Friday, July 1, 2011

மனித உரிமை

எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு
எங்கெனும் தேடியும் காணல்அருமை
இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம்
இறையாண்மை ஆராய பொழுதே விடியும்
மங்காது நடக்குதே மக்களவை-அங்கு
மார்தட்டி தோள்தட்டி கேட்டல் எவை
சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை
செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை

இல்லாத ஒன்றினை எதற்கு நானே-கவிதை
எழுதிட வேண்டுமா முற்றும் விணே
சொல்லாதீர் நானிதை சொன்னதாக-மீறி
சொன்னாலே வாழ்வினில் அமைதிபோக
பொல்லாத விளைவுகள் தேடிவரும்-வீண்
பொல்லாங்கு நாள்தோறும் நாடிவரும்
நல்லோரே இதுதானே மனித உரிமை-நீங்கள்
நம்பங்கள் அதுதானே எனகுப் பெருமை

புலவர் சா இராமாநுசம்

5 comments:

  1. //சிங்கார சொல்தானே மனித உரிமை//
    ஆம்.அது வெரும் சிங்காரச் சொல்லாகப் போய்விடக்கூடாது என்பதே நம் கவலை!
    நன்று!

    ReplyDelete
  2. மனித உரிமையின் உயிர்மை போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது ஐயா
    அதை உங்களின் தீந்தமிழால் சுவைக்க அமிர்தமாய் இருந்தது

    ReplyDelete
  3. இறையாண்மை ஆராய பொழுதே விடியும் //

    இயலும்வரை தேடுவோம்.

    ReplyDelete
  4. அனைவருக்கும் நன்றி
    இராமாநுசம்

    ReplyDelete
  5. பணம் பதவிக்கு அடிமையாகிறது மனிதம் மனித உரிமை !

    ReplyDelete