போனாய் எங்கே தமிழ்மணமே-எட்டிப்
பார்த்துடன் மறையும் தமிழ்மணமே
ஆனாய் என்ன அறியோமே-எங்கள்
ஆவலை அடக்க தெரியோமே
தேனாய் இனிக்க வருவாயே-பதிவை
தேடி எடுத்துத் தருவாயே
மானெனப் பாய்ந்து போவதுஏன்-வந்து
மறையும் நிலைதான் ஆவதுஏன்
எங்கே சென்றாய் சொல்வாயா-உன்
எதிரியை எதிர்த்து வெல்வாயா
இங்கே பலரும் அலைகின்றார்-தினம்
ஏங்கி ஏங்கி குலைகின்றார்
அங்கே தங்கி விடுவாயா-மனம்
அஞ்சுதே துயரம் படுவாயா
பங்கே உன்னுடன் நாள்தோறும்-வைத்த
பதிவரின் துயரை உடன்பாரும்
புலவர் சா இராமாநுசம்
இப்படி பதிவரின் நிலையை கூட கவிதையாக்க முடியும்மா ..வாழ்க உங்கள் தமிழ் ...வாழ்த்த வயதில்லை நன்றியுடன் தொடர்கிறேன் என்றும் அன்புடன்
ReplyDeleteஆஹா கவிதியாலேயே தமிழ் மனத்துக்கு வேண்டுகோள் கலக்கிறிங்க ஐயா
ReplyDeleteஆஹா...நாங்கள் தமிழ்மணத்தின்
ReplyDeleteஇடர்கள் குறித்து கவலைப் பட்டுக்கொண்டிருக்கிற நேரத்தில்
அதையும் அழகிய கவிதை ஆக்கிவிட்டீர்களே
ரொம்ப லொல்லாய் இருக்கிறது
கவிக்குரல் கேட்டாவது சீராகிறதா பார்ப்போம்
கவிதை மட்டுமல்ல சமயோசிதமும் அருமை
தமிழ்மணக்க
ReplyDeleteதமிழ்மணத்திறகு
தந்த கவிக்கு பாராட்டுக்கள்.
’தமிழ் மணம்’ காணாமல் போய் ஒரு தமிழ் மணக்கும் கவிதை பிறக்கச் செய்து விட்டதே!
ReplyDeleteதமிழ் மணம் காணாமற் போய் விட்டதே எனும் ஆதங்கத்தில் அற்புதமான ஒரு கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
ReplyDeleteபதிவர்கள் அனைவரினதும் உள்ளத்து உணர்வாக உங்கள் கவிதை வந்திருக்கிறது.
////எங்கே சென்றாய் சொல்வாயா-உன்
ReplyDeleteஎதிரியை எதிர்த்து வெல்வாயா
இங்கே பலரும் அலைகின்றார்-தினம்
ஏங்கி ஏங்கி குலைகின்றார்////
தட்டுப்படாத
தமிழ் மணத்தை காணாமல்
திக்கு தெரியாமல்
தடுமாறி நின்ற
தமிழ் பதிவர்களின்
தரப்பு வேதனையை
தமிழால்
தந்தமைக்கு
தனித்துவ நன்றி
தமிழ் அய்யாவே