyDeleteஉணவின் சுவையும் துறந் தாச்சே
எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
எழுதத் தூண்டின தலைப் பூவே//
சரியாய் சொன்னீர்கள்.உங்களது கவிதையின் ஒவ்வொரு வரியும் எல்லா பதிவர்களுக்கும் பொருந்தும். வாழ்த்துக்கள்!
படுத்த படிய சிந்திப் பேன்-என்
ReplyDeleteபக்கத் தில் பேனா தாளுமே
தொடுக்க நெஞ்சில் இரு வரிகள்-வந்து
தோன்றும் ஆனல் நிறை வில்லை
அடுத்த வரிகள் காணா தாம்-அந்தோ
அலையும் நெஞ்சே வீணா தாம்
எடுத்த பாடல் முடியா தாம்- எனினும்
ஏனோ இதயம் ஒயா தாம்//
பிடிகிடைக்காது படைப்பாளிகள் படும் அவதியை
மிக மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
ஆனால் அதுவே ஒரு அருமையான
படைப்பாகிப்போனதுதான் ஆச்ச்ரியம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் சிந்தனைக்கு பஞ்சமே இல்லை ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)
வலைப்பூ கவிதை! அருமை ஐயா!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
மனம் திருந்திய சதீஷ்
அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!
http://thalirssb.blogspot.in
தமிழ் தேடி
ReplyDeleteஇளைப்பாறும்
தங்கள் வலைப்பூவில்
ஏனிந்த
ஏக்க வினா
எழுதுங்கள் எண்ணங்களை
ஏறிட்டு பார்க்க
எண்ணற்ற உள்ளங்கள்
என்நாளும் உண்டு
அன்புநிறை பெருந்தகையே..
ReplyDeleteவலைப்பதிவர்களின் நிலை பற்றி
அழகாய் சொன்னீர்கள்...
ஐயா இது மீள பதிவா ஏற்கனவே வாசித்தது போல் உள்ளதே!
ReplyDelete//பாதி இரவில் எழுந் திடுவேன்-உடன்
ReplyDeleteபரக்க பரக்க எழுதி டுவேன்
வீதியில் ஒசைவந்த வுடன்-அடடா
விடிந்த உணரவும் வந்தி டிமே//
அபாரம் ஐயா..
முதுமையின் வேதனைகளையும் மறக்கச் செய்யும் தமிழின் இனிமையும் தங்கள் கவிதைத் திறனும். வலைப்பூ என்னும் வசதி மட்டும் இல்லாதிருந்தால் இப்படி எத்தனைத் தமிழ்ப்பாக்கள் வெளிவரும் வாய்ப்பின்றி முடங்கிக்கிடந்திருக்குமோ? தங்கள் உடல்நிலையும் மனநிலையும் எப்போதும் உடன்பாடாய் அமைந்து இன்னும் பல்லாயிரம் பாக்களைப் படைக்க வேண்டுகிறேன். நல்வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteஅருமை வரிகள்..அத்தனையும் ..
ReplyDelete