தாழ்ந்தாய் தமிழா தாழ்ந்தாய் நீ
வீழ்ந்தாய் தமிழா வீழ்ந்தாய் நீ
வாழ்ந்தாய் அன்று பலர் போற்ற
வாழ்கிறாய் இன்று பலர் தூற்ற
சூழ்ந்ததே உன்னை பழி பாவம்
சொன்னால் எதற்கு வீண் கோவம்
ஆழ்ந்ததே உலகில் நனிசோகம்நீ
அடிமையா வருமா இனி வேகம்
அல்லல் பட்டு ஆற்றாது அவர்
அழுகுரல் உனக்கு கேட்க லையா
கொல்லப் பட்ட உடல் தன்னை
குழியில் புதைப்பதை பார்க் லையா
சொல்லப் பட்டது மிகை யில்லை
சொன்னதே சேனல் துய ரெல்லை
உள்ளம் உண்டா இல் லையா
உண்மைத் தமிழா சொல் லையா
ஓடிஓடி தேடுகி றார் தம்
உறவினர் உடலைத் தேடு கிறார்
ஆடிப் போகுதே நம் உள்ளம்
அருவியாய் கண்ணீர் பெரு வெள்ளம்
தேடி எங்கும் தெருத் தெருவாய்
திரியும் அவர்நிலை கண் டாயா
கோடி எடுக்கவும் ஆள் இல்லை
கொள்ளி வைக்கவும் ஆள் இல்லை
வேண்டாம் தமிழா வேண்டாமே
வேதனை தீரா ஈண்டாமே
கூண்டாய் இறந்து போவோமா கை
கூலிகள் உணர சாவோ மா
மாண்டார் மானம் காத் தாரே
மற்றவர் பின்னர் தூற் றாரே
ஆண்டோம் அன்று இவ் வுலகே
அடைவோம் இன்று அவ் வுலகே
வருவீரா???? எழுவீரா?????
அன்பன்
புலவர் சா இராமாநுசம்
கண்ணீர் கடிதம் என
ReplyDeleteதலைப்பிட்டுத் துவங்கினாலும்
நமது அவல நிலையை மிகச் சரியாக
படம்பிடித்துக் காட்டினாலும்
எழுச்சி பெற அறைகூவி
முடித்திருப்பது அருமை
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
அற்புதக் கவிதை
தொடர வாழ்த்தி...அன்புடன்
அல்லல் பட்டு ஆற்றாது அவர்
ReplyDeleteஅழுகுரல் உனக்கு கேட்க லையா
கொல்லப் பட்ட உடல் தன்னை
குழியில் புதைப்பதை பார்க் லையா
மரத்துப்போன மனங்களையும்
சுயநலக் கொள்கைகளையும்
கொண்ட ஆட்சியாளர்களை
கொண்ட நாடு
நம் நாடு
தமிழர் நலம்
என்பதெல்லாம் பொய்யா
நல்ல அருமையான
கவிதை தந்தீர்கள் ஐயா
அல்லல் பட்டு ஆற்றாது அவர்
ReplyDeleteஅழுகுரல் உனக்கு கேட்க லையா
கொல்லப் பட்ட உடல் தன்னை
குழியில் புதைப்பதை பார்க் லையா
சொல்லப் பட்டது மிகை யில்லை
சொன்னதே சேனல் துய ரெல்லை
உள்ளம் உண்டா இல் லையா
உண்மைத் தமிழா சொல் லையா//
வேதனை வேதனை. சொல்முழுக்க சோகம். கண்ணீர்வந்தது கண்களில்.
வணக்கம் ஐயா,
ReplyDeleteஎப்படி இருக்கிறீங்க?
nirupan.blogger@gmail.com
இது தான் என்னுடைய மின்னஞ்சல் முகவரி,
நேரம் இருக்கும் போது என்னோடு தொடர்பு கொள்ள முடியுமா?
ஆழ்ந்ததே உலகில் நனிசோகம்நீ
ReplyDeleteஅடிமையா வருமா இனி வேகம்//
சால, உறு, கூர், களி....
இவையெல்லாம்(உரிச் சொற்கள்) இயல்பாகவே, அதுவும் இந்த வயதிலும் உங்களுக்கு நினைவில் வருகிறதே.
உங்கள் கவிதைக்கு முன்னே நாமெல்லாம் சிறு நாற்றுக்கள் ஐயா. தொடர்ந்தும் எழுதுங்கள்.
ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு வேண்டியும், தமிழ உறவுகளின் எழுச்சியினையும் எதிர்பார்த்துப் புனையப்பட்டுள்ள உங்களின் கவிதை- புரட்சிகரமான சிந்தனையினைத் தாங்கி வந்துள்ளது.
ReplyDeleteவணக்கம் ஐயா.இன்றுதான் உங்கள் பக்கம் முதன்முதலாக வருகிறேன்.இன்றே என்னைக் கலங்க வைத்துவிட்டீர்கள்.இதற்மேல் வார்த்தைகள் இல்லை இந்தக் கவிக்கு !
ReplyDeleteநேரமிருக்கும் சமயம் என் பக்கமும் வந்து வாழ்த்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.