அன்னை முகமெங்கே அவள்கரமா நீதூங்க
சின்ன மலரேயென் செந்தமிழே நானேங்க
உன்னை நான்பாட உவகை எனைநாட
பொன்னின் பொலிவேநீ பொருளின் நயமேநீ
கன்னல் சாறேநீ கவிதைச் சுவையேநீ
மின்னல் நேரம்தான் மெள்ள கண்திறவாய்
என்னை மறந்தேநான் எழுதிடுவேன் எழுவாயா
இன்னல் தரமாட்டாய் ஏனென்றால் நீகுழந்தை
புலவர் சா இராமாநுசம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
//கன்னல் சாறேநீ கவிதைச் சுவையேநீ
ReplyDeleteமின்னல் நேரம்தான் மெள்ள கண்திறவாய் ///
அருமை
நல்ல கவிதை நன்றி ஐயா
குழந்தைகள் இனிமையான இன்னல் தருவார்கள்!
ReplyDeleteநல்ல கவிதை!
///உன்னை நான்பாட உவகை எனைநாட
ReplyDeleteபொன்னின் பொலிவேநீ பொருளின் நயமேநீ ///
அருமையான வார்த்தைகளை கொண்டு கோர்க்கப் பட்ட கவிதைச் சரம் அமர்க்களம் ஐயா
ரியாஸ் அஹமது said...
ReplyDeleteகாணவில்லையே எனக் கவலைப் பட்டேன்
நன்றி தம்பீ
இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteதவறாமல் வந்து கருத்துரை வழங்கும்
உங்களை வணங்கி மகிழ்கிறேன்
இராமாநுசம்
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteஉறுதியாக உங்கள் கருத்துரை வரும் என்பதை
நான் அறிவேன் சகோ
நன்றி
இராமாநுசம்
படமும் பாடலும் அருமை ஐயா.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteநன்றி சகோதரி நன்றி
இராமாநுசம்
வணக்கம் ஐயா, மரபில் தாலாட்டொன்றினைத் தந்து, நீங்கள் எழுதையில் குழந்தை எழுந்து இன்னல் தராதிருக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துப் படமும் பாடலும் பகுதியினைச் சிறப்பித்திருக்கிறீங்க. அருமை ஐயா.
ReplyDeleteநிரூபன் said...
ReplyDeleteஅலைச்சல் அதிகம் சகோ
எந்த வலைக்குப் உங்க பின்னுட்டம் தான்
நாலு, ஐந்து எண்ணிக்கையிலே முன்னுட்டமா
இருக்கு
பதிவும் போடறீங்க பதிலும் போடறீங்க
எப்படி முடியுது சகோ
இராமாநுசம்
இன்னல் தரா குழந்தைகள்.... நல்ல கவிதை ஐயா.
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said
ReplyDeleteமுதல் வருகை தந்த முத்தமிழ்வாசிக்கு
வணக்கம், நன்றி
இராமாநுசம்