Wednesday, July 13, 2011

ஏமாற்றம்

தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
தோன்ற வேண்டும் அதில்மாற்றம்
ஏற்றால் வெற்றியின் படியாக-நாம்
எடுத்து வைக்கும அடியாக
ஆற்றல் வேண்டும் நம்பணியை-வெற்றி
அடைவோம் பரிசாம் நல்லணியை
மாற்ற மில்லா மனத்திண்மை-என்றும்
மனதில் கொண்டால் தருமுண்மை

முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
முயன்றால் தந்திடும் முன்னேற்றம
இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
ஏனோ தானென பண்ணாதீர்
வயலாய் ஆகுதே பாலைநிலம்-முயற்சி
வழியால் வந்ததே அந்தவளம்
புயலாய் உழைக்க ஏமாற்றம்-நீங்கிப
போக வந்திடும் முன்னேற்றம்

எண்ணிச் செயலபடின் ஏமாற்றம்-வாரா
எதுவாய் இருப்பினும், முன்னேற்றம்
பண்ணுள் இசையிலை ஏமாற்றம்-அதைப்
பாடினால் வருவதும் ஏமாற்றம்
கண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்
கானல் நீரும ஏமாற்றம்
மண்ணில எவரே ஏமாற்றம் –அடையா
மனிதர் இருந்தால் பறைசாற்றும்

16 comments:

  1. தோல்விகளே வெற்றிகளின் படிக்கட்டுகளாக மாற்றும் மந்திரச்சொற்களுடன் அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. தோல்வியில்
    துவளாதிருக்க
    தூய தமிழில்
    தூண்டும் மணி விளக்காக
    துணை வரும் பாடல்
    அருமை அய்யா

    ReplyDelete
  3. அருமை அய்யா.......அருமை அய்யா

    ReplyDelete
  4. நம்பிக்கை கொடுக்கும் கவிதை ...

    ReplyDelete
  5. ///இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
    ஏனோ தானென பண்ணாதீர் ////எனக்கு பிடித்த வரிகள் ...

    ReplyDelete
  6. அழகுத் தமிழின் இனிமையை அள்ளி அள்ளிப் பருக அமுதசுரபியாய் தங்கள் பக்கம்.

    அருமை :)

    ReplyDelete
  7. தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
    தோன்ற வேண்டும் அதில்மாற்றம்

    அழகாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா, ஏமாற்றத்தினை எப்படி வெற்றிப் படியாக்கலாம் என்பதை உள்ளடக்கி, ஒரு தத்துவத் கவிதையினைட் தந்திருக்கிறீங்க.

    மனதில் இருத்தி, என் தோல்விகளின் போது முடிந்த வரை இதனை மீட்டிப் பார்க்க முயற்சி செய்கிறேன்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  9. தோல்வியைக்கண்டு பின்வாங்கக்கூடாதென்று
    ஐயா அருமையான கவிதையை படைத்திருக்கிறீங்கள்...
    பிரமாதமான வரிகள் அத்தனையும்...



    ஐயா என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?

    ReplyDelete
  10. ஏமாற்றத்தை முன்னேற்றமாக மாற்ற வேண்டுமெனச் சொல்லும் நல்ல கவிதை!

    ReplyDelete
  11. ஏமாற்றத்திற்கு வேண்டும் மாற்றம் என
    தங்கள் நம்பிக்கையூட்டும் கவிதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஏமாற்றம் வாழ்வில் ஏற்படும் மாற்றம்..இந்த கவிதையை படிப்பதால் கண்டிப்பாக ஏற்படும் முன்னேற்றம்.....
    rajeshnedveera

    ReplyDelete
  13. அற்புதம் ஐயா..

    தங்கள் எழுத்தின் ஆடல் கண்டு
    மகிழ்ந்தேன்..

    ஏமாற்றத்தை மாற்றமாக்கி ஏணியாக்கி
    உயர்ந்திட தாங்கள் காட்டியிருக்கும் வழி
    அருமை.

    நன்றி..

    தாங்கள் எமது தளத்திற்கும் வருகை தந்து
    ஊக்கம் தர வேண்டுகிறேன்.

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  14. வாழ்த்துரையாக கருத்துரை வழங்கிய உங்கள்
    அனைவருக்கும்
    வணக்கம்! நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
    முயன்றால் தந்திடும் முன்னேற்றம்...இந்த இரண்டு வரிகளுமே போதும் வாழ்க்கைக்கு !

    ReplyDelete