வருவாய் தழிழா வருவாய் நீயே
சீரணி அரங்கம் மெரினா நோக்கி
வருவாய் தழிழா வருவாய் நீயே
பேரணி யாக நீரணி வகுத்து
எரியும் மெழுகு வத்தியை ஏந்தி
தேதியும் இருபத்தி ஆறா மின்றே
நீதியில் உலகும் அறிந்திட நன்றே
வருவாய் தழிழா வருவாய் நீயே
தன்னுயிர் ஈந்த ஈழரின் நினைவாய்
தமிழகம் இழந்த மீனவர் நினைவாய்
அஞ்சலி சொய்ய அனைவரும் வாரீர்
வஞ்சக சிங்களர் வடமட கையர்
கொஞ்மும் இரக்கம் இல்லாக் கொடியர்
நெஞ்சமும் அஞ்சவர் நிம்மதி குலைய
அலைகடல் ஒரம் அலையென திரண்டு
வருவாய் தழிழா வருவாய் நீயே
நீந்தும் தூரம் ஈழ மிருந்தும்
நீதியில் கொலைகள் நடப்பன அறிந்தும்
ஏதிலியாக இருந் தவர் நாமே
இறந்தோர் தமக்கு அஞ்சலி தாமே
செய்திட அணியென சேர்வோம் ஆமே
கையில் ஊமையன் கதையாய்க் காலம்
கடந்ததை மாற்றி போற்றிட ஞாலம்
வருவாய் தமிழா வருவாய் நீயே
எஞ்சிய ஈழரும் இன்னமும் அங்கே
அஞ்சியே வாழின் நிம்மதி எங்கே
அச்சம் தவிர்ப்போம் ஆணவம் அழிப்போம்
துச்சம் என்றே துரத்தி ஒழிப்போம்
ஒற்றுமை என்றே ஓரணி நின்றே
பெற்றிட வேண்டும் ஈழமும் நன்றே
ஏற்றிய மெழுகின் எரியுடன் இன்றே
வருவாய் தமிழா வருவாய் நீயே
//வருவாய் தமிழா வருவாய் நீயே//
ReplyDeleteஅனைத்தும் உத்வேகம் கொடுக்கும் உன்னத வரிகள் !
அலைகடலென திரண்டு வாரீர் தமிழர்களே.......
ஐயா அனைத்தும் எழுச்சி தரக்கூடியதும்
ReplyDeleteஆற்றாமையை வெளிப்படுத்தியதுமான அற்புதமான வரிகள்....
பிரமாதம்
தன்னுயிர் ஈந்த ஈழரின் நினைவாய்
ReplyDeleteதமிழகம் இழந்த மீனவர் நினைவாய்
நெஞ்சு கனக்கும் வரிகள் ஐயா
நீந்தும் தூரம் ஈழ மிருந்தும்
ReplyDeleteநீதியில் கொலைகள் நடப்பன அறிந்தும்
கண்கள் கனக்கிறது
இந்தியாவுடன்
சாகடிக்கும் போது தான் வரவில்லை சரி
எண்டா எண்ட சாவு வீட்டுக்கு கூட நீ வரவில்லை என்று உரிமையுடன் சண்டை போட தோன்றுகின்றது
எஞ்சிய ஈழரும் இன்னமும் அங்கே
ReplyDeleteஅஞ்சியே வாழின் நிம்மதி எங்கே
அனுபவிக்கிறோம் இன்னமும்
ஈனவன் சிங்களன் இங்குக் கடலாடும்
ReplyDeleteமீனவன் உயிர்மாள வீழ்த்தினான்-மானமிலா
இந்திய மாப்படை ஈதுகண்டுங் காணாது
குந்தி இருத்தல் கொடிது!
ஈழத்தமிழர்களில் இன்னல்களை எடுத்துரைத்து அனைத்துத் தமிழர்களும் அறியும் வண்ணம் அழகாக இயற்றப்பட்டுள்ள அருமையான கவிதை.
ReplyDeleteமெழுகுவர்த்திகள் நன்கு சுடர் விட்டு எறிய வாழ்த்துக்கள்.
வெளி மாவட்டத்தில் இருந்தாலும்
ReplyDeleteஎங்கள் நினைவுகள் எல்லாம்
சென்னையில் இந்த நிகழ்வை நினைத்தே இருக்கும்
நெகிழ்ச்சியான கவிதை
கவிதையை படித்த சென்னைவாசி எவரும்
நிச்சயம் வாராது இருக்க மாட்டர்கள்
உங்கள் இன உணர்வுக்கும் மன உணர்வுக்கும் நன்றி ஐயா.இந்தவார்த்தை தேவையில்லை
ReplyDeleteஎன்றாலும் வேறு வார்த்தை என்னிடம் இல்லை !
உணர்வெழுச்சியோடு, மக்களிற்கு விழிப்புணர்வினையும் கொடுத்து, அஞ்சலி நிகழ்விற்கு வருகை தரச் சொல்லும் அறை கூவற் கவிதை அருமையாக இருக்கிறது.
ReplyDeleteஅனைவருக்கும்
ReplyDeleteநன்றி
புலவர் சா இராமாநுசம்