Thursday, July 14, 2011

என் காதல் கவிதையும் நீயும்..

ஏடெடத்தேன் கவிஎழுத ஓடிவந்தாய்-அடி
என்னவளே எதற்காக ஊடிநின்றாய்
பாடிநான் முடிப்பதற்குள் வாடிப்போனாய்-என்
பாவுக்கு நீதானே பொருளா யானாய்
தேடியதைபோகாமல் சொற்கள் தாமே-என்னை
தேடியிங்கே வந்துவிட உடனேநாமே
கூடிமகிழ வருவாயா பெண்ணே-இன்பம்
கொள்ளையோ கொள்ளை கவிதைபெண்ணே

இனிமேலும் வேண்டாமே சண்டித்தனமே-நான்
என்றேனும் கோபித்த துண்டாதினமே
நனிமேலும் ஊடியே செல்லவேண்டாம்-அது
நன்மையா அல்லவே எண்ணிலீண்டாம்
கனிமேலும் கனிந்தாலே கெட்டேபோகும்-இது
கதையல்ல தொடர்பின்றி விலகலாகும்
பனிப்போரை நீக்கிவிட நீயும்பெண்ணே-உடன்
பறந்திங்கே வந்திடுவாய் கவிதைப்பெண்ணே

அதிகாலை உன்முகத்தை பார்த்துவிட்டே-என்
அடுத்தபணி அறிவாயா நெஞ்சைத்தொட்டே
புதுமாலை போன்றவளே புரிந்துமேனோ-நீ
புரியாத போல்நடித்தல் நியாம்தானோ
மதுமாலை வருமுன்னர் வருவாய்வீணே-நீ
வருகின்ற வழிபார்த்தே யிருப்பேனானே
இதுகாறும் கூறியதைக்கேட்ட பெண்ணே-உடன்
இனிதாக வந்திடுவாய் கவிதைபெண்ணே

புலவர் சா இராமாநுசம்

12 comments :

  1. ''..இனிமேலும் வேண்டாமே சண்டித்தனமே
    பனிப்போரை நீக்கிவிட நீயும்பெண்ணே
    புரியாத போல்நடித்தல் நியாம்தானோ
    மதுமாலை வருமுன்னர் வருவாய்!...''
    மிக நன்றாகவே கவிதைப் பெண் கூடுகிறாள் உங்களோடு! அருமை! வாழ்த்துகள்!...
    Mrs.Vetha.Elangathilakam.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  2. கவிதை குறித்தே ஒரு கவிதை
    மிக அழகாக படைத்துள்ளீர்கள்
    ரசித்துப் படித்தேன்
    கவிதை அருமை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம் புலவரே!
    கவிபாட கன்னியவளை கனிவோடு அழைக்கும் புலவோய்
    புவியோரைப் போற்றும் நின் புலமைக் கண்டு வியக்கின்றேன்.
    விழியோரம் நின்னை நிறுத்தியே வீதியோரம் போகின்றாள்;
    களிநடனம் புரிந்திடவே, நின் கவிதைத் தேனில் நனைந்திடவே,
    தளிர்மேனி தென்றலவள், அதோ பூரிப்போடு வருகின்றாள்.

    நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா... கவிதைப் பெண்ணிடம் விண்ணபமாக, உங்கள் மன உணர்வுகளை இக் கவிதையில் பதிவு செய்திருக்கிறீங்க.

    ReplyDelete
  5. கவிதைப் பெண்ணை கையகப்படுத்தி அருமையான கவிதையாக எழுதியிருக்கிறீங்க.

    ReplyDelete
  6. ஐயா அழகான அருமையான கவிதைப் பெண் கவிதை....
    சுப்பர்,,,,

    ReplyDelete
  7. உங்களைப் பற்றி நீங்களே எழுதியது மாதிரி இருந்தது, ஏனெனில் நீங்களும் கவிதையும் வேறல்லவே

    ReplyDelete
  8. கருத்துரை வழங்கியுள்ள,அன்பு நெஞ்சங்கள்
    அனைவருக்கும் ஒருசேர நன்றி!நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. கவிதைப்பெண் உங்களை விட்டு அகலாதவள் ஆயிற்றே!

    ReplyDelete
  10. அதிகாலை உன்முகத்தை பார்த்துவிட்டே-என்
    அடுத்தபணி அறிவாயா நெஞ்சைத்தொட்டே
    புதுமாலை போன்றவளே புரிந்துமேனோ-நீ
    புரியாத போல்நடித்தல் நியாம்தானோ ....

    பெண் மனசு ஆழமென்று கவி எழுதும் ஆம்பளைக்கும் தெரியும்.....அது அந்த் கவிதை பெண்ணுக்கும் தெரியும்
    rajeshnedveera

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...