தோளில் பையும் தொங்கிடவே-குப்பை
தேடியே கண்கள் ஏங்கிடவே
காலில் செருப்பும் தேய்ந்திடவே-நடக்கும்
கால்கள் அறியா ஓய்ந்திடவே
நாளும் வருவான் வீதியிலே-விரைந்து
நடக்கவும் உடம்பில் சக்தியிலே
பாலின் கவரைக் கண்டாலே-உடன்
பாய்ந்து எடுப்பதும் உண்டாமே
குப்பைக் தொட்டியில் குனிவானே-உள்ளே
குத்திக் அதனை கிளர்வானே
தொப்பை நிறையும் வழியுண்டா-கண்டு
துடிக்கும் கருணை விழியுண்டா
சப்பை உடம்பே பரிதாபம்-மனித
சாதிக்கு இதுவே பெரும் சாபம்
உப்பை வாங்கவும் காசில்லை—பசி
உயிரை வாட்டும் பெருந்தொல்லை
வீடுவீடாய் நாடிடு வான்-வெளியில்
வீசிய குப்பையில் தேடிடுவான்
ஓடி வந்திடும் தெருநாயே-வீட்டின்
உள்ளே குரைத்திடும் ஒருநாயே
ஆடும் உடலும் பயத்தாலே-ஆனால்
அடங்கும் பசிமிகு வயத்தாலே
வாடும் நிலைதான் ஆயிடுமா-உடல்
வற்றியே அவனுயிர் போயிடுமா
இப்படி வாழ்வார் பலபேரே-தலை
எழுத்தெனச் சொல்வார் சிலபேரே
ஒப்புமா உள்ளம் நல்லோரே-நேர்மை
உள்ளோர் ஏற்றுக் கொள்ளாரே
செப்பவும் இயலா கொடுமையிது-மேலும்
செப்புவோர் காணின் மடமையது
எப்படி அவர்கள் வாழ்வதென-அரசு
எண்ணிட வேண்டும் கடமையென
பாராமுகமாய் இருக்கும் அரசினால், கவனிப்பாரற்று இருக்கும் பிச்சைக்காரர்களின் நிலமையினை, அவர்களின் ரணங்கள் நிறைந்த வாழ்க்கை முறையினை விளிக்கும் வசனங்களோடு கவிதை ஏக்கம் எனும் உணர்வினைத் தாங்கி ‘அரசு அவர்களுக்காய் ஏதாச்சும் செய்யாதா’ எனும் உணர்வோடு இக் கவிதை வந்திருக்கிறது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசமூக அக்கரையை தங்களின் தீந்தமிழால் தீட்டிய விதம் அருமை அய்யா,
ReplyDeleteஏழ்மையின் இயலாமையை எளிமையாக எடுத்து இயம்பிய விதம் அமர்க்களம் அய்யா.
சும்மா தண்ணி மாதிரி கவிதை பாயுது ஐயா
ReplyDeleteசந்தத்தோடு சமூக கோபம் ....
ReplyDeleteசெப்பவும் இயலா கொடுமையிது-மேலும்
ReplyDeleteசெப்புவோர் காணின் மடமையது
எப்படி அவர்கள் வாழ்வதென-அரசு
எண்ணிட வேண்டும் கடமையென//
ஆற்றாமை ஆறிட பிரார்த்திப்போம்.
தலைப்பை பார்த்தவுடன் சமச்சீரோ என நினைக்க வைத்தது..
ReplyDeleteகருத்தை படித்ததும்..
இது ஆதரவற்றோருக்கான குரல் எனப் புரிந்தது.
நன்றி ஐயா.
முத்தான மூன்று
( வலையுலக நட்பை இணைக்கும் - தொடர் )
என ஒரு பதிவிட்டுள்ளேன் ஓய்விருக்கும்போது வருகை தாருங்களேன்..
நன்றி.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
ஐய்யா.. நான் எனது பிள்ளைகளுடன் இலங்கை இந்தியா போன்ற எனது தொப்பில் கொடி நாடுகளுக்கு வரும்போது.. எனது பிள்ளைகள் இவர்களை பார்கும் பார்வை இதற்கு நானும் ஒரு காரணம் என்பதுபோல் இருக்குதய்யா...மனசு வலிக்குதையா..
ReplyDeleteஇங்கு காட்டான் கவனித்த வரை கிராமங்களில் இப்படி சோத்துக்கு மாரடிப்பவர்கள் இல்லை ஐய்யா.. போனவருடம் மதுரைக்கு போகும் வழியில் ஒரு கிராமத்தில் சாப்பாட்டு கடையில் சாப்பாட்டு பாசலை அதிகமாக வாங்கி விட்டேன் யாருக்காவது கொடுக்கலாம் என்று தேடினேன் ... ஒரு பிச்சை காரர்களையும் காணவில்லை..! கடைசியில் அங்கு நின்ற நாய்க்கு அதை கொடுத்தேன் ..
ஆனால் நகரங்களில் சொல்லத்தேவையில்லை.. இபோ காட்டான் எங்கு போவதென்றாலும் அது கிராமங்களை நோக்கியே இருக்கின்றது எனது சின்ன காட்டான்களும் அதைதான் விரும்புகிரார்கள்..!
Nandru
ReplyDeleteஅசத்தலான பதிவு..
ReplyDeleteநானும்தான் தினமும் பார்க்கிறேன்.அப்போது ஏற்படாத பாதிப்பை உங்கள் கவிதை ஏற்படுத்துகிறது!
ReplyDeleteகருத்துரை வழங்கிய அனைவருக்கும்
ReplyDeleteநன்றி நன்றி நன்றி நன்றி
புலவர் சா இராமாநுசம்
"தொப்பை நிறையும் வழியுண்டா-கண்டு
ReplyDeleteதுடிக்கும் கருணை விழியுண்டா
சப்பை உடம்பே பரிதாபம்-மனித
சாதிக்கு இதுவே பெரும் சாபம்
உப்பை வாங்கவும் காசில்லை—பசி
உயிரை வாட்டும் பெருந்தொல்லை"
தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினையே அழித்திடுவோம் என்றான் பாரதி...
அவன் பிறந்த மண்ணிலும் இப்படிப் பல அவலம்...
அற்புதக் கவிதை...
அருமை, அருமை, நன்றிகள் புலவரே!
http://tamizhvirumbi.blogspot.com/
செப்பவும் இயலா கொடுமையிது
ReplyDeleteவரிகள் வேதனையின் வலிகள்