Thursday, June 23, 2011

பட்டக் காலிலே படுமென் பார்


பட்டக் காலிலே படுமென் பார்
கெட்டக் குடியே கெடுமென் பார்
பழமொழி சொன்னார் அந் நாளே
பார்த்தோம் சான்றாய் இந் நாளே
மீண்டும மீண்டும ஜப்பா னில்
மிரட்டும் அதிர்வுகள பல ஊரில்
வேண்டுவோம் இயற்கைத் தாயி டமே
வேதனை செய்வதா சேயி டமே

பட்டது போதும் அவர் துயரம்
பறந்திட அங்கே பல உயிரும
கெட்டது போதும் இனி மேலும்
கெடுவது வேண்டா ஒரு நாளும்
விட்டிடு பூமித் தாயே நீ
விழுங்க திறவாய் வாயே நீ
தொட்டது அன்னவர் துலங் கட்டும
தொழில்வளம் முன்போல் விளங் கட்டும்

உழைப்பவர் அவர்போல் உல கில்லை
உண்மை முற்றிலும ஐய மில்லை
தழைக்க வேண்டும் அவர் வாழ்வே
தடுத்தால் உனக்கும அது தாழ்வே
பிழைக்க அன்னவர் வழி காட்டி
பூமித்தாயே கருணை விழி காட்டி
செழிக்கச் செய்வது உன் செயலில்
செழிப்பதும் அழிப்பதும் உன் கையில்

அணுவால் அழிந்தும் மீண்ட வரே
அவருக்கு நிகராய் உண்டெ வரே
துணிவே அவருக்குத் துணை யாமே
தொழிலில் அதுவே இணை யாமே
அணுவே இன்றவர் முன் னேற்றம
அடையச் செய்தது பெரு மாற்றம்
பணிவாய் பூமித் தாய் உன்னை
பாடி முடித்தேன பா(ர்) அன்னை

புலவர் சா இராமாநுசம்

5 comments:

  1. ஐயா இதை ஜப்பானியர் படித்தால் ....உங்களுக்கு ஜப்பானின் உயரிய விருது கொடுத்து பெருமை சேர்ப்பார் ....வரிக்கு வரி பிரமிப்பு தந்துள்ள உங்களை நன்றியுடன் தொடர்கிறேன்

    ReplyDelete
  2. எந்த அழிவிலிருந்தும் மீண்டு உயிர்த்தெழும் ஜப்பானை இயற்கை மீண்டும் மீண்டும் சோதிப்பதேன்?
    நல்ல கவிதை ஐயா!

    ReplyDelete
  3. தொட்டது அன்னவர் துலங் கட்டும
    தொழில்வளம் முன்போல் விளங் கட்டும் ///

    இராமானுசம் வேண்டுகோளல்லவா

    இயற்கை அடுத்த கணம் ஆவன செய்துவிட்டாள் போலும். நாடு பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தழுந்து விட்டதே.
    தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதற்கிணங்க யப்பானியர்களுக்கும் கவிதை.அவர்கள் சுறுசுறுப்பானவர்கள்.விரைவில் புது யப்பானிகிவிடும் பாருங்களேன் ஐயா !

    ReplyDelete
  5. துன்பத்திற்கு மேல் துன்பத்தினை அனுபவிக்கும், ஜப்பானியர்கள் மீதான நம்பிக்கையோடு கூடிய,
    இரக்கத்தின் வெளிப்பாடாக கவிதை இங்கே பிறந்திருக்கிறது.

    ReplyDelete