ஆடுபுலி ஆட்டமென சொலவார் இதனை
அழகான படமாக போட்டீரதனை
நாடுகெட்டு போகாமல் தடுக்க நாமே
நாளதோறும் உழைத்துத் தாமே
பாடுபட்டுப் பொருள்தேட முயலல் நன்றே
பரவாமல் ஊழல்தான் ஒழியஇன்றே
கேடுகெட்ட அந்நிலையே வேண்டாமெனற
கொள்கையிலே என்றும்நீ உறுதியாய் இரு
யாராண்டால் நமக்கென்ன எண்ணல் கேடே
இதனாலே கெட்டத்துதான் நமது நாடே
பாராண்டான் தமிழனெ சொல்லித் தானே
பாழாக ஈழத்தை விட்டோம் வீணே
சீராண்ட அத்தமிழர் இலட்சக் கணக்கில்
செத்தாரே நமக்குள்ளே வந்த பிணக்கில்
ஊரோடு ஒத்துப்போ பிதற்றல் வீணே
உருவாகும்தனி ஈழம் உறுதியாய் இரு
புலவர் சா இராமாநுசம்
கவிஞர்கள் சபதங்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை
ReplyDeleteநிச்சயம் தனிஈழம் சத்தியமாய் உருவாகும்
அந்த இனிய நாள் உருவாக அவரவர் அளவில்
முடிந்ததைச் செய்யும் உறுதி எடுப்போம்
இந்த உறுதியும்,நம்பிக்கையும் அனைவரிடத்தும் இருப்பின் எதுவும் நடக்கும்!நன்று!
ReplyDeleteRamani said...
ReplyDeleteநன்றி இரமணி அவர்களே
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteநன்றி பித்தன் அவர்களே
புலவர் சா இராமாநுசம்
நிச்சயம் சிந்திய இரத்தத்தில் செழித்திடும் தமிழ் மண்
ReplyDeleteசந்தத்தில் இட்ட சபதம்
ReplyDeleteசகலத்தையும் வெல்லும் ஐயா
கவி அழகன்நன்றி said...
ReplyDeleteநன்றி தம்பீ
புலவர் சா இராமாநுசம்
A.R.ராஜகோபாலன் said
ReplyDeleteநன்றி சகோ நன்றி
புலவர் சா இராமாநுசம்