Saturday, July 9, 2011
படமும் பாடலும்
ஆடிப்பிறப் பென்றே அடடா கொழுக்கட்டை
தேடிப்படம் போட்டீர் பணியார நல்தட்டை
நாடிப் பதம்பார்த்து நற்கவிதை சுவைசேர்த்தே
பாடிமுடித் தனிப்பின பணியாரம் தருவீரா
மூடித்திறந் தவாய் மூடாது காத்திருக்க
ஓடிவந்திடுவேன் ஒருவார்த்தை சொல்லவிட
வாடிப் போவேனா வற்றிவிட என்நாவும்
வடித்தாலும் முடித்தாலும் வற்றாதென் பாவே
புலவர் சா இராமாநுசம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
naana first...
ReplyDeleteaiyaa supper...poem
kavithaiyileaye kolukkaddai saappiddamaathiri irukku........hahahaah,,,,,,,,,,,,
ReplyDeleteஆடி பிறப்பதற்கு முன்பே கவிதைக் கொழுக்கட்டை!
ReplyDeleteகவிதைப் பலகாரம் அருமையாய் சமைத்த கவிக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteநீங்கள் உணர்வுகளை மட்டுமல்ல
ReplyDeleteஉணவுகளையும் எழுதுவீர்கள்
என நிருபித்த கவிதை இது
சுவையான கவிதை ஐயா
கொழுக்கட்டையைக் கவிதையைத் தொட்டு உண்டேன்.
ReplyDeleteஆடி பிறக்க ஒரு வாரம் முன்னே ஓடிக் கொண்டு வந்து சேர்த்த வேகத்தின் பிரமிப்புடன்.
அற்புதமான கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
பாராட்டுத் தெரிவித்த அனைவருக்கும் நன்றியோடு
ReplyDeleteபலகாரத்தை செவி வழி உண்ண கவி வழி
தருவேன்
அன்புள்ள
இராமநுசம்
வணக்கம் ஐயா, ஆடிப்பிறப்பிற்கு முன்பதாகவே, கவிதையால் உளத்தை நிரப்பும் சுவை மிகு கொழுக்கட்டையினைத் தந்திருக்கிறீங்க.
ReplyDeleteஅருமையான கவி ஐயா.
கொழுக்கட்டை கவிதை பிடித்திருக்கிறது
ReplyDelete