எண்ணில்லா புதைகுழிகள் ஈழ மண்ணில்-எம்
இதையத்தை இரணமாக்க ஆறாப் புண்ணில்
மண்ணெல்லாம் அள்ளிவந்து அதனமேல் தூவி-அதை
மேன்மேலும் கிளறிவிடும் செயலை மேவி
கண்ணில்லா சிங்கள கயவர் நாளும்-அங்கே
காட்டுகின்ற அடக்கமுறை வெறியாய் மூளும்
விண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்-வந்து
விரைவாக உமக்கேற்ற கூலி தருவர்
அற்பனுக்கு வந்திட்ட வாழ்வு தானே-இன்று
அடந்துள்ளாய் பகசேவே அழிவாய் வீணே
பொற்பனைய ஈழத்தை பொசிக்கி விட்டாய்-நீ
புற்றுக்குள் கைவிட்டு பாம்பை தொட்டாய்
கற்பனையாய் எண்ணாதே கடியும் படுவாய்-தேடி
காலன்தான் வருகின்றான் மடிந்தே விடுவாய்
சொற்பம்தான் இடைபட்ட காலம் அதுவே-என
சொலகின்ற புலவனது சாபம் இதுவே
எத்தனையோ உயிர்தன்னை பறித்தாய் நீயே-ஐ.நா
இயம்பியதோர் கணக்கதனை தாண்டும் மெய்யே
சித்தமெலாம் துயராலே பற்றி எரியும்-அந்த
சிங்களமே உன்னாலே முற்றும் அழியும்
இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும்
எதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை
புத்தமதம் பின்பற்றும் நாடா ? உமதே-அவர்
போதனையை அறிவாயா வேண்டாம் மமதே
புலவர் சா இராமாநுசம்
அத்தனையும்
ReplyDeleteஇரத்தின வரிகள் ஐயா
நின் தீந்தமிழே
அவனைக் கொல்லும்
அவன் குலம் அழிக்கும்
ராஜகோபாலன் said
ReplyDeleteநன்றி சகோ
நன்றி
இராமாநுசம்
தமிழ் வீரம் முரசு கொட்டும் கவிதை ஐயா
ReplyDeleteஒரு நாள் எல்லாம் அடங்கும்
இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும்
ReplyDeleteஎதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை//
மனதை உருக்கும் வரிகள்.
கவி அழகன் said...
ReplyDeleteநன்றி கவி அழக
இராமாநுசம்
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteநன்றி சகோதரி
புலவர் சா இராமாநுசம்
//இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும் எதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை//
ReplyDelete//சொற்பம்தான் இடைபட்ட காலம் அதுவே-என
சொலகின்ற புலவனது சாபம் இதுவே//
அருமை அருமை அனைத்து வரிகளும் எழுச்சியுடன் வந்து விழுந்துள்ளன.
புலவரின் சாபம் பலிக்கத்தான் போகிறது.
நல்லதொரு பதிவுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
இதே பொருள்பட நானும் ஒரு கவிதை சமைத்திருக்கிறேன் ஐயா.அடுத்த வாரமளவில் பதிவில் இடுகிறேன்.உங்கள் கவிதை வரிகளின் வீரம் இருக்குமா தெரியாது !
ReplyDeleteகோபாலகிருஷ்ணன் said
ReplyDeleteநன்றி ஐயா நன்றி
இராமாநுசம்
சரியான கூற்றுத் தான். கெளதம புத்தர் இருந்திருந்தால் இன்று சிங்கள பெளத்த ஆட்சி அவலட்சணம் குறித்து தற்கொலை செய்திருப்பார்.
ReplyDeleteஹேமா said...
ReplyDeleteசகோதரி
வீரம் மிகுந்த ஈழ மண்ணில்
தோன்றிய வீர மங்கை நீங்கள்.ஆகவே வீரம்
மட்டுமல்ல சாரமுள்ள கவிதையே தருவீர்கள்
ஐயமில்லை.
இராமாநுசம்
Rathi said...
ReplyDeleteநன்றி சகோதரி நன்றி
இராமாநுசம்
ஈழ மறவர்களின் பெருமைகளினையும், ஓர் புலவனது உள்ளத்து உண்ர்வுகளையும் உங்கள் கவிதை தாங்கி வந்திருக்கிறது..
ReplyDeleteவெகு விரைவில் புதிய ஒளி பிறக்க வேண்டும் என்பது தான் எல்லோரதும் அவா.