ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி வந்திட இக்கவிதை-ஐயா
நவின்றேன் இங்கே காணுமிதை
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
தேவை அளவே நீர்சேர்த்தே
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
படையல் இட்டுத் தொழுவாரே
இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
எழுதுதல் மிகவும் சிறப்பாகும்
ஒன்றே சொல்வேன் உழுவாரே-இவ்
உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
அகத்தில் அதனைக் கொள்ளுவரே
உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
உலக வாழ்வே முடங்கிவிடும்
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்
வருவாய் ஒன்றும் நிலையன்றோ
எழவே முடியா நட்டத்தில்-அரசு
எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
அனைவரும் வருகிறார் நகர்தோறும்
இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
அரசு செய்யுமா சொன்னாலே
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
தவறின் பஞ்சம் ஈண்டமேபுலவர் சா இராமாநுசம்
ஆடி மாசத்தில் உழவர்களுக்காக ஒரு கவிதை பகிர்வு. நன்றி.
ReplyDeleteவழுவே அறியா தொழிலன்றோ-வரும்
ReplyDeleteவருவாய் ஒன்றும் நிலையன்றோ
கவிதையின் அழகைப் புகழ்வதா..
அல்லது அதன் பொருளில் மனம் கசிவதா..
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteதவறாமல் வருகின்ற தமிழ்வாசி - நீர்
தமிழ் ஐயா வாசி
நன்றி
புலவர் சா இராமாநுசம்
ரிஷபன் said...
ReplyDeleteநண்பரே! தங்கள் பாராட்டு
வசிட்டர் வாயால் பிரம்மரிஷி என்ற
பட்டம் பெற்றதைப் போல எண்ணி
மகிழ்கின்றேன்
நன்றி
புலவர் சா இராமாநுசம்
''..உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
ReplyDeleteஉலக வாழ்வே முடங்கிவிடும்.
இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
எழுதுதல் மிகவும் சிறப்பாகும்''...
mikka nallathu...I am glad to read this vaalthukal.
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
//உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
ReplyDeleteஉலக வாழ்வே முடங்கிவிடும்//
உண்மை!எனவேதான் வள்ளுவனும் சொன்னான் -
“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை”
என்று!
அருமையான கவிதை ஐயா உடல் நலம் எப்படி
ReplyDeleteஐய்யா அருமையான கவிதை அதுவும் காட்டானுக்கு பிடித்த கவிதை .. விவசாயிகளை அரசு எப்போது அவர்கள் ஒரு உணவு தானியங்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் என்ற எண்ணத்தை நிறுத்துகிறதோ அப்போதுதான் விவசாயம் உருப்படும்..
ReplyDeleteஅத்துடன் விவசாயிகளும் பணத்தை கொட்டி இரசாயண மருந்துகளை வாங்கி மண்ணில் கொட்டி மண்ணையும் மலடாக்கி கடைசியில் தற்கொளைக்கு போவதையும் நிறுத்திவிட்டு இயற்கை விவசாயத்திற்கு மாற முன்வர வேண்டும்..இதன் மூலம் நஞ்சில்லா உணவை மக்கள் சாப்பிட முடியும். அத்துடன் இயற்கை விவசாயத்திற்கு மிகப்பெரும் சந்தை வாய்ப்பு காத்திருக்கிறது.
உங்கள் வாழ்கையையே எடுத்துப் பாருங்கள்.. அக்காலத்தில் நிச்சயமாக நீங்கள் இயற்கை உணவையே உண்டிருப்பீர்கள்.
நானும் எனது சிறு வயதில் இயற்கையான உணவுகளையே உற்கொண்டேன். வீடுகளில் கிடைக்கும் தாவர கழிவுகளும் வீட்டில் வளர்க்கும் ஆடு மாடுகளின் கழிவுகளுமே போதும்.. இயற்கை விவசாயத்திற்கு இதைத்தான் எனது ஆச்சி செய்தார்..
பூச்சி விரட்டிகளுக்கு இருக்கவே இருக்கிறது..? வேப்ப மரம்..எனது வாழ்கையின் பிற்காலத்தில் எனது கிராமத்தில் இயற்கை வொவசாயம் செய்தே வாழ வேண்டும் என்பதே எனது அவா..
நீங்கள் என்னை உங்கள் கவிதையால் எனது கிராமத்திற்கே கொண்டு சென்று விட்டீர்கள்.. நானும் கற்பனையில் எடுக்கப்போறேன்.. களபாயை(பனை ஓலையால் செய்யப்பட்ட மிக நீண்ட பாய் களத்தில் வைக்கோலில் இருந்துநெல்லை பிரிப்பதற்கு உதவும் )..?
வணக்கம் ஐயா, சேற்றி கால் வைத்து, நாட்டு மக்களுக்காய் நாளும் உழைப்போரின் மகிமையினை நினைவு கூரத் தை மட்டுமல்ல, ஆடியும் ஏற்றது தான் என்பதனை அழகாய் உரைத்து நிற்கிறது உங்கள் கவிதை.
ReplyDeleteஆடி என்றாலே நிறைய ஞாபகங்கள்.அதில் நீங்கள் சொன்னதும் ஒன்று !
ReplyDelete\\எழவே முடியா நட்டத்தில்-அரசு
ReplyDeleteஎந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்//
== அருமை அய்யா. அடிக்கடி வருவேன் கற்றுக் கொள்ள.
ஆடி மாதத்தில் பெருந்தொழில்கள் நடப்பதில்லை..ஆனால் உழைப்பிலே உன்னத தொழில்லான விவசாயம் தொடங்க ஆரம்பிக்கும்...
ReplyDeleteஆடி பட்டம் தேடிப்பார்த்து விதைக்கனும் கண்ணய்யா...
விவசாயிக்கும் , விவசாயத்திற்க்கும் முன்னுரிமைக்கொடுப்போம்...
ஆடிமாதம் விதைப்பவர்களுக்கெல்லாம் நல்ல அமோக விளைச்சலை உண்டாக்க வேண்டி அம்மனை வேண்டுவோம்....
வாழ்த்துக்கள் ஐயா
நாட்டின் முதுகெலும்பை பற்றிய
ReplyDeleteஇன்பத் தேன் ஊற்றிய
வியத்தகு
வித்தக
விவசாய கவிதை அய்யா
அருமை
அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்