வேண்டாம் வெளிச்சம் எதனாலே-நெஞ்சு
வேதனைப் படுமாம் அதனாலே
இங்கே
இயற்கை படைத்த ஓவியமே
இந்த உலகமென்ற காவியமே
செயறகை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே
இயற்கை அழிய அழியத்தான்
இன்னல் பல்வகை வழியத்தான்
செயற்கை செய்யும் சீரழிவை
செப்பியும் கேளா பேரழிவை
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்
யாதும் ஊரே என்றானே
யாவரும் கேளீர் என்றானே
தீதும் நன்றும் பிறராலே
தேடி வாரா தென்றானே
சாதிச் சண்டை ஊரெங்கும்
சமயச் சண்டை உலகெங்கும
மோதிப் பார்க்க பலநாடும்
முடிவில் விளைவே சுடுகாடாம்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்
பற்று பாசம் எல்லாமே
பறக்க நெஞ்சில் இல்லாமே
சுற்றம் தாங்கும் நிலையுண்டா
சொன்னால ஆட்டும் தலையுண்டா
குற்றம் காண்பதே குணமாக
கொலையும் இங்கே கலையாக
பெற்றோம் நாமே பெரும்பேறும்
பேச்சும் செயலும் வெவ்வேறும்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்
இன்னும் சொல்ல பலவுண்டே
எழுதவும் இங்கே இடமுண்டே
பன்னும் பாவம் தெரியாமல்
பாதை எதுவென அறியாமல்
மின்னும் மின்னல் மேகத்தில்
மறைய அதுபோல் லோகத்தில்
பின்னும் எழுத மனமின்றி
பிரிந்தேன் நானும் மிகநன்றி
புலவர் சா இராமாநுசம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
வெளிச்சம் போட்டுக்காட்டியது தங்கள் பதிவு..
ReplyDeleteவெளிச்சம் வேண்டாமென..
கவிதையும் அழகு உங்கள் தமிழும் அழகு வாழ்த்துக்கள் ஐயா..
ReplyDeleteazhagu thamizhil azhagu kavithi..
ReplyDeletesuper..
இருட்டாய்ப் போன இதயங்களுக்குள் - இந்த
ReplyDeleteவெளிச்சம் புகுந்து நிறையட்டும்.
வெளிச்சம் அது தரும் அசுபிட்சம் அருமை....
நல்லவரிகள் ஐயா ... இருளாகிக்கொண்டே போகிறது உலகு ...
ReplyDeleteஇயற்கை அழிய அழியத்தான்
ReplyDeleteஇன்னல் பல்வகை வழியத்தான்
செயற்கை செய்யும் சீரழிவை
செப்பியும் கேளா பேரழிவை
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்
தாங்கள் சொல்வது உண்மைதான் கவிஞரே.
இராஜராஜேஸ்வரி said
ReplyDeleteநன்றி சகோதரி நன்றி
புலவர் சா இராமாநுசம்
Riyas said...
ReplyDeleteநன்றி நண்பரே நன்றி
புலவர் சா இராமாநுசம்
வேடந்தாங்கல் - கருன் *! said
ReplyDeleteஎன்றும் அன்புடன்-நன்றி
புலவர் சா இராமாநுசம்
தமிழ் விரும்பி said...
ReplyDeleteஎடுத்துக் காட்டுடன் எழுதினீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
கந்தசாமி. said...
ReplyDeleteவருக மீண்டும் தருக கருத்துரை
நன்றி
புலவர் சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteதொடர்ந்து வருவீர் தொடர்ந்து வருவேன்
நன்றி
புலவர் சா இராமாநுசம்
அழகு தமிழ்க் கவிதையை ரசித்தேன்!
ReplyDeleteசென்னை பித்தன் said...
ReplyDeleteஉங்கள் கருத்துத் தேனை ருசித்தேன்
புலவர் சா இராமாநுசம்
வெளிச்சத்தில் நீதி மறைகிறதே....
ReplyDeleteகவிதை வெளிச்சம்- சமூகத்தின் இருள்..
rajeshnedveera
தாளம் பிசகாமல் கவிதை வெளிச்சமாயிருக்கு ஐயா !
ReplyDeleteநல்கவிதை...
ReplyDelete