Tuesday, June 28, 2011

விடுதலை வேள்வி


விடுதலை வேள்வி எதுவென்ற-பிறர்
வினவும் கேள்விக்கு மிகநன்றே
கெடுதலே அறிந்தும மெழிகுவத்தி-ஒளி
கொடுத்திட உருகும் தீயும்பத்தி
கொடுத்த படமே விடையாகும்-வேள்வி
கொண்டனர் தியாக மரபுயென்ன
தொடுத்தவர் பெற்றார் விடுதலையே-நாம்
தொடரக் காணபது கெடுதலையே
என்ன செய்கிறாய் இறைவாநீ-இன்னும்
எதற்கு இருக்கிறாய் மறைவய்நீ
பொன்னைப் பொருளை தேடுவதம்-அதை
போற்றிக் காக்க நாடுவதும்
தன்னை வளர்ப்பது பொதுவாழ்வே-என
தரமிலார் பெற்றனர் புதுவாழ்வே

புலவர் சா இராமாநுசம்

10 comments:

  1. வந்தேன் ஐயா .....தமிழ் பால் பருக ...என்றும் போலவே இன்றும் சுவை அலாதி . நன்றி நன்றி

    ReplyDelete
  2. ///என்ன செய்கிறாய் இறைவாநீ-இன்னும்
    எதற்கு இருக்கிறாய் மறைவாய் -நீ
    பொன்னைப் பொருளை தேடுவதம்-அதை
    போற்றிக் காக்க நாடுவதும்
    தன்னை வளர்ப்பது பொதுவாழ்வே-////

    அருமை அருமை

    ReplyDelete
  3. தமிழ் வார்த்தைகளின் சங்கமம்
    கவிதை வாசித்து கவிதை கற்கிறேன் ஐயா

    ReplyDelete
  4. இன்னும்
    எதற்கு இருக்கிறாய் மறைவய்நீ
    பொன்னைப் பொருளை தேடுவதம் // வார்த்தைகளின் விளையாட்டு..

    ReplyDelete
  5. கவிதை நல்லாயிருக்கு சார்

    ReplyDelete
  6. உங்கள் கவிதைகள் அனைத்தும் நேரடியாக ஆழ் மனதில் சென்று அமர்ந்து விடுகின்றன ஐயா!

    ReplyDelete
  7. புலவர் ராமாநுசம்: மோகனன்...

    மோகனன்: உள்ளேன் ஐயா..!

    ReplyDelete
  8. ///என்ன செய்கிறாய் இறைவாநீ-இன்னும்
    எதற்கு இருக்கிறாய் மறைவய்நீ //


    தமிழால்
    நல்ல பல கேள்விகளை
    வேள்வியாக்கிடும்
    உங்களுக்கு என் வந்தனம்

    ReplyDelete
  9. விடுதலை வேள்வி, காலத்திற்கேற்ற உணர்வெழுச்சி மிகு கவிதையாக இங்கே பரிணமித்துள்ளது.

    ReplyDelete
  10. ஐயா என்னைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஒரு தடவை சொன்னீங்க, என் மின்னஞ்சலும் தந்தேன், இன்னும் தொடர்பு கொள்ளலையே, ஏன்?

    nirupan.blogger@gmail.com

    ReplyDelete